Home
Apps

வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிண்டர் எல்லாமே இரண்டா யூஸ் பண்ணலாம்.! எப்படினு தெரியுமா?

இரண்டு வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்டை பயன்படுத்த விரும்புபவரா நீங்கள், பேஸ்புக் அக்கௌன்ட் கூட உங்களுக்கு இரண்டாகப் பயன்படுத்த எண்ணம் இருக்கிறதா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஒரு ஸ்மார்ட்போனில் எப்படி இரண்டு வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர், டிண்டர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.

டூயல் ஆப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்

டூயல் ஆப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்

லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் இரண்டு அக்கௌன்ட்களுக்கான நம்பர்களை எளிதில் டைப் செய்து, லாகின் செய்து, அக்கௌன்ட்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் ஸ்மார்ட்போனில் அப்படியான விஷயம் சற்று கடினமான ஒன்று தான். நமது ஸ்மார்ட்போனில் ஒரு நேரத்தில் ஒரு அக்கௌன்ட்டை மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஆப் டெலீட் செய்ய இனி அவசியம் இல்லை

ஆப் டெலீட் செய்ய இனி அவசியம் இல்லை

அப்படி உங்களுக்கு வேறு ஒரு எண் கொண்ட அக்கௌன்ட்டை பயன்படுத்த விரும்பினால், வாட்ஸ் ஆப் அல்லது பேஸ்புக் எதுவாக இருந்தாலும் அந்த செயலியில் நீங்கள் முன்பு பயன்படுத்திய எண்ணை டெலீட் செய்துவிட்டு, அதிலிருந்த டேட்டாக்களையும் டெலீட் செய்தபின்னரே இன்னொரு எண்ணின் அக்கௌன்ட்டை பயன்படுத்த முடியும்.

சிறந்த பேரலெல் செயலிகள்

சிறந்த பேரலெல் செயலிகள்

இதற்குத் தீர்வாகத் தான் கூகுள் பிளே ஸ்டோரில் பல பேரலெல் செயலிகள் இருக்கிறது. இந்த செயலிகள் உங்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு எண் கொண்ட வெவ்வேறு அக்கௌன்ட்களை ஒரே மொபைலில் எளிதாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்குகிறது. சிறந்த 5 பேரலெல் ஆப் செயலிகளின் பட்டியலை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். வேண்டிய செயலியை நீங்களே படித்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

1. பேரலெல் ஸ்பேஸ் (Parallel Space)

1. பேரலெல் ஸ்பேஸ் (Parallel Space)

பேரலெல் ஸ்பேஸ் என்ற இந்த செயலி தான் அதிகளவில் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி உங்களுக்கு இரண்டு வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிண்டர் அக்கௌன்ட்களை ஒரே மொபைலில் பயன்படுத்த அனுமதி வழங்குகிறது.

2. 2அக்கௌன்ட்ஸ் (2Accounts)

2. 2அக்கௌன்ட்ஸ் (2Accounts)

இந்த செயலி உங்களுக்குப் பல வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிண்டர் அக்கௌன்ட்களை ஒரே மொபைலில் பயன்படுத்த அனுமதி வழங்குகிறது. அதுமட்டுமின்றி கூகுள் பிளே கேம்ஸ் கூட உங்களால் இதில் இரண்டு அல்லது மூன்று அக்கௌன்டாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது சிறப்பு.

3. பேரலெல் யூ (Parallel You)

3. பேரலெல் யூ (Parallel You)

பிளே ஸ்டோரில் உள்ள குறிப்பிட்ட சில நல்ல செயலிகளில் இதுவும் ஒன்று. இந்த செயலியும் உங்களுக்கு வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிண்டர் போன்ற அக்கௌன்ட்களுக்கு பேரலெல் தளத்தை உருவாக்கித்தருகிறது.

4. மல்டி (Multi)

4. மல்டி (Multi)

இந்த செயலி எளிதில் உங்களின் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிண்டர் அக்கௌன்ட்களை குளோனிங் செய்துவிடுகிறது. நீங்கள் பயன்படுத்தும் ஆப்களுக்கு தனிநபர் லாக்கிங் சேவையையும் வழங்குகிறது என்பது தான், இந்த செயலியின் தனிச்சிறப்பு.

5. சூப்பர் குளோன் (Super Clone)

5. சூப்பர் குளோன் (Super Clone)

இந்த செயலி உங்கள் செயலிகளுக்கான பேரலெல் தளத்தை உருவாக்கித் தருவதுடன், உங்கள் மொபைல் இல் உள்ள செயலி ஐகான்களின் தோற்றத்தை கஸ்டமைஸ் செய்வதற்கான கூடுதல் பயன்பாட்டையும் வழங்குகிறது. இந்த பட்டியலில் உங்களுக்கு பிடித்தமான செயலியைத் தேர்வு செய்து, எல்லா செயலியையும் டபுள் டபுளாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
These 5 Apps Will Allow You To Use Dual Accounts Easily : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X