யூனியன் பட்ஜெட் 2022 அப்டேட்டுகள்: இருக்கவே இருக்கு மொபைல் ஆப்.!

|

இப்போது வரும் புதிய புதிய ஆப் வசதிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இதுபோன்ற ஆப் வசதிகள் நமது தினசரி வேலைகளை எளிமையாக்குகிறது. வரும் நிதியாண்டுக்கான (2022- 2023) மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்யவுள்ளார். அதேபோல் வழக்கமாக பட்ஜெட்டில் ஏதாவது ஒரு புதுமை இருந்து வருகின்றது.

யூனியன் பட்ஜெட் 2022 அப்டேட்டுகள்: இருக்கவே இருக்கு மொபைல் ஆப்.!

அதன்படி நடப்பு ஆண்டில் யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் (Union Budget Mobile App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய அரசு மத்திய பட்ஜெட்டை காகிதம் இல்லாமல் வெளியிடுவது இதுவே முதல் முறை. பட்ஜெட் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் மற்றும் எம்.பி.க்கள் சிரமமின்றி அணுகுவதற்காக இந்த ஆப் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆப் வசதியை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஆண்டில் டிஜிட்டல் பார்மேட்டில் ஆப்பில் பட்ஜெட் ஆவணங்களை எளிதில் அணுக முடியும். மேலும் வரவிருக்கும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த செயல்முறை முடிந்த பின்னர் மத்திய பட்ஜெட் 2022 - 23ல் மொபைல் ஆப்பில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

யூனியன் பட்ஜெட் 2022 அப்டேட்டுகள்: இருக்கவே இருக்கு மொபைல் ஆப்.!

இந்த ஆப் வசதியை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பார்த்து கொள்ளும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு நிதியமைச்சகத்தின் அறிக்கையின் படி (https://www.indiabudget.gov.in/)இந்த ஆப்பினை இந்தியா பட்ஜெட்
இணையத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இணையதளங்களிலும் பொதுமக்கள் பட்ஜெட் சம்பந்தப்பட்ட தகவல்களை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவந்த தகவலின்படி, இந்த பட்ஜெட் ஆப்பில் பட்ஜெட் உரை, வருடாந்திர அறிக்கை,மானியங்களுக்கான கோரிக்கை, நிதி மசோதா போன்ற 14 அம்சங்களை அணுக முடியும் என்றும், பின்பு இந்த ஆவணங்கள் பிடிஎஃப் பார்மேட்டில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியை (ஆப்) எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

யூனியன் பட்ஜெட் 2022 அப்டேட்டுகள்: இருக்கவே இருக்கு மொபைல் ஆப்.!

வழிமுறை-1
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டோர்-ஐ திறக்கவும்.

வழிமுறை-2
அடுத்து யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் வசதியை தேடவும்.

வழிமுறை-3
குறிப்பாக Union Budget app by NIC e-gov mobile apps என்பதை தேர்வு செய்து, இன்ஸ்டால் செய்யவும்.

குறிப்பாக இந்த ஆப் வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதேபோல்புதுமையான விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தாலும், பட்ஜெட்டுக்கு முந்தைய பாரம்பரிய நிகழ்வான அல்வா கிண்டுதல் நிகழ்ச்சியானது, இந்த ஆண்டு ஓமிக்ரான் அச்சம் காரணமாக நிறுத்தப்படுள்ளது. மேலும் மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் முதல் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வரை மத்திய பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Union Budget 2022 Updates: Introducing the Union Budget Mobile App: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X