ஹைடு டிவீட் : டிவிட்டர் அறிமுகப்படுத்தும் புதிய வசதி

இத்தகைய விரும்பத்தகாத அனுபவங்களை தனது தளத்தில் ஊக்கப்படுத்துவதை தவிர்க்கும் வகையில், 'ஹைடு டிவீட்' எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது டிவிட்டர்.

|

ட்ரால் செய்வதற்கும், எதிர்மறையான கருத்துக்களை பரப்புவதற்குமான எளிதான இலக்குகளில் ஒன்றாக ட்விட்டர் மாறிவிட்டது. இத்தகைய விரும்பத்தகாத அனுபவங்களை தனது தளத்தில் ஊக்கப்படுத்துவதை தவிர்க்கும் வகையில், 'ஹைடு டிவீட்' எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது டிவிட்டர்.

ஹைடு டிவீட் : டிவிட்டர் அறிமுகப்படுத்தும் புதிய வசதி

மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான டிவிட்டர், தனது பயனர்களின் உரையாடல்களின் தனியுரிமையை சிறப்பாக கட்டுப்படுத்த அனுமதிக்கும் வகையில் ஹைடு ட்வீட் என்று அழைக்கப்படும் புதிய அம்சத்தை உருவாக்கிவருவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த அம்சமான ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் ஜேன் மான்சன் வோங் என்பவரின் மூலம் முதன்முதலாக கண்டறியப்பட்டது. கடந்த வியாழக்கிழமை அதைப் பற்றி அவர் ட்வீட் செய்தார். ட்விட்டரின் 'ஷேர்' பொத்தானின் உள்ளே காணப்பட்ட இந்த அம்சத்தை 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்தும் பகிர்ந்துள்ளார்.


இந்த அம்சமானது பின்னர் டிவிட்டர் நிறுவனத்தில் சீனியர் ப்ராடக்ட் மேனேஜராக பணியாற்றும் மிஷெல் யாஸ்மீன் ஹக் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.இது தொடர்பாக அவர் செய்துள்ள டிவீட்டில் "ட்விட்டரில் சுவாரஸ்யமான உரையாடல்களைத் தொடங்கும் மக்கள் உண்மையில் நமக்கு முக்கியமானவர்கள். எனவே அவர்களுக்கு சில கட்டுப்பாட்டை கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமானதாக இருக்கும்படியான உரையாடல்களை துவக்கமுடியும். எழுத்தாளர்கள், பதிலளிப்பவர்கள், பார்வையாளர்கள் மற்றும் தளம் போன்ற பல்வேறு குழுக்கள் அடங்கிய உரையாடல்களை நாம் சிந்திக்கிறோம். நாம் தொடர்ந்து இந்த நான்கு குழுக்களுக்கு இடையேயான அனுபவங்களை சமன் செய்ய முயற்சிக்கிறோம் மற்றும் நாங்கள் தொடர்ந்து மாற்றமில்லாத வகையில், சமநிலையை மாற்றுவதற்கான வழிகளை ஆராய்வோம்" என தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் ப்ளாக், மியூட் மற்றும் ரிபோர்ட் போன்ற வசதிகள் இருந்தாலும், இந்த கருவிகள் எப்போதும் பயனுள்ளதாக இல்லை. ப்ளாக் மற்றும் மியூட் ஆகிய வசதிகளை ப்ளாக்கர்களின் அனுபவத்தை மட்டுமே மாற்றும். ரிபோர்ட் வசதி நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தமுடியும்.

ஹைடு டிவீட் : டிவிட்டர் அறிமுகப்படுத்தும் புதிய வசதி

"இந்த புதிய அம்சத்தின் மூலம், ஒரு உரையாடலைத் தொடங்கிய நபர்கள் தங்கள் ட்வீட்டுகளுக்கு வரும் ரிப்ளைகளை மறைக்கும் வசதியை தேர்வு செய்யலாம். மறைக்கப்பட்ட ரிப்ளைகளை மற்றவர்கள் மெனு ஆப்சன் மூலம் பார்க்க முடியும்."

இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த, நீங்கள் ட்விட்டரில் உள்ள ஷேர் ஐகான் மீது கிளிக் செய்து ஹைடு ட்வீட் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் அனைத்து ட்வீட்களின் ரிப்ளைகளும் மறைக்கப்படும் மற்றும் மற்ற பயனர்கள் ஒரு ட்வீட் பதில்களை பார்க்க வும் இதை கிளிக் செய்ய வேண்டும். உங்களால் மறைக்கப்பட்ட அனைத்து ட்வீட்களை பார்க்கவும்,எதிர்காலத்தில் அவற்றை மேனுவலாக அன்ஹைடு செய்யவும் வசதிகள் உள்ளன.

Best Mobiles in India

English summary
Twitter working on new Hide Tweet feature to better protect your conversations: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X