ட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை! இனி எல்லாமே சேஃப்!

|

ட்ரூகாலர் பயன்பாட்டுச் செயலியில் புதிய அம்சத்தைச் அறிமுகம் செய்துள்ளது. ட்ரூகாலர் தனியுரிமை மையமாகக் கொண்ட குரூப் சாட் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு தற்பொழுது கிடைக்கிறது.

ட்ரூகாலர்

இந்த புதிய சேவையின்படி, ட்ரூகாலர் பயனர்கள் தாங்கள் தேர்வு செய்துகொண்ட குரூப்களுக்குள் மெசேஜ்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். இதுபோன்ற சேவை முன்பே வாட்ஸ்ஆப் மற்றும் டெலெக்ராம் போன்ற பயன்பாட்டுச் செயலிகளில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

இன்விடேஷன் அடிப்படையிலான-பொறிமுறை

புதிய அம்சம் இன்விடேஷன் அடிப்படையிலான-பொறிமுறையில் செயல்படுகிறது, அதாவது ஒரு நபர் புதிய குரூப்பில் சேர அழைப்பை விடுக்கலாம். அனுப்பப்பட்ட அழைப்பை ஏர்த்து அந்த தனிப்பட்ட குரூப்பில் சேர்ந்துகொள்ளலாம் அல்லது அதில் சேராமலும் நிராகரிக்கலாம்.

புதிய சேவை

அதேபோல் மற்றொரு புதிய சேவையையும் ட்ரூகாலர் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி உங்கள் அனுமதி இன்றி உங்கள் மொபைல் எண்ணை யாராலும் பார்க்க முடியாது என்பது தான். இந்த புதிய சேவையும் இன்விடேஷன் அடிப்படையிலான-பொறிமுறையில் செயல்படும் படி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இல்லாமல் பார்க்க இயலாது

உங்கள் மொபைல் எண்களை அறிந்து போன் புக்கில் இல்சேவ் செய்த நபர்களால் மட்டுமே உங்கள் மொபைல் எண்ணைக் காண முடியும் மற்றும் மற்றவர்கள் உங்கள் எண்களைக் காண உங்கள் அனுமதியைக் கேட்டாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 மில்லியன் கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்

உலகளவில் சுமார் 1 மில்லியன் கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களைத் தாண்டிவிட்டதாக ட்ரூகாலர் சமீபத்தில் அறிவித்துள்ளது. மேலும் அதன் கட்டண சந்தா சேவையான ட்ரூகாலர் பிரீமியத்தில் கீழ், இந்த புதிய அம்சங்களை தற்பொழுது சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Truecaller Introduces New Privacy Feature For Android, iPhone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X