ஸ்மார்ட்போன் மூலம் தரமான சினிமா : உதவும் 5 ஆப்ஸ்.!

By Prakash
|

தற்போது வரும் ஸ்மார்ட்போன்களில் மிக அருமையாக வீடியோ மற்றும் எடிட்டிங் போன்ற பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது, சினிமா போன்று துள்ளியமான ஆடியோ மற்றும் வீடியோவை ஸ்மார்ட்போன்களில் உருவாக்கமுடியும், இதற்க்கு தகுந்த ஆப்ஸ்கள் வலைதளத்தில் அதிகமாக உள்ளன.

சில வருடங்களுக்கு முன்பு கணினி அல்லது மடிக்கணினி போன்றவற்றால் தான் வீடியோ எடிட்டிங் செயல்முறை இருந்தது, தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது, நீங்கள் உருவாக்க நினைக்கும் சினிமாவுக்கு உறுதுணையாக உள்ளது இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள்.

அடோப் பிரீமியர் கிளிப்:

அடோப் பிரீமியர் கிளிப்:

அடோப் பிரீமியர் கிளிப் ஆப்ஸ் பொறுத்தமட்டில் கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும். மேலும் இவற்றில் வீடியோ மற்றும் போட்டோ எடிட்டிங் போன்றவற்றை அருமை செயல்படுத்தமுடியும். நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேலரியில் வீடியோக்களை சேமித்துவைத்து, அடோப் பிரீமியர் கிளிப் ஆப்ஸ்-ஐ பயன்படுத்தி மிக அருமையாக சினிமா போன்று உங்களது வீடியோவை உருவாக்க முடியும். பல்வேறு தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளத்தில் உங்களது வீடியோவை பகிர முடியும்.

பஃன்னிமேட் வீடியோ எபெக்ட் :

பஃன்னிமேட் வீடியோ எபெக்ட் :

இந்த ஆப்ஸ் பொதுவாக எளிய வீடியோக்களை உருவாக்க போதுமானது எனக் கூறப்படுகிறது, மேலும் கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தி இவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும். சிறிய பாடல் வீடியோவுக்கு இவை மிகவும் அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மூவி மேக்கர் :

மூவி மேக்கர் :

மூவி மேக்கர் ஆபஸ் அனிமேஷன் மற்றும் விஎப்எக்ஸ், வீடியோ எடிட்டிங் போன்ற அனைத்துவகையிலும் உதவியாக உள்ளது, மூவி மேக்கர் இயக்கம் டிராக்கரின் அனிமேஷன் எபெக்ட்ஸ் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தி இவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும். சிறந்த சினிமாவை இவற்றை கொண்டு உருவாக்க முடியும்.

வீடியோ எடிட்டர்:

வீடியோ எடிட்டர்:

இது ட்ரிம் வீடியோவைப் போன்ற அடிப்படை விஷயங்களைச் செய்ய உங்களுக்கு உதவுகிறது. மேலும் இசைக்கு தகுந்த வீடியோவை மிக அருமையாக எடிட் செய்ய உதவுகிறது இந்த வீடியோ எடிட்டர் ஆப்ஸ்.

 வீடியோ ஷோ :

வீடியோ ஷோ :

பிரபலமான ஹாஷ்டேகுகள் மற்றும் பிரிவுகள் மூலம் எளிதாக உங்கள் வீடியோவுக்கு சிறந்த பாடலை நீங்கள் தேர்வு செய்யலாம். அதன்பின் உங்களுக்கு தகுந்தபடி வீடியோ எடிட்டிங் செய்துகொள்ள உதவுகிறது இந்த ஆப்ஸ். தற்போது அதிகப்படியான மக்கள் இந்த பயன்பாட்டை உபயோகம் செய்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Top 5 Best filmmaking apps that you can try on mobile : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X