தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் வெளிவந்துள்ளது உழவன் மொபைல் ஆப்.!

இந்த உழவன் மொபைல் ஆப் சிறப்பம்சம் என்னவென்றால் அடுத்த 4 நாட்களுக்கான தட்பவெட்ப நிலை குறித்தும் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

தமிழக அரசின் சார்பில் புதிய உழவன் மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இந்த உழவன் ஆப் வசதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி வைத்தார்.

தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில்  வெளிவந்துள்ளது உழவன் மொபைல் ஆப்.!

மேலும் 2018-2019 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டின் போது துணை முதல்வர், நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்ததன் படி இந்த புதிய உழவன் ஆப் நேற்று விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக அனைத்து விவசாயிகளுக்கும் இந்த ஆப் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உழவன் மொபைல் ஆப் பொறுத்தவரை வேளாண்மை திட்டங்களின் மானிய விவரங்கள், பயிர் காப்பீடு விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு
நேரடியாக அறிவிக்கப்படும். மேலும் டிராக்டர்,பவர் டில்லர் மற்றும் நிழல் வலைக்குடில், பசுமைக்குடில் போன்றவற்றிர்கான மானியம் பெற முன்பதிவு செய்ய முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில்  வெளிவந்துள்ளது உழவன் மொபைல் ஆப்.!

இந்த உழவன் மொபைல் ஆப் சிறப்பம்சம் என்னவென்றால் அடுத்த 4 நாட்களுக்கான தட்பவெட்ப நிலை குறித்தும் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த மொபைல்ஆப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கூகுள் பிளே ஸ்டோரில் இந்த உழவன் மொபைல் ஆப் எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

மேலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பேருந்து நிலையங்கள், வணிக வளாங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இலவச வைஃபை சேவை
வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்சமயம் சென்னை திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இருக்கிறது.

தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில்  வெளிவந்துள்ளது உழவன் மொபைல் ஆப்.!

குறிப்பாக இச்சேவையானது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக பொதுமக்கள் ஒரு நாளை 20 நிமிடங்கள் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
TN Govt Launches Mobile App Bi lingual Uzhavan for Farmers ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X