Uber இந்தியாவில் 6 இடங்களில் புதிய சேவை அறிமுகம்! கட்டணம் இவ்வளவு குறைவா?
உபர் நிறுவனம் இந்தியாவில் ஆறு நகரங்களில் 24x7 ஆட்டோ ரெண்டல்ஸ் சேவையை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஆட்டோ ரெண்டல்ஸ் பயணம் மூலம் ரைடர்ஸ் பயணிகள் ஒரு காரையும் மற்றும் அதன் டிரைவரையும் 8 மணிநேரம் வரை சுதந்திரத்துடன் முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது.

இந்த புதிய ஆட்டோ ரெண்டல்ஸ் சேவையின் மூலம் ஒரு வாகனத்தை 1 மணி நேரம் மற்றும் அதிகபட்சமாக 8 மணி நேரம் வரை பயனர்கள் பயன்படுத்திகொல்லாம். இந்த காலகட்டத்திற்குள் வாகனத்தை எங்கு வேண்டுமானாலும் நீங்கள் நிறுத்தி செல்ல விரும்பும் இடத்திற்கு சென்று வரலாம். இந்த புதிய சேவை பெங்களூரு, சென்னை, டெல்லி-என்.சி.ஆர், ஹைதராபாத், மும்பை, புனே போன்ற நகரங்களில் தற்பொழுது துவங்கப்பட்டுள்ளது.

உபரின் இந்த புதிய ஆட்டோ ரெண்டல்ஸ் தொகுப்பு ஒரு மணி நேர பயணம் அல்லது 10 கி.மீ தூரத்திற்கு ஒரு பயணத்திற்கு வெறும் ரூ .149 என்ற குறைந்த விலை கட்டணத்தில் தொடங்குகிறது, அதிகபட்சம் 8 மணிநேரம் வரை முன்பதிவு செய்யக்கூடிய பல மணிநேர தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கும் விருப்பத்துடன் இந்த ஆட்டோ ரெண்டல்ஸ் வருகிறது.

கூடுதல் நேரம் மற்றும் தூரம் போன்ற சந்தர்ப்பங்களில், உங்களிடம் ஒரு கி.மீ.க்கு ரூ .9.5 மற்றும் நிமிடத்திற்கு ரூ .1 என்று கட்டணம் வசூலிக்கப்படும். இருப்பினும், வாகன வாடகை முன்பதிவுகளை மாற்ற முடியாது அல்லது பயணம் தொடங்கியவுடன் இலக்குகளை மாற்ற முடியாது. உபர் ஆட்டோ வாடகைக்கு, முதலில், நீங்கள் ஆப் ஸ்டோர் அல்லது கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து உபர் பயன்பாட்டைப் பதிவிறக்கி உங்கள் கணக்கை உருவாக்க வேண்டும்.

உங்கள் பயணத்திற்கு 'ஆட்டோ ரெண்டல்ஸ்' மூலம் சவாரி செய்ய வேண்டும். 1 மணி முதல் 8 மணி வரை தொகுப்புகளை நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் சவாரியை உறுதிப்படுத்த 'Confirm Auto Rentals' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications