விபத்தில் மூழ்கிய கப்பலை கண்டறிய புதிய தொழில்நுட்பம்.!

கடந்த பல நூற்றாண்டுகளாக போர், புயல், பனிப்பாறை மற்றும் கடற்கொள்ளையர்கள் என பல்வேறு காரணங்களால், பல கப்பல்கள் தங்களின் கதைகள் மற்றும் இரகசியங்களையும் சேர்த்தே கடலில் மூழ்கியுள்ளன.

|

உலகம் முழுவதும் கடலுக்கடியில் உள்ள கல்லறைத்தோட்டங்களில் 3மில்லியனுக்கும் அதிகமான விபத்தில் மூழ்கிய கப்பல்கள் கிடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 1000க்கும் மேற்பட்டவை ஐரோப்பாவின் ஸ்வல்பார்டு என்ற இடத்தை சுற்றி உள்ளன. ஒவ்வொரு மூழ்கிய கப்பலும் அதற்கே உரித்தான தனித்துவமான கதைகளை கொண்டுள்ளன. தற்போது புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எளிதில் அடையாளம் காணலாம்.

விபத்தில் மூழ்கிய கப்பலை கண்டறிய புதிய தொழில்நுட்பம்.!

கடந்த பல நூற்றாண்டுகளாக போர், புயல், பனிப்பாறை மற்றும் கடற்கொள்ளையர்கள் என பல்வேறு காரணங்களால், பல கப்பல்கள் தங்களின் கதைகள் மற்றும் இரகசியங்களையும் சேர்த்தே கடலில் மூழ்கியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கடல்வாழ் உயிரினங்களை தவிர வேறு யாராலும் அணுக முடியாத ஆழத்தில் உள்ளன.

"உலகிலுள்ள கடல்கள் மிகப்பெரிய அருங்காட்சியககங்களை போல" எனக்கூறும் கடல் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஓவிண்ட் ஓடேகார்ட்,சமீபத்தில் "கடல் தொல்பொருள் ஆராய்ச்சியில் தன்னாட்சி செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளை நோக்கி" எனும் தனது விளக்கவுரையை வெளியிட்டார்.

விபத்தில் மூழ்கிய கப்பலை கண்டறிய புதிய தொழில்நுட்பம்.!

"கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் அறபுதமானவை. நீச்சல் வீரரால் கடலில் 30 மீட்டர் ஆழம் வரை மட்டுமே செல்லக்கூடிய நிலையில், பெரும்பாலான உடைந்த கப்பல்கள் அதைவிட ஆழத்தில் உள்ளன. நீருக்கடியில் செயல்படும் ரோபோட்கள், சென்சார்கள், இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள், கடலுக்கடியில் ஆழத்தில் என்ன உள்ளது என்பதை முழுவதுமாக அறிவதை சாத்தியமாக்கியுள்ளன" என்கிறார் ஓவிண்ட்.
விபத்தில் மூழ்கிய கப்பலை கண்டறிய புதிய தொழில்நுட்பம்.!
ஹோலி கிரைல்-க்கான தேடல்
குறிப்பாக ஸ்வேல்பார்டு மற்றும் கீரின்லாந்துக்கு இடையில் கடலில் மயக்கம் வரச்செய்யும் வகையில் கப்பலுக்கான கல்லறைத்தோட்டமே உள்ளது. அங்குமட்டும் 1000 மூழ்கிய கப்பல்கள் உள்ள நிலையில், ஸ்மேரின்பெர்க் ப்ஜோர்டு என்ற இடத்தில் மட்டும் 17 கப்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார் ஓவிண்ட். இவரின் முக்கிய நோக்கமே இந்த பகுதிக்காக ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்துவது தான்.

மகத்தான நீருக்கு அடியில் பயன்படும் தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்கள்
ஆராய்ச்சியாளர்கள் தற்போது நீருக்கடியில் செயல்படும் ரோபோடிக்ஸ் மற்றும் ஜாய் ஸ்டிக்ஸ் பயன்படுத்தி நீருக்கடியில் செய்யவேண்டிய செயல்பாடுகளை மிகத்துல்லியமாக செய்கின்றனர். இந்த கட்டுப்பாட்டு அமைப்புகள் மேம்பட்டவையாகவும், திறன்மிகுந்தவையாகவும் உள்ளன மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும அதிசக்திவாய்ந்த கணிணிகள், ரோபோட்களை பயன்படுத்தி மனித உதவியின்றி பல சூழ்நிலைகளை மதிப்பிடுகின்றன.

விபத்தில் மூழ்கிய கப்பலை கண்டறிய புதிய தொழில்நுட்பம்.!
ஸ்மார்ட் சென்சார் தொழில்நுட்பம்
சின்தெடிக் அபெர்சர் சோனார் தொழில்நுட்பம், அண்டர்வாட்டர் ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜர், ஸ்டீரியோ கேமரா என்ற 3 சென்சார்கள் மூலம், நீருக்கடியில் இருக்கும் கப்பல்களை கண்டறிந்து, தானகவே தரவுகளை சேகரித்து ஆராய முடியும். அந்த ஆய்வுகளின் அடிப்படையில், ஆய்வு நடத்துவதற்கும், மூழ்கியதற்கான காரணத்தை கண்டறியவும் அதிக நேரம் தேவைப்படுமா அல்லது புதிய இடங்களை ஆராயலாமா என்பதை ரோபோட் முடிவுசெய்யும்.
Best Mobiles in India

English summary
Using New Technology to Find Shipwrecks: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X