மும்பையில் பயண நேரத்தை 90% குறைக்கும் உபர் ஏர் டாக்ஸி.!

இதுபோன்ற தீர்வுகளை கொண்டுவருவதற்கு எதிர்காலத்தையே மாற்றியமைக்கக்கூடிய இந்த வகை நகர்புற போக்குவரத்து அமைப்பால் தான் முடியும்.

|

வாடகை டாக்ஸி நிறுவனமான உபர் தனது ஏர் டாக்ஸி சேவை மூலம் மும்பை போன்ற நெருக்கடியான நகரங்களில் 90% பயண நேரத்தை குறைக்க முடியும் என கூறுகிறது. அமெரிக்காவில் உள்ள டலாஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் முதல் ஏரியல் டாக்ஸி சேவையை வர்த்தக ரீதியில் 2023ம் ஆண்டுக்குள் துவங்கப்போவதாக அறிவித்துள்ளது.அதன் 3வது பங்குதாரராக சர்வதேச நகரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தது. அதில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை உபர் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்று அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள முதல் உபர் ஏர் சிட்டி-ஆக இருக்கும்.

மும்பையில் பயண நேரத்தை 90% குறைக்கும் உபர் ஏர் டாக்ஸி.!

மும்பை மேற்கு புறநகரில் உள்ள நகர விமானநிலையத்தில் இருந்து தெற்கு மும்பையில் உள்ள ஃடவுன்டவுன் சர்ச்கேட் வரை சாலை மார்க்கமாக 100 நிமிடம் பயணிக்க வேண்டிய நிலையில், எங்களது எதிர்காலத்திற்கான போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வெறும் 10 நிமிடத்தில் பயணிக்கலாம் என விளக்குகிறார் உபர் ஏவியேசன் திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியான எரிக் ஏலிசன்.

இந்த சேவையின் வாயிலாக பயணிப்பதற்கான கட்டணம் பற்றி கூறிய அவர், உயரமான கட்டிடங்களின் மேற்கூரைகளை இந்த ஏர் டாக்ஸிக்கான 'ஸ்கை போர்ட்' ஆக பயன்படுத்தப்படும் என்றார்

மும்பையில் பயண நேரத்தை 90% குறைக்கும் உபர் ஏர் டாக்ஸி.!

இதுபோன்ற தீர்வுகளை கொண்டுவருவதற்கு எதிர்காலத்தையே மாற்றியமைக்கக்கூடிய இந்த வகை நகர்புற போக்குவரத்து அமைப்பால் தான் முடியும். செங்குத்தாக டேக்ஆப் மற்றும் லேண்டிங் செய்யக்கூடிய வகையில் வாகனங்களை உற்பத்தி செய்யக்கூடிய செலவுடன், இந்த திட்டத்தை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்தவுடன், உபர் எக்ஸ்-ல் பயணிகளுக்கு பயணிக்கும் மைல்கள் அடிப்படையில் விலை ஒப்பீட்டை செய்யமுடியும் என்கிறார் ஏலிசன்.

தாங்கள் வழங்கவிருக்கும் சேவையைப் பற்றி விளக்கி கூறிய அவர், ஹெலிகாப்டரை ஒத்த வடிவமைப்புடன் பல சுழலிகளை கொண்ட வாகனத்தை பயன்படுத்தப்போவதாகவும், விமானங்களுக்கு இடையூறு ஏற்படாதவகையில் வானில் தாழ்வாக இவை பறக்கும் எனவும், மேலும் இவை குறைவான சப்தத்தை ஏற்படுத்தும் எனவும் விளக்கினார்.

மும்பையில் பயண நேரத்தை 90% குறைக்கும் உபர் ஏர் டாக்ஸி.!

கடந்த வியாழன்று புதுடெல்லியில் இந்த திட்டம் தொடர்பாக அரசு அதிகாரிகளை சந்திக்க ஏலிசன் திட்டமிட்டிருந்தார் என நமக்கு கிடைக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. நெருக்கடிமிகுந்த நகரங்களில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் மூலம் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவித்துள்ள இந்நிறுவனம், 100கிலோமீட்டர் அளவிலான பயணங்களை மேற்கொள்ளும் வகையில் பேட்டரி தொழில்நுட்பத்தில் மேம்பாடுகள் ஏற்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளது. இந்த பறக்கும் டாக்ஸிகள் தானாக இயங்கும் வகையில், ஓட்டுநர்கள் இல்லாமல், நாடு முழுவதும் பல பயணங்கள் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடுகிறது உபர்.
Best Mobiles in India

English summary
Uber Air Taxi Could Cut Travel Time in Mumbai by 90 Percent: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X