இந்த இரண்டு வங்கி வாடிக்கையாளர்கள் இனிமேல் வாட்ஸ்ஆப்பில் தகவல் பெற முடியும்.!

இந்த புதிய அம்சம் மூலம் உண்மையான மெசேஜ்கள் மற்றும் பார்வேர்டு செய்யப்பட்ட மேசேஜ்கள் என எளிமையாக வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும்.

|

தொடர்ந்து வாட்ஸ்ஆப் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி இந்தியாவில் பல்வேறு வங்கிகள் வாட்ஸ்ஆப் மூலம் தகவல் பரிமாறக்கூடிய சேவையை சோதனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வங்கி வாடிக்கையாளர்கள் இனிமேல் வாட்ஸ்ஆப்பில் தகவல் பெற முடியும்

இந்நிலையில் இண்டஸ் இண்டு மற்றும் கோடாக் வங்கிகள் வாட்ஸ்ஆப் மூலம் தகவல் பரிமாறக்கூடிய சேவையை அறிமுகம் செய்துள்ளன, இந்த வாட்ஸ்ஆப் திட்டம் தற்சமயம் சோதனை சேவையாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு மக்களுக்கு இந்த திட்டம் பயன்படும் வகையில் இருக்கும்.

வாட்ஸ்ஆப்:

வாட்ஸ்ஆப்:

கோடாக் மற்றும் இண்டஸ் இண்டு வங்கிகள் சார்ந்த அனைத்து தகவல்களையும் இனி வாட்ஸ்ஆப் மூலம் பெற முடியும். அதன்பின்பு வங்கி அதிகாரிகளுடன் சாட் செய்து வங்கி சார்ந்த பல்வேறு விவரங்கள் மற்றும் பல்வேறு சேவைகளை பெற முடியும்.

  லேபெல்

லேபெல்

வஙகி சாந்த அம்சங்கள் மட்டும் இல்லாமல் வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, தற்சமயம் மெசேஜ்களை அடுத்தவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் போது லேபெல் செய்யப்படுகிறது. இந்த அம்சம் புதிய பீட்டா (2.18.179) பதிப்பில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வேர்டு:

பார்வேர்டு:

இந்த புதிய அம்சம் மூலம் உண்மையான மெசேஜ்கள் மற்றும் பார்வேர்டு செய்யப்பட்ட மேசேஜ்கள் என எளிமையாக வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும். பின்பு இந்த அம்சத்துடன் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு மிக எளிமையாக கான்டாக்ட்களை சேமிக்க உதவுகிறது.

கிளிக் டூ சாட்:

கிளிக் டூ சாட்:

தற்போது வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 'கிளிக் டூ சாட்'(Click to Chat) வசதியின் மூலம் உங்களின் கான்டேக்ட் லிஸ்டில் இல்லாத எண்களுக்கு கூட மெசேஜ் அனுப்ப முடியும். மெசேஜ் அனுப்பவேண்டியவரின் மொபைல் எண் தெரிந்தால் உடனடியாக உரையாடலை துவங்கலாம். ஆனால் அவரிடம் வாட்ஸ்ஆப் கணக்கு இருக்க வேண்டும். இல்லையெனில் வாட்ஸ்ஆப் சாட் செய்யமுடியாது.

பேஸ்புக்:

பேஸ்புக்:

வாட்ஸ்ஆப் ஆனது பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை நாம் அறிவோம். அதனால் இந்த புதிய அம்சம் அறிமுகம் ஆவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இது பயனர்களுக்கு 'Send To Whatsapp' விருப்பத்தின் மூலம் உடனடியாக ஒரு இணைப்பை பகிர அனுமதிக்கும். இனி டிராப் டவுன் மெனுவில் உள்ள ஷேர் விருப்பத்தை அணுக வேண்டிய அவசியம் இருக்காது.

Best Mobiles in India

English summary
Top banks want to communicate with you on WhatsApp : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X