50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி! வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்!

|

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வீடியோ பதிவிடும் பயனரா நீங்கள்? வட்டார மொழிகளில் செயலியின் உள்ளடகம் இருப்பதை விரும்புபவரா நீங்கள்? அப்படியானால் 50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வரும் இந்த செயலியை நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்.

விட்ஸ்டேட்டஸ்

விட்ஸ்டேட்டஸ்

விட்ஸ்டேட்டஸ் (VidStatus) என்று அழைக்கப்படும் இந்த செயலி, டிக்டாக் செயலி போன்றே செயல்படுகிறது. பயனர்கள் இந்த செயலியை 15 இந்திய மொழியுடன் கொண்ட வட்டார மொழி தளத்தில் செயல்படக்கூடியது இதன் தனிச் சிறப்பு. குறிப்பாக வாட்ஸ் அப்பை வெவ்வேறு வட்டார மொழிகளில் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது
சேவையளிக்கிறது.

1.62 மில்லியன் பயனர்கள்

1.62 மில்லியன் பயனர்கள்

சிமிலர்வெப் என்ற நிறுவனத்தின் அறிக்கைப்படி, இந்தியாவில் இந்த செயலியை சுமார் 1.62 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து இதுவரை இந்த விட்ஸ்டேட்டஸ் செயலியை சுமார் 50 மில்லியன் பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்புவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வீடியோ பதிவிறக்கம்

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வீடியோ பதிவிறக்கம்

இந்த செயலியைக் கொண்டு வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வீடியோ பதிவிறக்கம் செய்யலாம், வீடியோ பதிவுகளைப் பார்க்கலாம் மற்றும் இத்துடன் உங்களுக்குப் பிடித்த வீடியோவை எடிட் செய்துகொள்ளும் சேவையையும் இந்தச் செயலி உங்களுக்கு வழங்குகிறது.

சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளம் போலவே உங்களுக்குப் பிடித்த பயனரை பின் தொடரலாம், சாட் செய்யலாம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பகிர்ந்துகொள்ளலாம். வீடியோவை எடிட் செய்வதற்கு எடிட் டூல்களும் வழங்கப்பட்டுள்ளது.

2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.! அதிபர் புடின் அறிவிப்பு.!2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.! அதிபர் புடின் அறிவிப்பு.!

மேஜிக் எடிட்டர்

மேஜிக் எடிட்டர்

லிரிக்ஸ் வீடியோ', 'மேஜிக் எடிட்டர்' என்ற இரண்டு வீடியோ எடிட் டூல்கள் இதில் உள்ளது, இதன் மூலம் பயனர் தீம், ஸ்டிக்கர், இசை, இமோஜி, எழுத்துக்கள் போன்றவற்றை இனைத்து வீடியோ பாடல் உருவாக்கிக்கொள்ளலாம். மேஜிக் எடிட்டர்' என்ற ஒரு சூப்பர் அம்சமும் இதில் உள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி பயனர் வருவாய் ஈட்டவும் முடியும் என்பதும் கூடுதல் சிறப்பு.

Most Read Articles
Best Mobiles in India

English summary
VidStatus is India’s best free status downloader app to edit, watch, download, and share : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X