இந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள் பயன்படுத்த மாட்டிர்கள்.! இதோ காரணம்.!

|

நம்மில் பெரும்பாலானோர் Truecaller என்ற பயன்பாட்டுச் செயலியை நமது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வருகிறோம். இந்த பயன்பாட்டை உலகளவில் சுமார் 15 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான முக்கிய காரணம் உங்களுக்குத் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், அந்த நபர் யார்? எங்கிருந்து அழைக்கிறார் என்று அவரின் அனைத்து தகவலையும் இந்த செயலி சொல்லிவிடும்.

ட்ருகாலர் (Truecaller) செயலி

ட்ருகாலர் (Truecaller) செயலி

ட்ருகாலர் (Truecaller) செயலி ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளங்களிலும் இலவசமாகக் கிடைக்கிறது. இலவச வெர்ஷன் மற்றும் ப்ரோ வெர்ஷன் என்ற கட்டண வெர்ஷனும் ட்ருகாலர் செயலியில் உள்ளது. ட்ருகாலர் ப்ரோ வெர்ஷனின் கீழ் பயனர்களுக்கு இன்னும் அதிகமான பல புதிய சேவைகளை இந்நிறுவனம் வழங்கிவருகிறது.

எப்போதாவது இதை யோசித்தது உண்டா?

எப்போதாவது இதை யோசித்தது உண்டா?

உங்களுக்குத் தெரியாத நபரின் விபரங்களை மிகத் துல்லியமாக இந்த பயன்பட்டு செயலி எப்படித் தெரிவிக்கிறது என்று யோசித்தது உண்டா? அந்த முகம் தெரியாத, பெயர் தெரியாத எண்ணிற்குச் சொந்தக்காரர் யார் என்ற தகவலை இந்த ட்ருகாலர் நிறுவனத்திற்கு யார் வழங்கி இருப்பார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?

முடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு?- அப்போ Airtel, Jio நிலை?முடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு?- அப்போ Airtel, Jio நிலை?

பெர்மிஷன் ஆக்ஸஸ்

பெர்மிஷன் ஆக்ஸஸ்

இந்த அனைத்து கேள்விகளுக்கான பதில், TrueCaller App நிறுவனத்தின் பிரைவசி பாலிசியில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ட்ருகாலர் ஆப்-ஐ உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பொழுது, பெர்மிஷன் ஆக்ஸஸ் தர வேண்டும், இந்த பெர்மிஷன் ஆக்ஸஸை நீங்கள் தரவில்லை என்றால் ட்ருகாலர் பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ருகாலரின் உண்மையான சூட்சுமம்

ட்ருகாலரின் உண்மையான சூட்சுமம்

ட்ருகாலர் நிறுவனத்தின் உண்மையான சூட்சுமம் இங்கே தான் ஒளிந்துள்ளது. இந்த பெர்மிஷன் ஆக்ஸஸை நீங்கள் வழங்கியதும் இந்த செயலி உங்கள் Contact List, Call History மற்றும் Messeges Data போன்ற அனைத்து தகவல்களையும் எடுத்துக்கொள்கிறது. இந்த அனைத்து தகவல்களும் TrueCaller சர்வரில் சேமித்து வைக்கப்படுகிறது. அங்கிருந்து தான் மற்றவர்களுக்கு தகவல் கொடுக்கப்படுகிறது.

அனைவரின் தகவலும் சர்வரில் உள்ளது

அனைவரின் தகவலும் சர்வரில் உள்ளது

சேகரிக்கப்படும் பயனர்களின் தகவல்களை வைத்து தான், தெரியாத நபர்களின் விபரங்கள் நமக்கு வழங்கப்படுகிறது. அதேபோல், நம் எண்ணை வைத்து நம் அடையாளங்களைத் தேடும் நபர்களுக்கும் இப்படி தான் தகவல் கொடுக்கப்படுகிறது. ட்ருகாலர் பயன்படுத்தும் பயனர்களின் மொபைல் IP விலாசம், மொபைல் மாடல் எண் மற்றும் அடையாள எண், கால் ஹிஸ்டரி, மெசேஜ் அனைத்தும் ட்ருகாலர் சர்வரில் இப்போது உள்ளது.

மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் சிக்கல்

மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் சிக்கல்

உங்களிடம் இருந்து சேகரித்த இந்த தகவல்களை அதன் நம்பகமான மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் பகிர்ந்துகொள்வதாக ட்ருகாலர் நிறுவனம் தெரிவித்துள்ளது. உண்மையான சிக்கல் இங்கு தான் ஆரம்பமாகிறது, உங்களுக்கு வரும் ஸ்பேம் கால்கள் பெரும்பாலும் இந்த வழியில் தான் உங்களை வந்தடைந்து தொல்லையைத் தருகிறது. இந்த தொந்தரவிற்கு நீங்கள் கொடுத்த பெர்மிஷன் ஆக்ஸஸ் தான் காரணம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தப்பித் தவறி கூட whatsapp-ல் இத பண்ணாதிங்க!முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தப்பித் தவறி கூட whatsapp-ல் இத பண்ணாதிங்க!

எப்படி இதை சரி செய்வது?

எப்படி இதை சரி செய்வது?

மேலும் உங்களுடைய பெயர் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் பொது வெளியில் இருப்பது ஆபத்தானது தான். இதனால் தான் முடிந்தவரை இம்மாதிரியான செயலிகளை நம்பி உபயோகிக்க வேண்டாம் என்று டெக் வல்லுநர்கள் அறிவுரைத்து வருகிறார்கள். ஐயயோ! இதை இப்பொழுது எப்படி நான் சரி செய்வதென்று உங்கள் மனம் கேள்வி எழுப்பி இருக்கும். இதற்கான தீர்வு என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

இதை உடனே செய்யுங்கள்

இதை உடனே செய்யுங்கள்

நம் தகவல்களை ஒரே ஓரு பெர்மிஷன் கிளிக்கில் நம்மிடமிருந்து பெற்று, அவர்களின் சர்வரில் சேமித்துக்கொண்டார்கள். அதை அழிக்க ஒரு எளிய வழி உள்ளது, இதைச் செய்ய நீங்கள் https://www.truecaller.com/unlisting என்ற இந்த லிங்க்-ஐ கிளிக் செய்ய வேண்டும். பிறகு, உங்கள் மொபைல் எண்ணைக் கொடுத்து, உங்கள் தகவல்களை TrueCaller சர்வரில் இருந்து நீக்கம் செய்துகொள்ளலாம்.

தேவையில்லாத ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யாதீர்கள்

தேவையில்லாத ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யாதீர்கள்

இந்த பயன்பாட்டுச் செயலி மட்டுமின்றி, பயனர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பயன்பாடுகள் நம்மிடமிருந்து தகவல்களைப் பெற முயற்சி செய்துகொண்டேதான் இருக்கின்றது. சில பயன்பாடுகள் தேவையில்லாமல் நமது அபகரிக்க முயல்கின்றன. அவற்றையெல்லாம் கவனிக்காமல் பெர்மிஷன் ஓகே கொடுத்துவிடக் கூடாது. முடிந்த வரை தேவையில்லாத, தெரியாத ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யாதீர்கள்.

Best Mobiles in India

English summary
Truecaller Privacy Permissions Allows The App To Save All Your Details To It's Sever : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X