உபெர் சேஃப் திட்டத்தின் கீழ் இரண்டு புதிய திட்டங்களை உபெர் இந்தியா அறிவித்துள்ளது

|

இந்தியாவில் பயணங்களை மேற்கொள்ள பிரபலமாக இருக்கும் உபெர் செயலி, ஓட்டுநர் மற்றும் பயணிகள் பாதுகாப்பு சார்ந்த திட்டங்களை உபெர் சேஃப் திட்டத்தின் கீழ் அறிவித்துள்ளது.

உபெர் சேஃப் திட்டத்தின் கீழ் புதிய திட்டங்கள் அறிவிப்பு

புதிய திட்டத்தின் கீழ் ஓட்டுநர்களுக்காக ஷேர் ட்ரிப் அம்சம் வழங்கப்படுகிறது, இந்த திட்டம் மூலம் பயணங்கள் சார்ந்த தகவல்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

உபெர் தளத்தில் டீ-டூப்ளிகேட் ஓட்டுநர் கணக்குகள் சா்ந்தும் சரிபார்க்க முடியும். இதனால் வாகனத்தை ஓட்டுபவர் பாதுகாப்பானவரா என்றும் பாதுகாப்பான பயணத்தை வழி செய்யும் நோக்கில் இந்த அம்சம் வழிசெய்கிறது.

உபெர் சேவையில் பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மேலும் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வோம் என உபெர் இந்தியா தலைவரான பிரதீப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும், வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியான பயணத்தை வழங்குவது எங்களின் முக்கிய பணியாக இருந்து வருகிறது. அந்த வகையில் உபெர்சேஃப் திட்டத்தின் கீழ் இந்த பணியை மேலும் சீராக மேற்கொள்வோம். எங்களது பாதுகாப்பு வழிமுறைகள் ஈடில்லா அம்சங்களையும், அதிக சவுகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

விரைவில் சியோமி மி 7 : எப்போது.? என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும்.?விரைவில் சியோமி மி 7 : எப்போது.? என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும்.?

எங்களது சேவைகளை முழுமையாக: பயணி காரில் ஏறும் முன் துவங்கி, ஒட்டுமொத்த பயணம் நிறைவுறும் வரை புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு உபெர் நிறுவனத்திற்கு உதவிவருகிறது என உபெர் தெரிவித்துள்ளது.

முழுமையான பயணத்தை பாதுகாப்பானதாக வழங்க- ஓட்டுநர்கள், ஓட்டுநர் ஒப்பந்ததாரர்கள், உபெர், சட்ட உதவி மையங்கள், திட்டம் வகுப்பவர்கள், என அனைவரின் கூட்டு முயற்சியின் மூலமாகவே வழங்க முடிகிறது.

இதை மனதில் கொண்டு எங்களது சட்டவல்லுநர் குழு, தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறோம். இத்துடன் உபெர்சேஃப் போன்ற திட்டங்கள் இதற்கு உற்ற துணையாக இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உபெர் இந்தியாவின் பொறியியல் பிரிவு தலைவரான அபுர்வா தலால், உபெர் நிறுவனத்தை பொருத்த வரை புதுமையை முன்னணியில் இருப்பதில் இருந்தே துவங்கிவிடுகிறது.

புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு அவற்றை பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு முயற்சியிலும் தொடர்கிறோம். ஒவ்வொரு திட்டத்திலும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியான பயணத்தை வழங்கி வருகிறோம்.

டூ-வே ஃபீட்பேக், விமர்சனஙஅகள், டெலிமேடிக்ஸ், ஜிபிஎஸ் போன்ற சேவைகளை கொண்டு ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளிடையே நல்லுறவை வளர்க்க முடியும். உபெர் சேஃப் திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நிம்மதியான பயணத்தை வழங்கும் நோக்கில் டிரைவர் ஷேர் மை ட்ரிப் சேவையை அறிமுகம் செய்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறோம் என அவர் தெரிவித்தார்.

Best Mobiles in India

Read more about:
English summary
The new Uber campaign includes a Share Trip feature for drivers.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X