உபேர் வழங்கும் பிரிமியர் சூப்பர் ரைட் வசதி

By Siva
|

ஆன்லைன் மூலம் புக் செய்து பயணம் செய்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் உபேர் நிறுவனம் தற்போது ஒவ்வொரு நாளும் பிரிமியர் என்னும் புதிய சலுகையை தங்களது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

உபேர் வழங்கும் பிரிமியர் சூப்பர் ரைட் வசதி

மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டும் முதல்கட்டமாக அரிமுகம் செய்துள்ள இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் பயணங்களாக மாற்றும் என்றும் நம்பிக்கையுடன் கூறப்படுகிறது

மேற்கு உபேர் இந்தியாவின் பொதுமேலாளர் சைலேஷ் சால்வானி என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'இந்தியர்களின் கார் வாங்கும் பழக்கத்தை குறைக்கும் வகையில் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த கார் மாதிரியே எங்களுடைய காரை பயன்படுத்தும் வகையில் நாங்கள் புதுப்புது சலுகைகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.

வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு தேவையையும் நாங்கள் காது கொடுத்து கேட்டு அதன்படி நடந்து கொள்கிறோம். ஒரு காரை சொந்தமாக வைத்திருப்பவர்கள் எவ்வாறு நினைத்தபோது அதை பயன்படுத்தும் வகையில் இருக்குமோ அதே போன்ற அனுபவத்தை நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிர்மியர் என்ற புதிய வசதியின் மூலம் செய்து தந்துள்ளோம்

இந்த புதிய வசதி வாடிக்கையாளர்களுக்கு பொருளாதார ரீதியான சலுகை மட்டுமின்றி சொந்த கார் போன்று திருப்தியான பயணத்திற்கும் வழிவகுக்கும்

பிரிமியர் வகை பயணம் தற்போதைக்கு மும்பை மற்றும் புனே வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறோம். இந்த இரண்டு நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மிகச்சிறந்த டிரைவருடன் கூடிய எங்களுடைய காரை பயன்படுத்தி கொள்ளலாம். ஆயிரக்கணக்கான டிரிப்புகளை வெற்றிகரமாக முடித்த ஒரு அனுபவமுள்ள ,தேர்ந்த டிரைவர் தான் அனுப்பப்படுவார். பிரிமியர் மூலம் புக் செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த நேரத்திற்குள் எங்கள் சேவை கிடைக்கும்

2 மாதங்களாக 2 மாதங்களாக "யூஸ்" பண்ணாத ஆண்ட்ராய்டு வைத்துளீர்களா.? உஷார்.!

ஏற்கனவே மோட்டோ, பூல், கோ ஆகிய வசதிகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரிமியர் ரைட் என்பது ஒரு கூடுதல் போனஸ் போன்றது ஆகும். அதுமட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் இந்த பிரிமியர் ரைட் வாடிக்கையாளர்களை திருப்தி அடைய செய்யும். இந்த பிரிமியர் ரைடை அனுபவித்தவர்கள் கூறும் விமர்சனங்கள் எங்களுக்கு நல்ல ஊக்கத்தை அளித்துள்ளது.

மீட்டிங், ஷாப்பிங், நண்பர்களுடன் வெளியூர் செல்தல், குடும்பத்துடன் சுற்றுலா செல்த, பிசினஸ் விஷயமாக ஏற்படும் அவசர பயணம், விமான நிலைய செல்தல் ஆகிய தேவைகளுக்கு இந்த பிரிமியர் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் உங்கள் பயணத்தை முடித்தவுடன் பயண அனுபவம் மற்றும் டிரைவரின் ரேட்டிங் குறித்த உங்களுடைய விமர்சனங்களை எங்களுக்கு தெரிவிக்கும் வசதியும் இதில் உண்டு. இந்த தகவல்கள் எங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்ய பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது' என்று கூறியுள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
The new option will offers rides in in economy-range sedans and customers will be extended enhanced customer support for better post-ride experience.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X