ட்ரூ காலரின் புதிய மல்டிபேங்க் பேமெண்ட் செயலி அறிமுகம்.!

ட்ரூ காலர் செயலி மூலம் காலர் அடையாளம் தெரிந்து கொள்வது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த செயலி தற்போது இந்தியாவின் முதல் மல்டிபேங்க் பேமெண்ட் செயலி ஒன்றை ஆரம்பித்டுள்ளது.

|

ட்ரூ காலர் செயலி மூலம் காலர் அடையாளம் தெரிந்து கொள்வது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த செயலி தற்போது இந்தியாவின் முதல் மல்டிபேங்க் பேமெண்ட் செயலி ஒன்றை ஆரம்பித்டுள்ளது. இதன் பெயர் 'சில்ர்' என்பது ஆகும்.

ட்ரூ காலரின் புதிய மல்டிபேங்க் பேமெண்ட் செயலி அறிமுகம்.!

கடந்த 2017ஆம் ஆண்டு ட்ரூ காலர் நிறுவனம் ட்ரூ காலர் பே என்ற வசதியை ஆரம்பித்து இந்தியர்களின் பணபரிமாற்றத்திற்கு உதவியது என்று கூறும் ட்ரூ காலர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான ஜரிங்கலாம் என்பவர் மேலும் கூறியதாவது

செயலி

செயலி

இந்த செயலி மூலம் மொபைல் மூலம் பேமெண்ட் செய்பவர்களுக்கு ஒரு நல்ல திட்டமாக தாங்கள் கொண்டு வந்துள்ளதாகவும், பயனாளிகள் விரைவாகவும் எளிதாகவும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். எங்களுடைய வாடிக்கையாளர்கள் தினமும் தங்களுடைய தேவைக்கேற்ற பணப்பரிமாற்றங்களை திறம்பட செய்திட எங்களுடைய இந்த செயலி உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சோனிஜாய்

சோனிஜாய்

அதேபோல் இந்த நிறுவனத்தின் நிறுவனர் சோனிஜாய், அனூப் சங்கர், முகம்மது கலீப், மற்றும் லிஷொய் பாஸ்கரன் மற்றும் இந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் இந்த ட்ரூ காலர் நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.

பெருமகிழ்ச்சி

பெருமகிழ்ச்சி

ட்ரூ காலர் தன்னுடைய பிளாக்கில் இதுகுறித்து கூறியபோது, 'பெங்களூரில் உள்ள இந்த நிறுவனத்தில் இணைந்து பணிபுரிவதில் நாங்கள் உண்மையில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்களுடைய பணியால் எங்கள் வாடிக்கையாளர்கள் மொபைல் பேமெண்ட் வசதியை எளிதாக கையாள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இன்னும் ஒருசில மாதங்களில் வாடிக்கையாளர்களே எதிர்பார்க்காத வகையில் புதுப்புது வசதிகள் மூலம் பேமெண்ட் பரிவர்த்தனை செய்யவிருப்பதாகவும், எங்களுடைய விஸ்தரிக்கப்பட்ட சேவை உண்மையில் அபாரமானதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமான ட்ரூ காலர் நிறுவனத்தின் இந்த மொபைல் பேமெண்ட் செயலி தற்போது 100 மில்லியன் பயனாளிகளுக்கும் மேல் பெற்றுள்ளது

டெக்னாலஜி

டெக்னாலஜி

டெக்னாலஜி அளவில் இந்த நிறுவனம் தனது வெகுதூர பயணத்தை தொடரும் என்றும், ஆரம்பத்தில் காலர் ஐடியாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் படிப்படியாக வளர்ந்து ஸ்பேம் பிளாக்கிங், எஸ்.எம்.எஸ். பிளாஷ் மெசேஜ் மற்றும் தற்போது பேமெண்ட் சேவை என விரிவாக்கம் செய்து கொண்டே இருப்பதே இதன் வளர்ச்சியாக கருதப்படுகிறது.

100 மில்லியன்

100 மில்லியன்

ஸ்மார்ட்போன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்கள் இண்டர்நெட் உதவியுடன் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதோடு அவர்களுடைய அவசர தேவைக்கு பணப்பரிவர்த்தனையும் செய்யும் வகையில் தங்களுடைய சேவை இருப்பதாக நிறுவனத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர். தினமும் 100 மில்லியன் நபர்கள் ஸ்மார்ட்போன் மூலம் ட்ரூ காலர் சேவையால் பலனடைந்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Truecaller acquires multi-bank payments app Chillr : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X