Home
Apps

தப்பு பண்ணிடீங்க சிவாஜி.. Google Pay + PhonePe இரண்டிலும் ஒரே பேங்க் அக்கவுண்ட்டை லிங்க் பண்ணி இருக்கீங்களா?

நீங்கள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களை (UPI Apps) பயன்படுத்தினால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. பல பயனர்கள் வசதிக்காக ஒரே வங்கி கணக்கில் பல யுபிஐ ஆப்களை இணைக்கிறார்கள்.

ஆனால் யுபிஐ-க்காக மெயின் அக்கவுண்ட் அல்லது சம்பள அக்கவுண்ட்டை பயன்படுத்தாமல், பல யுபிஐ ஆப்களுடன் அதை லிங்க் செய்யாமல்.. யுபிஐ-க்கென மட்டும் ஒரு தனி வங்கி கணக்கை பயன்படுத்துவது தான் நல்லது. ஏனெனில் எல்லாவற்றிற்கும் ஒரே பிரதான வங்கி கணக்கை பயன்படுத்துவது ஆபத்தானது. ஏதேனும் மோசடி, தவறு, அல்லது தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டால், உங்கள் பணம் முழுவதும் பாதிக்கப்படலாம். யுபிஐ-க்கான ஒரு தனி கணக்கு உங்களுக்கு கீழ்வரும் பல வழிகளில் உதவலாம்:

GPay + PhonePe.. ஒரே பேங்க் அக்கவுண்ட்டை லிங்க் பண்ணி இருக்கீங்களா?

1. உங்கள் மெயின் சேவிங்ஸ் பாதுகாப்பாக இருக்கும்: யுபிஐ பேமண்ட்களுக்கு ஒரு தனி வங்கி கணக்கை பயன்படுத்துங்கள். இது உங்கள் பிரதான சம்பள அல்லது சேமிப்பு கணக்கை மோசடி அபாயங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

2. மோசடி ஏற்பட்டால் ஏற்படும் இழப்பை குறைக்கவும்: உங்கள் யுபிஐ கணக்கில் ஒரு சிறிய தொகையை மட்டும் வைத்திருங்கள். யாராவது உங்களை ஏமாற்றினால், அந்த வரையறுக்கப்பட்ட இருப்பு மட்டுமே ஆபத்தில் இருக்கலாம்.

3. செலவினங்களில் சிறந்த கட்டுப்பாடு கிடைக்கும்: ஒவ்வொரு மாதமும் உங்கள் யுபிஐ கணக்கிற்கு ஒரு நிலையான தொகையை மாற்றவும். இது உங்கள் தினசரி செலவுகளை எளிதாக கட்டுப்படுத்த உதவும்.

4. தெளிவான வங்கி அறிக்கை: சிறிய சிறிய யுபிஐ பேமண்ட்கள் உங்கள் பிரதான வங்கி அறிக்கையை குழப்பமடைய செய்யலாம். ஒரு தனி கணக்கு உங்கள் சேமிப்பு கணக்கு அறிக்கையை தெளிவாகவும் எளிமையாகவும் வைத்திருக்கும்.

5. எளிதான பட்ஜெட் கண்காணிப்பு: யுபிஐ-க்கு மட்டும் ஒரு கணக்கு இருப்பதால், உணவு, பயணம், ஷாப்பிங் மற்றும் கட்டணங்களுக்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள் என்பதை விரைவாக சரிபார்க்கலாம்.

6. வங்கி சர்வர் சிக்கல்களின் போது பேக்கப்: சில நேரங்களில் வங்கி சர்வர் பிரச்சனைகள் காரணமாக பேமண்ட்கள் தோல்வியடையும். மற்றொரு கணக்கு வைத்திருப்பது அவசர பேமண்ட்களுக்கு ஒரு பேக்கப் விருப்பத்தை வழங்குகிறது.

7. யுபிஐ அக்கவுண்ட்டை திறப்பது எளிது: பல வங்கிகளில் நீங்கள்ஸீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டை திறக்கலாம். சில வங்கிகள் வீடியோ கேஒய்சி மூலம் வீட்டிலிருந்தே கணக்கை திறக்கவும் அனுமதிக்கின்றன.

கடைசியாக மெயின் அக்கவுண்ட்டை எல்லா இடங்களிலும் இணைப்பதை தவிர்க்கவும்: யுபிஐ ஆப்கள், க்யூஆர் குறியீடுகள் மற்றும் ஆன்லைன் பேமண்ட்கள் தினமும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே உங்கள் பிரதான வங்கி கணக்கை ஒவ்வொரு தளத்துடனும் இணைக்காமல் இருப்பது பாதுகாப்பானது.

இந்தியாவில் யுபிஐ சேவை எப்போது தொடங்கியது? யுபிஐ முதன்முதலில், 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று என்பிசிஐ (NPCI) ஆல் சில வங்கிகளுடன் சோதனை செய்யப்பட்டது (இதை ஒரு முன்னோட்ட வெளியீடு என்று கூறலாம்). பின்னர் 2016-ல், இது பொதுமக்களுக்காக முழுமையாக வெளியிடப்பட்டது.

யுபிஐ சேவைக்கு முன்பு, பணம் அனுப்புவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. இந்திய மக்கள் - பேங்க் அக்கவுண்ட் நம்பர், ஐ எப்எஸ்சி கோட் (IFSC Code) மற்றும் கிளை பெயர் (Branch Name) போன்ற பல விவரங்களை உள்ளிட வேண்டியிருந்தது. யுபிஐ எல்லாவற்றையும் வேகமாகவும் எளிதாகவும் ஆக்கியது. சரி இந்தியாவின் முதல் யுபிஐ ஆப் எது?

நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பதை பொறுத்து, இரண்டு சரியான பதில்கள் இருப்பதால், இதற்கான பதில் சற்று சுவாரஸ்யமானது. அதாவது இந்தியாவில் அறிமுகமான முதல் தனியார் யுபிஐ ஆப்பும் உள்ளது. இந்தியாவில் அறிமுகமான முதல் அரசாங்க யுபிஐ ஆப்பும் உள்ளது. இந்தியாவில் அறிமுகமான முதல் தனியார் யுபிஐ ஆப் - போன்பே (PhonePe) ஆகும். போன்பே தான் இந்தியாவின் முதல் மூன்றாம் தரப்பு (தனியார்) யுபிஐ ஆப் ஆக கருதப்படுகிறது.

இது ஆகஸ்ட் 2016-ல் யெஸ் வங்கியுடன் இணைந்து தொடங்கப்பட்டது. இது பயனர்கள் ஆப்பை பதிவிறக்கம் செய்து, யுபிஐ மூலம் எளிதாக பணம் செலுத்த அனுமதித்தது. அந்த நேரத்தில், இது இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை நோக்கிய ஒரு பெரிய படியாக இருந்தது. இந்தியாவில் அறிமுகமான முதல் அரசாங்க யுபிஐ ஆப் - பீம் (BHIM) ஆகும். இது 30 டிசம்பர் 2016 அன்று நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

Best Mobiles in India

English summary
Using UPI Linked Main Salary Account in Google Pay PhonePe Here is Why Its Dangerous To Your Money
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X