இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் உபேர் லைட் செயலி.!

எளிதான வாகன பயணத்திற்கு உதவும் வகையில் உலகம் முழுவதும் இயங்கி வரும் நிறுவனமான உபேர் நிறுவனம் தற்போது இந்தியாவில் உபேர் லைட் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

|

எளிதான வாகன பயணத்திற்கு உதவும் வகையில் உலகம் முழுவதும் இயங்கி வரும் நிறுவனமான உபேர் நிறுவனம் தற்போது இந்தியாவில் உபேர் லைட் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி உபேர் மெயின் செயலியின் எளிய வடிவம் என்பதும் ஆனாலும் பயணம் புக் செய்யும் வகையில் எளிதாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த லைட் செயலி வெறும் 5எம்பி மட்டுமே உள்ளதால் இதனை பேசிக் மாடல் போனில் கூட இன்ஸ்டால் செய்து ஆர்டர் புக் செய்யலாம்.

இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் உபேர் லைட் செயலி.!

மேலும் இந்த செயலி 2ஜி போன்ற குறைந்த நெட்வொர்க்கிலும் செயல்படும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த லைட் செயலியை உபேர் நிறுவனம் இந்தியாவில் தான் முதன்முதலில் அறிமுகம் செய்கிறது. தற்போதைக்கு இந்த செயக்லி டெல்லி, ஐதராபாத் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே செயல்படும். இருப்பினும் மிக விரைவில் இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களிலும் உலகின் வேறு சில நாடுகளிலும் இந்த லைட் செயலியை இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய உபேர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் உபேர் லைட் செயலி.!

இந்தியாவில் இன்னும் குறைந்த வேகமுள்ள இண்டர்நெட்டை அதிக நபர்கள் பயன்படுத்தி வருவதை கணக்கில் கொண்டே உபேர் இந்த செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறைந்த வேக இண்டர்நெட்டிலும் இந்த செயலி மூலம் உங்கள் பயணத்தை திட்டமிட்டு புக் செய்து உங்கள் பயணத்தை இனிமையாக தொடரலாம். இந்த செயலியில் மேப் வியு மற்றும் கார் எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வசதி இல்லை என்றாலும், ஜிபிஎஸ் மூலம் நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ளும் வசதி உண்டு.

ஒருவேளை ஜிபிஎஸ் செயல்படாமல் நீங்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தாலும், உங்கள் அருகில் உள்ள பிரபலமான இடம் ஒன்றை நெட் இல்லாமலும் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அருகேயுள்ள பிரபலமான லேண்ட்மார்க்கை அறிந்து உங்களுடைய இடத்திற்கு சரியாக செல்லலாம். மேலும் இந்த உபெர் லைட் செயலியில் பயனாளிகள் ரொக்கமாகத்தான் வாடகையை தரவேண்டும். கார்டு மூலமாகவோ, பேடிஎம் கணக்கு மூலமாகவோ செலுத்த முடியாது.

இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் உபேர் லைட் செயலி.!

மேலும் இந்த உபேர் லைட் செயலியில் ஏற்கனவே ஒரு நகரத்தின் முக்கிய இடங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். எனவே நீங்கள் நெட் இல்லாமல் ஆப்லைனில் இருந்தாலும் அந்த முக்கிய இடங்கள் இருக்கும் இடம் குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும் நீங்கள் வழக்கமாக செல்லக்கூடிய பகுதியாக இருந்தால்,அந்த பகுதியை இந்த செயலி சேவ் செய்து கொண்டு உங்களுக்கு உதவும். இந்த செயலி சிறிய ஸ்க்ரீன் போன் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் இதில் உள்ள இன்னொரு முக்கிய வசதி நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கும் எமர்ஜென்ஸி பட்டன் உள்ளது என்பதும் இதன்மூலம் ஷேர் செய்து அவசர தகவல்களை அனுப்பலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உபெர் ரெகுலர் செயலி 40.45 எம்பி என்ற வகையில் இருக்கும்போது, இந்த உபேர் லைட் வெறும் 5 எம்பி மட்டுமே உள்ளது ஒரு சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய மாநில மொழிகளான இந்தி, தெலுங்கு, பெங்காளி ஆகிய மொழிகளில் இந்த செயலி சப்போர்ட் செய்யும். மேலும் மிக விரைவில் மற்ற மொழிகளும் சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்படும். இதனால் இந்த செயலி இந்திய மார்க்கெட்டை மிக எளிதில் அதிகளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் உபேர் லைட் செயலி.!

உபேர் சமீபத்தில் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தனது சேவையை விற்பனை செய்துவிட்டது. மேலும் உபேர் மற்றும் ஓலா நிறுவனம் இணையவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த உபேர் லைட் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் உபேர் இந்தியாவில் தனது தனித்தன்மையை விட்டுக் கொடுக்காது என்றே கணிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Uber Lite Android App Launched in India Available in Select Cities : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X