வாவ்.. ஜிமெயில் இவ்வளவு புதிய அம்சங்களா.? இது தெரியாம போச்சே.!

புதிய ஜிமெயில் அப்டேட்டில் கிடைக்கும் டாப் 5 அம்சங்கள் பற்றிய தொகுப்பே இது

|

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலில் இணைக்கப்பெற்றுள்ள (அறிவிக்கப்பட்ட) புதிய அப்டேட்களின் மீதான "மவுசு" நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அந்த அளவிலான அட்டகாசமான அம்சங்களை உள்ளடக்கிய புதிய ஜிமெயில் அப்டேட் ஆனது, ஏற்கனவே பல பயனர்களை அடைந்து விட்ட நிலைப்பாட்டில், அப்டேட்டை கிடைக்காதோர்கள், அதில் என்னென்ன அம்சங்கள் இனம்பெற்று உள்ளது என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளன.

அந்த ஆர்வத்திற்கு தீனி போடும் தொகுப்பே இது. அதாவது, புதிய ஜிமெயில் அப்டேட்டில் கிடைக்கும் டாப் 5 அம்சங்கள் பற்றிய தொகுப்பே இது. அவைகளை அறிந்த பின்னர், மிகவும் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஆனது, ஏன் இன்னும் அதிகமாய் பயன்படுத்தப்படபோகிறது என்கிற காரணத்தை நீங்களே அறிவீர்கள்.

01. கான்பிடென்ஷியல் மோட்:

01. கான்பிடென்ஷியல் மோட்:

ஜிமெயிலின் இந்த அப்டேட் ஆனது, பெயருக்கு ஏற்றபடி, இமெயிலின் மீது பயனர்களுக்கான கடும் கட்டுபாடுகளை வழங்குகிறது. அதாவது இந்த புதிய அம்சம், ஒரு குறிப்புட்ட இமெயிலை பெறும் நபர், தன் தொலைபேசிக்கு கிடைக்கும் எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்படும் ஒரு கடவுக்குறியீட்டை உள்ளிடுவதன் மூலம் மட்டுமே அதை மட்டுமே திறக்க முடியும். மேலும், அனுப்புநர்கள் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு ஒரு காலாவதி தேதியை வைக்க முடியும். அந்த தேதிக்கு பின்னர் குறிப்பிட்ட மின்னஞ்சல் அழிக்கப்படும்.

பிரிண்ட் செய்ய அனுமதிக்கப்படலாமா.? உட்பட பல கட்டுப்பாடுகள் .!

பிரிண்ட் செய்ய அனுமதிக்கப்படலாமா.? உட்பட பல கட்டுப்பாடுகள் .!

மேலும் இந்த அம்சமானது, பெறுநர்கள் பெறும் இமெயிலை நகல் எடுக்கலாமா.? ஷேர் செய்யலாமா.? டவுன்லோட் செய்யலாமா.? பிரிண்ட் செய்ய அனுமதிக்கப்படலாமா.? உட்பட பல கட்டுப்பாடுகளை, அனுப்புனாருக்கு வழங்குகிறது. வணிக நோக்கின் கீழ் ஜிமெயிலை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த அம்சம், மிகவும் முக்கியமான ஒரு அம்சமாகும். தற்போது வரையிலாக இந்த அம்சமானது, அனைவர்க்கும் உருட்டப்படவில்லை என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம்.

02. ஸ்மார்ட் ரிப்ளைஸ்:

02. ஸ்மார்ட் ரிப்ளைஸ்:

ஜிமெயில் தளத்தில், முற்றிலும் புதிய அம்சமான இந்த ஸ்மார்ட் ரிப்ளைஸ் ஆனது, நிறுவனத்தின் ஸ்கேனிங் இமெயில் திறனை அடிப்படையாகக் கொண்ட ஒரு அம்சமாகும். அதாவது இமெயிலை ஸ்கேன் செய்வதின் வழியாக, சாத்தியமான முறையிலான பதில்களை ஜிமெயில் உங்களுக்கு பரிந்துரைக்கும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் தளங்களில், முன்னரே காணப்பட்டுள்ள இந்த அம்சமானது, இம்முறை இன்னும் கூடுதலாக ரிப்ளை செய்வதை எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03. மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி மற்றும் ஹை-ப்ரியாரிட்டி நோட்டிபிகேஷன்ஸ்:

03. மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி மற்றும் ஹை-ப்ரியாரிட்டி நோட்டிபிகேஷன்ஸ்:

கூகுள் நிறுவனம், இப்போது அவர்களின் மெஷின் லேர்னிங் அல்காரிதம் திறன்களின் பயன்படுத்துவத்தின் வழியாக, ஜிமெயில் பயனர்களுக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் தனியுரிமை வழங்குவதை தீவிரப்படுத்தி உள்ளது. ஜிமெயிலில் பயன்படுத்தப்படும் இந்த மெஷின் லேர்னிங் திறனின் கீழ், பயனர்கள் தங்களுக்கு வரும் மிக மிக முக்கியமான மெயில்களை தவற விடவில்லை என்பதை உறுதிப்படுத்தும், ஹை-ப்ரியாரிட்டி நோட்டிபிகேஷன்ஸ் அம்சமும் செயலில் இருக்

04. புதிய கஸ்டமைசேஷன் மற்றும் சேசர்வீஸ் இன்டெக்ரேஷன்ஸ்:

04. புதிய கஸ்டமைசேஷன் மற்றும் சேசர்வீஸ் இன்டெக்ரேஷன்ஸ்:

ஜிமெயில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மாற்றங்களைத் தவிர, டெஸ்க்டாப் வழியாக சேவையை பயன்படுத்துவோருக்கு அதிக அளவிலான மேம்பாடுகளை வழங்குகிறது. அதாவது Google Keep, Google Calendar மற்றும் Google Tasks ஆகியவற்றின் விருப்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு சேவைகளானது, பயனர்கள் தங்கள் காலெண்டறில் குறிப்பிட்ட நிகழ்வைச் சேர்க்க, குறிப்புகளை உருவாக்க அனுமதிக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக இந்த அனைத்தையும் ஒரு விண்டோவின் கீழ் அணுக உதவும்.

How to check PF Balance in online (TAMIL)
05. ஸ்மார்ட் கம்போஸ்

05. ஸ்மார்ட் கம்போஸ்

இந்த புதிய ஸ்மார்ட் கம்பாஸ் அம்சமானது கூகுள் நிறுவனத்தின் ஐ/ஓ டெக்னாலஜி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. ஜிமெயிலில் இடம்பெறும் இந்த புதிய அம்சமானது, கம்போஸ் விண்டோவில் டைப் செய்யும் வேலையை குறைக்கும் வண்ணம், ஆட்டோகம்பிளிட் இமெயில்களை உருவாக்க உதவும். மின்னஞ்சலின் சூழலைப் புரிந்து கொள்ள, இதிலு இயந்திர கற்றல் வழிமுறையை கூகிள் பயன்படுத்தலாம். மேலும் இது அனுப்புபவருக்கு தேவைராயன் அல்லது இமெயிலில் பயன்படுத்தக்கூடிய சொற்றொடர்களை பரிந்துரைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Top 5 Features of the New Gmail Update. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X