ஆண்ட்ராய்டு ட்ரூகாலர் பயனர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம்
இந்திய ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான காலர்-ஐடி செயலியாக அறியப்படும் ட்ரூகாலர், தனது ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கென புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. புதிதாய் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு அம்சங்களும் நம்பர் ஸ்கேனர் மற்றும் ஃபாஸ்ட் டிராக் நம்பர்கள் ஆகும். இவை இரண்டும் ஆண்ட்ராய்டு 8.45 அப்டேட்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தெரியாத எண்களில் வரும் அழைப்புகள், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை பிளாக் செய்வது மட்டுமின்றி ட்ரூகாலர் கொண்டு பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். அந்த வகையில், முதல் அம்சமான நம்பர் ஸ்கேனர் கொண்டு பிஸ்னஸ் கார்டு, வலைத்தங்கள், விளம்பர பலகைகளில் உள்ள நம்பர்களை போனின் கேமரா மூலம் நேடியாக ஸ்கேன் செய்யும்.
இந்தியாவில் வாடிக்கையாளர்கள் பல்வேறு நம்பர்களை ஸ்கேன் செய்வது மட்டுமின்றி, யுபிஐ கட்டணங்களுக்கும் பயன்படுத்த முடியும் என ட்ரூகாலர் இந்தியா தெரிவித்துள்ளது. இத்துடன் ட்ரூகாலர் வாடிக்கையாளர்கள் பணத்தை அனுப்பவோ, பணத்தை பெற கோரிக்கை மற்றும் காண்டாக்ட்களுக்கு பிளாஷ் மெசேஜ் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளம முடியும்.
முக்கியமான போன் நம்பர்களை எங்கு பார்த்தாலும், ட்ரூகாலர் கொண்டு அதனை உடனடியாக போனில் சேமித்துக் கொண்டு பயன்படுத்த முடியும். இத்துடன் பண பரிமாற்றங்களுக்கும் ட்ரூகாலர் சேவையை பயன்படுத்த முடியும் என ட்ரூகாலர் நிறுவனத்தின் நாராயணன் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஃபாஸ்ட் டிராக் நம்பர்ஸ் அம்சம் அவசர காலத்தில் பயன்படுத்த தேவையான அனைத்து நம்பர்களையும் போனின் செயலியில் தானாக சேமித்து வைக்கும். மேலும் இந்த அம்சம் இண்டர்நெட் இணைப்பு இல்லாமலும் பயன்படுத்த முடியும். இத்துடன் வங்கி கணக்கில் இருக்கும் தொகையை அறிந்து கொள்ளக் கூடிய எண்களையும் ஆஃப்லைன் பயன்பாட்டிற்கு பெற முடியும்.
இந்த அம்சங்கள் இந்தியாவில் மட்டுமே வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications