ஏப்ரல் 17: பிரிட்சோ நிறுவனத்தின் புதுமையான ஃபோன்கள் அறிமுகம்.!
நொய்டா நகரை பிறப்பிடமாக கொண்ட இந்நிறுவனம், இந்த மாதம் 17 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு ஊடகத் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நொய்டா நகரை பிறப்பிடமாக கொண்ட இந்நிறுவனம், இந்த மாதம் 17 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு ஊடகத் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அடுத்துவரவுள்ள ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன பிரிட்சோ கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டேட், இந்த மாதம் 17 ஆம் தேதி ஒரு கூட்டம் 'புதுமையான அம்சங்களைக் கொண்ட ஃபோன்களை' இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. நொய்டா நகரை தனது பிறப்பிடமாக கொண்ட இந்நிறுவனம், இந்த மாதம் 17 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு ஊடகத் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் அடுத்துவரவுள்ள இந்த ஃபோன்களைக் குறித்து பெரியளவில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில், வெளியிட உள்ள ஃபோன்கள், ஐவிவிஓ சீரிஸின் கீழ் அமைந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன இணையதளத்தில் தற்போது பல்வேறு அம்சங்களைக் கொண்ட ஃபோன்களின் படங்கள் வெளியிடப்பட்டு, அடுத்துவரவுள்ள தயாரிப்புகளைக் குறித்த சில வெளியோட்டமான காரியங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள சில முக்கியமான அம்சங்களைக் குறித்து பார்க்கும் போது, ஓடிஜி செயல்பாட்டுடன் கூடிய ஒரு கூடுதல் பேட்டரி திறனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஃபோனில் பெரிய திரையுடன் சில மிரட்டக் கூடிய அம்சங்களும் இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த ஃபோனில் மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி, 32ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்யக்கூடிய தன்மை காணப்படுகிறது.

இது தவிர, இந்த ஃபோனில் செல்ஃபீ கேமரா மற்றும் வயர்லெஸ் எஃப்எம் ஆகியவை காணப்படலாம் என்று தெரிகிறது. மேலும், மல்டிமீடியா பகுதியை பொறுத்த வரை, இந்த ஃபோனில் ஆடியோ பிளேயர், வீடியோ பிளேயர் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜெக் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
இது குறித்து த எக்னாமிக் டைம்ஸில் வெளியான ஒரு செய்தியில், தனது தயாரிப்புகளைப் பெறுவதற்கான வசதி மற்றும் மேம்பாட்டை அமைக்கும் வகையில், இந்தாண்டு ரூ.100 கோடியை முதலீடு செய்ய பிரிட்சோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜாவா அடிப்படையில் அமைந்த ஐவிவிஓ என்ற ஆப்ரேட்டிங் அமைப்பை இந்த பிராண்டு அமைத்துள்ளதால், இது மூன்றாம் தட்டு மற்றும் கிராமப்புற இந்தியாவிற்கு ஏற்றதாக அமைந்திருக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications