Home
Apps

திரைப்படம் மற்றும் நிகழ்ச்சிகளை ஆன்லைனில் பார்த்து ரசிக்க தலைச்சிறந்த செயலிகள்

By Meganathan S

நம்மில் பலருக்கும் போரடிக்கும் போது நேரத்தை கழிக்க திரைப்படங்கள் மட்டுமே பொழுதுபோக்காக இருக்கிறது. பல நாட்கள் நிச்சயம் பார்த்தே ஆக வேண்டும் என்கிற திரைப்படங்களை போரடிக்கும் போது பார்த்து விட வேண்டும் என்பதே பலரின் பொழுதுபோக்காக இருக்கிறது.

திரைப்படம் மற்றும் நிகழ்ச்சிகளை ஆன்லைனில் பார்த்து ரசிக்க தலைச்சிறந்த

இவ்வாறான திரைப்பட ப்ரியர்களுக்கான தொகுப்பு இது. அடிக்கடி இண்டர்நெட் பயன்படுத்துவோர் திரைப்படங்களை காண பல்வேறு செயலிகள் கிடைக்கிறது. ஆணட்ராய்டு ஸ்மார்ட்போனில் முழு திரைப்படங்களை பார்த்து ரசிக்க கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் தலைச்சிறந்த செயலிகளை தொடர்ந்து பார்ப்போம்.

ஷோபாக்ஸ் (Showbox)

ஷோபாக்ஸ் (Showbox)

புதிய திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீம் செய்ய தலைச்சிறந்த செயலியாக ஷோபாக்ஸ் இருக்கிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி கொண்டு அனைத்து புதிய திரைப்படங்களையும் வெவ்வேறு ஃபார்மேட்களில் காண முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்காது.

கிராக்கிள் (Crackle)

கிராக்கிள் (Crackle)

திரைப்படங்களை பார்த்து ரசிக்க ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் சட்டப்பூர்வமாக கிடைக்கும் செயலிகளில் இதுவும் ஒன்று. கிராக்கிள் செயலியில் முழு திரைப்படங்களை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பார்க்க முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் கிராக்கிள் செயலியில் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியும்.

ஹாட்ஸ்டார் (Hotstar)

ஹாட்ஸ்டார் (Hotstar)

நேரலையில் கிரிக்கெட் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காண பிரபலமான செயலியாக ஹாட்ஸ்டார் இருக்கிறது. இதேபோல் ஹாட்ஸ்டார் செயலியில் திரைப்படங்களையும் முழுமமையாக பார்க்க முடியும். இதுதவிர நாடகங்கள் மற்றும் விளையாட்டு நேரலை உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.

பாப்கார்ன் டைம் (Popcorn Time)

பாப்கார்ன் டைம் (Popcorn Time)

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பிரபல செயலியாக அறியப்படும் பாப்கார்ன் டைம் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை டவுன்லோடு செய்து பார்க்க வழி செய்கிறது. இந்த செயலி கொண்டு தரவுகளை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், கணினி, எக்ஸ்பாக்ஸ் மற்றும் ஐஓஎஸ் சாதனங்களிலும் டவுன்லோடு செய்ய முடியும். புதிய திரைப்படங்களை எச்டி தரத்தில் காண பாப்கார்ன் டைம் தலைச்சிறந்த செயலியாக இருக்கிறது.

வூட் டிவி (Voot Tv)

வூட் டிவி (Voot Tv)

வூட் செயலியில் 17,000 மணி நேரத்திற்கான பொழுதுபோக்கு வீடியோக்களை கொண்டுள்ளது. இவற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் விருப்பங்களை பூர்த்தி செய்யுமளவு தரவுகள் இடம்பெற்றுள்ளது. பெரும்பாலான இந்திய மொழிகள் மட்டுமின்றி தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வூட் ஒரிஜினல்ஸ் உள்ளிட்டவற்றை காண முடியும்.

நெட்ஃபிளிக்ஸ் (NetFlix)

நெட்ஃபிளிக்ஸ் (NetFlix)

தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்போனில் பார்த்து ரசிக்க உலகின் முன்னணி சேவையாக நெட்ஃபிளிக்ஸ் இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் சந்தாவுடன் செயலியை இலவசமாக டவுன்லோடு செய்து உடனடியாக நிகழ்ச்சிகளை ஸ்மார்ட்போனில் பார்க்கலாம்.

வின்க் (Wynk)

வின்க் (Wynk)

திரைப்பட பிரிவில் வின்க் புதுவரவு செயலியாக இருக்கிறது. திரைப்பட ப்ரியர்களுக்கு இந்த செயலி நிச்சயம் பிடிக்கும். இந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி ஹாலிவுட் திரைப்படங்களையும் இந்த செயலியில் பார்க்க முடியும். இத்துடன் க்ரோம்காஸ்ட் கொண்டு டிவி திரையில் இணைத்து பார்க்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

டுபி டிவி (Tubi Tv)

டுபி டிவி (Tubi Tv)

பிரபல திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீம் செய்ய டுபி டிவி செயலி சிறப்பான தேர்வு எனலாம். பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்களை தேர்வு செய்ய முடயும், இதில் மற்ற சேவைகள் வழங்காத திரைப்படங்களும் அடங்கும்.

வியூஸ்டர் (Viewster)

வியூஸ்டர் (Viewster)

தலைச்சிறந்த திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை ஆண்ட்ராய்டு சாதனத்தில் பார்த்து ரசிக்க வியூஸ்டர் சிறப்பான செயலியாக இருக்கிறது. மேலும் அனிமெ தொடர்கள், பெரும்பாலும் திகில் நிறைந்த தொடர்கள், நகைச்சுழை மற்றும் ஆவணப்படம் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.

பாக்ஸ் டிவி (BoxTv)

பாக்ஸ் டிவி (BoxTv)

பிரபல திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காண வழி செய்யும் பிரீமியம் வீடியோ ஸ்ட்ரீமிங் செயலியாக பாக்ஸ் டிவி இருக்கிறது. இந்த செயலியில் இந்திய மொழிகள் மட்டுமின்றி ஹால்வுட் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் காண முடியும். உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்கும் பாக்ஸ் டிவி நிகழ்ச்சிகளை அதன் உண்மை தரத்தில் வழங்கும்.

யூடியூப் (YouTube)

யூடியூப் (YouTube)

அதிகாரப்பூர்வ யூடியூப் செயலி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களில் கிடைக்கிறது. உலகத்தார் பார்த்து ரசிக்கும் வீடியோக்களை உடனடியாக பார்க்க முடியும். மியூசிக் வீடியோ மட்டுமின்றி, கேமிங், பொழுதுபோக்கு, செய்திகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் அதிகம் பேர் பார்த்து ரசிக்கும் வீடியோக்களை யூடியூபில் பார்க்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top free android apps to watch Movie and TV shows
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X