Home
Apps

புதிய போனிற்கு வாட்ஸ்அப் சாட்களை மாற்றம் செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கினால், பழைய ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை எப்படி புதிய போனிற்கு மாற்றம் செய்வது என்ற கேள்வி தான் அனைவர் மனதிலும் தோன்றும். குறிப்பாக நம்முடைய வாட்ஸ்அப் சாட்களை எப்படி புதிய போனிற்கு மாற்றம் செய்வது என்ற கேள்வி எழும்.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS

ஆண்ட்ராய்டு மற்றும் iOS

கவலை வேண்டாம் கீழே குறிப்பிட்டுள்ள முறையைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளங்களிலும் உங்கள் சாட்களை மாற்றம் செய்துகொள்ளலாம். எளிதாக மற்றும் பாதுகாப்பாக உங்களை சாட்களை மாற்றம் செய்ய மூன்றாம் நபர் செயலிகளை நம்ப வேண்டாம் என்று அறிவுரைக்கப்படுகிறது.

கிளவுட் ஸ்டோரேஜ் சேவை பயன்படுத்துங்கள்

கிளவுட் ஸ்டோரேஜ் சேவை பயன்படுத்துங்கள்

புதிய ஸ்மார்ட்போன்களுக்கு உங்களுடைய வாட்ஸ்அப் சாட்களை பேக்-அப் செய்து, எளிதாக மாற்றம் செய்வதற்கு கிளவுட் ஸ்டோரேஜ் சேவை அனுமதி வழங்குகிறது. ஸ்மார்ட்போன் பயனர்கள் கூகுள் ட்ரைவ் அல்லது ஐகிளவுட் சேவை மூலம் வாட்ஸ்அப் சாட்களை எளிதாக, பாதுகாப்புடன் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் மாற்றம் செய்துகொள்ளலாம்.

கூகுள் ட்ரைவ் அல்லது ஐகிளவுட் சேவை

கூகுள் ட்ரைவ் அல்லது ஐகிளவுட் சேவை

மூன்றாம் பயனர் பயன்பாட்டு செயலிகளைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் சாட்களை ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம். ஆனால், இதில் ஒரு சிறிய சிக்கல் இருக்கிறது, அனைத்து சாட்களையும் இந்த முறைப்படி ஒன்றாக ட்ரான்ஸ்ஃபர் செய்வது சற்று கடினமான விஷயம், ஆகையால் வாட்ஸ்அப் சாட்களை பேக்-அப் எடுக்க வேண்டுமானால், கூகுள் ட்ரைவ் அல்லது ஐகிளவுட் சேவையை பயன்படுத்துங்கள்.

கிளவுட் சேவை மூலம் வாட்ஸ்அப் சாட் பேக்-அப் செய்வது எப்படி?

கிளவுட் சேவை மூலம் வாட்ஸ்அப் சாட் பேக்-அப் செய்வது எப்படி?

  • உங்களின் ஸ்மார்ட்போனில், உங்கள் ஜிமெயில் அக்கௌன்டை லாக்-இன் செய்துகொள்ளுங்கள்.
  • பிறகு வாட்ஸ்ஆப் செட்டிங்க்ஸ் சென்று -> சாட்ஸ் -> சாட் பேக்-அப் கிளிக் செய்யுங்கள்.
  • இதன் மூலம் உங்களுடைய சாட்கள் பேக்-அப் செய்து கொள்ளலாம்.
  • பேக்-அப் செய்யும்பொழுது உங்கள் சாட்கள் புகைப்படங்களுடன் ஷேர் செய் வேண்டுமா? அல்லது புகைப்படங்கள் மற்றும் மீடியா பைல்கள் வேண்டாமா என்பதை நீங்கள் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
  • ஜிமெயில் அக்கௌன்ட் லாக் இன்

    ஜிமெயில் அக்கௌன்ட் லாக் இன்

    • பிறகு புதிய ஸ்மார்ட்போனில், உங்களுடைய ஜிமெயில் அக்கௌன்ட்டை லாக் இன் செய்துகொள்ளுங்கள்.
    • லாக் இன் செய்த கூகுள் அக்கௌன்ட் மூலம் வாட்ஸ்ஆப் ஓப்பன் செய்தால், ரிஸ்டோர் மற்றும் ஸ்கிப் என்ற இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.
    • ரிஸ்டோர் கிளிக் செய்தால் உங்கள் கிளவுட் ஸ்டோரேஜில் சேமிக்கப்பட்டிருந்த பழைய போனின் பேக்-அப் சாட்கள் புதிய போனிற்கு மாற்றப்படும்.
    • ட்ரை செஞ்சு பாருங்கள்

      ட்ரை செஞ்சு பாருங்கள்

      • ஸ்கிப் கிளிக் செய்தால் உங்களுடைய சாட்கள் எதுவும் ரிஸ்டோர் செய்யாமல், புதிதாக வாட்ஸ்ஆப் சாட் ஓபன் செய்யப்படும்.
      • இம்முறையை பயன்படுத்தி உங்கள் பழைய போனில் உள்ள சாட்களை எளிதாக புதிய போனிற்கு மாற்றம் செய்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Transferring WhatsApp chats to a new phone? Easy Steps To Follow : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X