ஆண்ட்ராய்டு போன்களுக்கான டாப் 10 போட்டோ எடிட்டர் ஆப்ஸ்!

By Meganathan
|

இன்றைக்கு வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் கேமரா அம்சம் நிறைந்ததாகவும், குறைந்த விலையில் கிடைக்கும் கருவிகளிலும் தலைசிறந்த கேமரா வழங்கப்படுகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செல்பீ மோகம் தான் இதற்குக் காரணம் என்றும் கூறலாம்.

என்ன தான் கருவியில் தலைசிறந்த கேமரா வழங்கப்பட்டாலும், அதனைச் சரியாக பயன்படுத்தினால் மட்டுமே சிறப்பான புகைப்படம் கிடைக்கும். அந்த வகையில் ஓரளவு திறன் குறைந்த கேமரா என்றாலும் முறையாகப் பயன்படுத்தும் போது தலை சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம்.

அப்படியாக ஓரளவு திறன் குறைந்த கேமரா அல்லது அதிக திறன் கொண்ட கேமரா என எவ்வித கருவிகளிலும் தலைசிறந்த புகைப்படங்களை எடுக்க உதவும் போட்டோ எடிட்டர் ஆப்களை தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..

10 : சைமரா (Cymera)

10 : சைமரா (Cymera)

இந்த ஆப் பயன்படுத்தி எவ்வித போட்டோக்களையும் மேம்படுத்த முடியும். அதன் அழகை மெருகேற்றுவதில் சைமரா பல அம்சங்களை கொண்டுள்ளது.
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

09 : ஸ்னாப்சீடு (snapseed)

09 : ஸ்னாப்சீடு (snapseed)

நிக் சாஃப்ட்வேர் எனும் நிறுவனம் தயாரித்த இந்தச் செயலி கொண்டு உங்களது புகைப்படங்களை அளவாக எடிட் செய்து அழகாக்க முடியும்.
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

08: ஃபோ.டோ லேப் (Pho.to Lab)

08: ஃபோ.டோ லேப் (Pho.to Lab)

போட்டோக்களை எடிட் செய்வதை தவிர்த்து புகைப்படங்களை சுற்றி அழகான ஃபிரேம் மற்றும் அழகிய எஃபெக்ட் மற்றும் ஸ்டிக்கர் போன்றவற்றை வழங்குவதில் ஃபோ.டோ லேப் ஆப் சிறந்ததாக இருக்கின்றது.
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

07: விஎஸ்சிஓ (vsco)

07: விஎஸ்சிஓ (vsco)

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் இதுவும் ஒன்று. பேட்டோ எடுப்பதில் துவங்கி, அவற்றை எடிட் செய்வது மற்றும் இன்ஸ்டாகிராம் போன்று புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

06: லிடோ போட்டோ எடிட்டர் (Lidow Photo Editor)

06: லிடோ போட்டோ எடிட்டர் (Lidow Photo Editor)

போட்டோ எடிட் செய்வதை வேகமாக மேற்கொள்வதோடு பல்வேறு அம்சங்களையும் இந்த ஆப் வழங்குகின்றது.
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

05: போட்டோ எடிட்டர் (Photo Editor by dev.macgyver)

05: போட்டோ எடிட்டர் (Photo Editor by dev.macgyver)

ஓஹோ என சொல்ல முடியாது என்றாலும் சரியான அம்சங்களைக் கொண்ட போட்டோ எடிட்டர் ஆப் எனக் கூற முடியும். இலவசமாகக் கிடைக்கும் செயலி என்ற போதும் விளம்பரங்களின் இடையூறு இருக்கத் தான் செய்கின்றது.
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

04: போட்டோ டைரக்டர் (photodirector)

04: போட்டோ டைரக்டர் (photodirector)

சைபர் லின்க் எனும் பெரிய நிறுவனத்தின் செயலி தான் போட்டோ டைரக்டர். பல்வேறு அம்சங்களை வழங்கும் போட்டோ எடிட்டர் செயலியாக இது இருக்கின்றது. நிறைய அம்சங்கள் இருந்தால் அதிகளவு போட்டோக்களை அழகாக்க முடியும்.
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

03: ஏர் பிரஷ் (AirBrush)

03: ஏர் பிரஷ் (AirBrush)

அதிகளவு செல்பீ எடுப்பவர்களுக்கு தலைசிறந்த ஆப் ஏர் பிரஷ் எனலாம். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு ஏற்ப புகைப்படங்களை எடிட் செய்யச் சிறந்த செயலியும் இதுவே.
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

02: அடோப் போட்டோஷாப் எக்ஸ்பிரஸ் (Adobe Photoshop Express)

02: அடோப் போட்டோஷாப் எக்ஸ்பிரஸ் (Adobe Photoshop Express)

அனைத்து வித புகைப்படங்களையும் தரமாக எடிட் செய்வதோடு இல்லாமல் மற்ற செயலிகளை விட அதிகளவு அம்சங்களை இந்த ஆப் வழங்குகின்றது. முறையாகப் பயன்படுத்தும் போது சிறப்பான புகைப்படங்களைப் பெற முடியும்.
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

01: பிரிஸ்மா (Prisma)

01: பிரிஸ்மா (Prisma)

சமீபத்தில் வெளியான இந்த ஆப் இன்று உலக பிரபலமாக இருக்கின்றது. புகைப்படங்களை ஓவியங்களாக மாற்றுவதில் இந்த ஆப் விசேஷமானதாகும்.
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

English summary
Top 10 best photo editing apps on Android Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X