Home
Apps

4GB ரேம் ஆண்ட்ராய்டு போன்களுக்கு Truecaller Lite அறிமுகம்.. 10MB மட்டுமே, என்னென்ன அம்சங்கள் இருக்கு?

இந்தியாவில் ட்ரூகாலர் (Truecaller) நிறுவனம், குறைந்த ஸ்டோரேஜ் மற்றும் ரேம் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்காக ட்ரூகாலர் லைட் (Truecaller Lite) என்ற புதிய ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 10‌ எம்பி அளவு மட்டுமே கொண்ட இந்த ஆப், பழைய மற்றும் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களில் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஸ்மார்ட்போன்களில் தேவையற்ற கால்களை அடையாளம் காணவும், ஸ்பேம் கால்களை தடுக்கவும் ட்ரூகாலர் ஆப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதிக ஸ்டோரேஜ் மற்றும் மெமரி தேவைப்படுவதால் சில குறைந்த விலை போன்களில் இந்த ஆப் மெதுவாக இயங்கும். இதற்குத் தீர்வாக, குறைந்த ரேம் கொண்ட போன்களிலும் பயன்படுத்தும் வகையில் ட்ரூகாலர் லைட் உருவாக்கப்பட்டுள்ளது.

4GB ரேம் ஆண்ட்ராய்டு போன்களுக்கு Truecaller Lite.. 10MB போதும்!

ட்ரூகாலர் லைட் ஆப்பின் முக்கிய அம்சங்கள்

இந்த புதிய ஆப்பில், வழக்கமான ட்ரூகாலரில் கிடைக்கும் முக்கியமான காலர் ஐடி (Caller ID) வசதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, உங்களுடைய மொபைலில் சேமிக்கப்படாத எண்ணிலிருந்து கால் வந்தாலும், அந்த எண்ணை அடையாளம் காண உதவும். இதன்மூலம் தெரியாத எண்களிலிருந்து வரும் கால்களை ஏற்க வேண்டுமா அல்லது தவிர்க்க வேண்டுமா என்பதை முடிவு செய்யலாம்.

மேலும், ஸ்பேம் மற்றும் மோசடி கால்களை அடையாளம் காணும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. விளம்பர அழைப்புகள், தேவையற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் மோசடி முயற்சிகளுடன் தொடர்புடைய எண்களை அடையாளம் காண இந்த வசதி உதவும். கஸ்டமர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட ட்ரூகாலரின் பாதுகாப்பு தொழில்நுட்பமும் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

ட்ரூகாலர் லைட் ஆப்பில் ஒருங்கிணைந்த டயலர் (Dialer) வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கால் ஹிஸ்டரி (Call History), காண்டாக்ட்ஸ் (Contacts) மற்றும் மொபைல் நம்பர் தேடல் (Mobile Number Search) உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் நிர்வகிக்க முடியும். கால் முடிந்த பிறகும், கால் செய்த நபர் குறித்த விவரங்களைப் பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

4 ஜிபி போன்களிலும் பயன்படுத்தலாம்!

இந்த ஆப் குறிப்பாக 4 ஜிபி வரை ரேம் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த மெமரி கொண்ட போன்களிலும் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாமல் இயங்குவது இதன் முக்கிய சிறப்பம்சமாகும். மேலும், குறைந்த ஸ்டோரேஜ் வசதி கொண்ட போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

வழக்கமான ட்ரூகாலர் ஆப்பில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் இடம்பெறவில்லை. குறிப்பாக, ஆப்பிலேயே மெசேஜ் அனுப்பும் வசதி, வாய்ஸ்மெயில் (Voicemail), ஃபேமிலி புரொடெக்ஷன் (Family Protection) மற்றும் ஏஐ அசிஸ்டென்ட் (AI Assistant) போன்ற வசதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்பின் அளவை குறைத்து, கால் தொடர்பான முக்கிய வசதிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ட்ரூகாலர் லைட் டவுன்லோடு செய்வது எப்படி?

இந்தியாவில் ட்ரூகாலர் லைட் ஆப் இலவசமாக கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாகக் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் பிளே ஸ்டோரில் Truecaller Lite எனத் தேடி, தங்களுடைய போனுக்கு இந்த ஆப் கிடைக்கிறதா என்பதைச் சரிபார்த்து இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். இந்த ஆப் ஆண்ட்ராய்டு டிவைஸ்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஐஓஎஸ் டிவைஸ் களுக்கு கொடுக்கப்படவில்லை.

மொத்தத்தில், குறைந்த விலை ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்கள், அதிக ஸ்டோரேஜ் எடுத்துக்கொள்ளும் ஆப்களைத் தவிர்க்க விரும்புபவர்கள் மற்றும் தேவையற்ற கால்களை தடுக்க விரும்புபவர்களுக்கு ட்ரூகாலர் லைட் பயனுள்ள தேர்வாக இருக்கும். இருப்பினும், வழக்கமான ட்ரூகாலரில் கிடைக்கும் அனைத்து கூடுதல் வசதிகளும் இதில் இல்லை என்பதைப் பயனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

English summary
Truecaller Lite App Launched in India for 4GB RAM Android Phones Check Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X