ட்ரு காலர் ஆப் மூலம் கால் செய்து பேசலாம்! புதிய ட்ரு காலர் வாய்ஸ் சேவை அறிமுகம்!
ட்ரு காலர் சேவை நிறுவனம் தற்பொழுது ட்ரு காலர் வாய்ஸ் என்ற புதிய வாய்ஸ் கால்லிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையின் படி ட்ரு காலர் பயனர்கள் மற்ற ட்ரு காலர் பயனர்களுடன் ட்ரு காலர் செயலியைப் பயன்படுத்தி இலவச வாய்ஸ் கால்லிங் செய்துகொள்ளலாம்.

ட்ரு காலர் வாய்ஸ் என்றால் என்ன?
ட்ரு காலர் வாய்ஸ் சேவை என்பது முன்பே கூறப்பட்டது போல, உங்கள் ட்ரு காலர் செயலியின் வழி, உங்கள் ட்ரு காலர் செயலில் உள்ள காண்டாக்ட்களுக்கு மொபைல் டேட்டா அல்லது வைஃபை பயன்படுத்தி இலவசமாக வாய்ஸ் கால்லிங் செய்துகொள்வது தான் ட்ரு காலர் வாய்ஸ் சேவை.
ட்ரு காலர் வாய்ஸ் எப்படி பயன்படுத்துவது?
ட்ரு காலர் வாய்ஸ் சேவையைப் பயன்படுத்த முதலில் நீங்கள் பிரீமியம் உறுப்பினராக இருப்பது அவசியம். பிரீமியம் உறுப்பினர்களுக்கு மட்டுமே தற்பொழுது இந்த ட்ரு காலர் வாய்ஸ் கால்லிங் சேவை வழங்கப்பட்டுள்ளது. உங்கள் காண்டாக்ட்டில் உள்ள நபரும் பிரீமியம் உறுப்பினராக இருந்தால் மட்டுமே உங்களால் வாய்ஸ் கால்லிங் செய்ய முடியும். இதர பயனர்களுக்கு எப்பொழுது இந்த சேவை வழங்கப்படும் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
ட்ரு காலர் வாய்ஸ் சேவையை நாங்கள் பரிசோதித்துப் பார்த்தோம், உண்மையில் வாட்ஸ் ஆப் செயலியில் நாம் செய்யும் வாய்ஸ் கால்லிங் போலவே எந்த பிழையும் இன்று மிகத் துல்லியமாகப் பேச முடிந்தது. முக்கிய குறிப்பு நாங்கள் மொபைல் டேட்டாவை பயன்படுத்தவில்லை, ட்ரு காலர் வாய்ஸ் கால் வைஃபை பயன்படுத்தி கால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications