ட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.!
தேவையில்லாத நமக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் வந்தால் உடனே இந்த செயலி செயல்பட்டு அவற்றை பிளாக் செய்துவிடும்.
ட்ரூ காலர் செயலியை உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள், குறிப்பாக இந்த செயலியில் மிக உயர்ந்த மென்பொருள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் Swedish firm என்ற நிறுவனம் ட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கால் ரெக்கார்டிங் வசதியை வழங்கியுள்ளது.
மேலும் இப்போது வழங்கப்பட்ட இந்த புதிய அப்டேட் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது, குறிப்பாக
அனைத்து வாய்ஸ் கால் அழைப்புகளையும் எளிமையாக ரெக்கார்டு செய்யமுடியும்.

ட்ரூ காலர்
குறிப்பாக இந்த ட்ரூ காலர் செயலி மிகவும் பாதுகாப்பன முறையில் செயல்படுகிறது என்று ட்ரூ காலர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ட்ரூ காலர் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள கால் ரெக்கார்டிங் அம்சம் பயனர்களின் உத்தரவின்றி எந்த கால் அழைப்புகளையும் பதிவு செய்யாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு
இருப்பினும், இந்த அம்சம் அனைவருக்கும் இல்லை. அண்ட்ராய்டு பயனர்கள் மட்டுமே அதுவும் ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கும் மேற்ப்பட்ட இயங்குதளங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் பிக்சல் மற்றும் மோட்டோ போன்ற நிறுவனங்களின் சில ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தற்சமயம் இந்த புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

பிளாக் கால்
தேவையில்லாத நமக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் வந்தால் உடனே இந்த செயலி செயல்பட்டு அவற்றை பிளாக் செய்துவிடும். மேலும் டெலிமார்க்கெட்டிங், ரோபோட் அழைப்புகள் போன்றவற்றை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் திறன் இந்த செயலிக்கு உண்டு. மேலும் ஒரு ஒயிட்லிஸ்ட் உருவாக்கி அதில் இருந்து அழைப்புகள் அல்லது குறுஞ்செய்தி வந்தால் பிளாக் செய்யக்கூடாது என்று செட் செய்யும் வசதியும் இதில் உண்டு.

இணையம்:
உங்கள் மொபைல் போனில் வரும் அழைப்பு எண் யாருக்குரியது என்று அறிய எப்போதும் இணைய இணைப்பில் உங்கள் போன் இருக்கத் தேவையில்லை. முதல் முறை ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வரும்போதே, அந்த எண்ணுக்குரியவரின் பெயர் எங்கேனும் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதனை, ட்ரூ காலர் அறிந்து வைத்துக் கொள்கிறது. அடுத்த முறை அழைப்பு வருகையில், தன் நினைவிலிருந்தே அதனை உங்களுக்குக் காட்டுகிறது.

ஸ்பேமர்
தொடர்ந்து ஓர் எண்ணிலிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் எரிச்சல் தரும் பேச்சினைத் தொடர்ந்து அளிப்பவராயின்,
அந்த எண்ணுக்குரியவரை ஸ்பேமர் என அடையாளக் குறியிட்டு வைக்கலாம். குறிப்பாக இந்தப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கும்
பயன்படும் வகையில் உள்ளது.

ட்ரூ டயலர்
இதே செயலியைப் போன்று, இதனை வழங்கும் நிறுவனம், 'ட்ரூ டயலர்' என்ற (True Dialer) என்ற செயலியையும் தருகிறது. இதனை, உங்கள் போனின் டயலராக செயல்படுத்தலாம். நீங்கள் ஒருவரை அடையாளம் காட்டி அமைத்தால், நீங்கள் குறிப்பிட்ட அடையாளத்துடன், அந்த எண்ணிலிருந்து அழைப்பு வருகையில் தகவல் கிடைக்கும். வழக்கமாக, நீங்கள் டயல் செய்திடுவதனை, இந்த செயலியின் மூலமும் செயல்படுத்தலாம்.

தேடல் பெட்டி:
எண்களை அடையாளப்படுத்தவும் எந்த தொலைபேசி எண்ணையும் எளிமையாக அடையாளம் காண இந்த தேடல்
பெட்டி (Search bar) பயன்படும் வகையில் உள்ளது. குறிப்பாக இந்த பயன்பாடும் மிக எளிமையாக இருக்கிறது.

சுயவிவரம் (profile)
உடன்இ நீங்கள் உங்கள் சொந்த சுயவிவரத்தை அமைத்து உங்களுக்கு தேவையான வழியில் தனிப்பயனாக்கலாம். இதன் பயன்பாடு என்னவென்றால் அழைப்பாளர்கள் உங்களைப் பற்றிய விவரங்களை பெற உதவுகிறது. உங்கள் தொடர்புகளின்வசதிக்காக வலைத்தளம் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற தகவல்களை நீங்கள் ட்ரூ காலரில்சேர்க்கலாம்.
தரவுத்தளம்:
இந்த ஆப் பயன்பாடானது உங்கள் தரவுத்தளத்தில் இருந்து உங்கள் எண்ணை நீக்க உதவுகிறது. நீங்கள் இந்த
இணைப்பை http://www.truecaller.com/unlist ஐ பார்வையிட வேண்டும். பின்னர் நாட்டின் குறியீடு உள்ளிட்ட
உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும். அடுத்து, எண் அகற்றலுக்கான காரணத்தைத் தேர்வுசெய்து, கேப்ட்சா உள்ளிட்டு,பட்டியலிடப்படாத பொத்தானைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications