பெண்கள் பாதுகாப்பிற்கு பிரத்தியேக செயலி உருவாக்க உபெர் மற்றும் டெல்லி போலீஸ் முயற்சி

|

பிரபல கால் டாக்சி சேவை வழங்கும் நிறுவனமான உபெர் டெல்லி போலீசுடன் இணைந்து பெண்கள் பாதுகாப்பிற்கென பிரத்தியேக செயலியை உருவாக்க இருக்கின்றன.

பெண்கள் பாதுகாப்பிற்கு பிரத்தியேக செயலி உருவாக்க உபெர் மற்றும் டெல்லி

உபெர் மற்றும் டெல்லி போலீஸ் இணைந்து பெண்கள் பாதுகாப்பிற்கான செயலியை உருவாக்க இருக்கின்றன. இந்த ஒப்பந்தம் மூலம் ஹிம்மத் லட்ச கணக்கான பெண்களுக்கு பயன்தரக்கூடியதாக இருக்கும். தொழில்நுட்ப நிறுவனத்துடன் டெல்லி போலீஸ் இணைந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த கூட்டணி டெல்லி அரசாங்கத்திற்கு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒன்றாக இருக்கும். ஜனவரி 2015-ம் ஆண்டு துவங்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 90,000 பேர் ஹிம்மத் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர்.

மேலும் தற்சமயம் வரை 31,000 பேர் செயலியில் பதிவு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இனி இந்த செயலியை விரிவாக்கம் செய்து மேலும் பல பெண்களுக்கு கிடைக்கச் செய்யும் முயற்சிகளில் உபெர் ஈடுபட்டு வருகிறது.

இந்தியா : வோடபோன் வழங்கும் புதிய அதிரடி ஆபர்.!இந்தியா : வோடபோன் வழங்கும் புதிய அதிரடி ஆபர்.!

இந்த கூட்டணியின் முதல் கட்டமாக உபெர் நிறுவனம் ஹிம்மத் செயலியை நிரந்தர பதிப்பாக உருவாக்கி, இதனை பிளே ஸ்டோரில் இருந்து அனைவருக்கும் டவுன்லோடு செய்யக் கூடியதாய் மாற்றப்படுகிறது. அடுத்து உபெர் செயலியில் இருந்தபடியே ஹிம்மத் செயலியை பயன்படுத்தும் வசதி மற்றும் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டமாக இரண்டு செயலிகளுக்கும் API இண்டகிரேஷன் வழங்கப்பட இருக்கிறது.

தொழில்நுட்பம் மிகவும் கச்சிதமான பாதுகாப்பை வழங்கும் உளவு நெட்வொர்க் போன்று செயல்படுவதோடு ஹிம்மத் செயலி ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உடனடி தீர்வு காண வழி செய்யும் ஒன்றாக இருக்கிறது. உபெர் உடனான இந்த கூட்டணி டெல்லியில் உள்ள பெண் ஓட்டுநர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்துடன் உபெர் செயலியில் உள்ள எமர்ஜென்சி பட்டன், அவசர காலங்களில் ஒரே கிளிக் மூலம் போலீஸ் உதவி எண்ணிற்கு அழைக்க முடியும். என காவல் துறை ஆணையர் சஞ்சய் பனிவால் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான பிரச்சனைகளில் இருந்து தற்காத்து கொள்ள பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு வழங்கப்படுகின்றன. காவல் துறை குற்றப்பிரிவு சார்பில் இதற்கென பிரத்தியேக அவசர எண் 1091 செயல்பாட்டில் இருந்து வருகிறது.

மேலும் சைபர் சார்ந்த குற்றங்களுக்கென 1096 என்ற எண் செயல்பாட்டில் இருக்கிறது. ஹிம்மத் செயலி பெண்கள் பாதுகாப்பிற்கான மற்றொரு கூடுதல் அம்சம் ஆகும் என டெல்லி காவல் துறை குற்றப்பிரிவு ஆணையர் மதுர் வெர்மா தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
This is Delhi Police’s first partnership with any technology company

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X