டிக் டாக் செயலிக்கு தடை: சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் உறுதி.!
டிக் டாக் செயலி சட்டம் ஓழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும்,மாணவர்கள், இளம்பெண்கள், குடும்பப் பெண்கள் அனைவரிடமும் டிக் டாக் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது, விவாதத்தின் மீது இன்று பேசிய எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி, ஆபாசமாகவும், சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும் வழிவகை செய்யும் டிக் டாக் செயலியை, மத்திய அரசிடம்
பேசி தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது பதிலளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன். ப்ளூ வேல் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதை போல், டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை
எடுக்கப்படும். என்று தெரிவித்தார்.

டாக் செயலி
இந்த டிக் டாக் செயலி அனைவராலும் பகிரப்படுகிறது, குறிப்பாக சினிமா பாட்டுக்கு ஆடிப்பாடுவது, டப்மேஷ் செய்வது,
சினிமா வசனங்களைப் பேசுவது, சாகசத்தில் ஈடுபடுவது என பல்வேறு செயல்களை இந்த செயலி மூலம் பதிவு செய்கின்றனர்.

முழுநேரமும் பார்த்து பொழுதைக் கழிக்கின்றனர்
மேலும் சிலர் டிக் டாக் போன்ற 'மியூசிக்கலி' போன்ற பல்வேறு செயலிகளை டவுன்லோடு செய்து அதையே முழுநேரமும் பார்த்து
பொழுதைக் கழிக்கின்றனர். இந்த செயலி மூலம் வீடியோ மார்பிங் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.

சட்டம் ஓழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும்
டிக் டாக் செயலி சட்டம் ஓழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும்,மாணவர்கள், இளம்பெண்கள், குடும்பப் பெண்கள் அனைவரிடமும் டிக் டாக் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. இது ஆபாசத்தின் வடிவமாக வீடியோக்கள் பதிவு செய்யப்படுகின்றன.

கல்லூரி மாணவ மாணவியர் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்
பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் கல்வி பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடை செய்யவேண்டும் என பல அரசியல் கட்சித் தலைவர்களும் தடை செய்யக் கோரி வருகின்றனர். இந்நிலையில் கலாச்சாரச் சீரழிவுக்கு வழிவகுக்கும் இத்தகைய 'டிக் டாக்' செயலியைத் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? '' என தமீமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.

மணிகண்டன்
இதற்குப் பதிலளித்த தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன், '' 'டிக் டாக்' செயலி எங்கிருந்து இயக்கப்படுகிறது
என்பதை ஆராய்ந்து அவர்களை தொடர்புக் கொண்டு தடை விதிக்க முயற்சி எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








