Home
Apps

டிண்டர் போல் நாய்களுக்கு டேட்டிங் ஆப்.! புடிச்சா ரைட்ல ஸ்வைப் பண்ணுங்க.!

In what will come as good news for dog lovers, there exists an app.டிண்டர் டேட்டிங் ஆப் போல நாய் பிரியர்களுக்கான ஒரு பிரத்தியேக டேட்டிங் ஆப் செயலியை லிதுவேனியா நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

டிண்டர் டேட்டிங் ஆப் போல நாய் பிரியர்களுக்கான ஒரு பிரத்தியேக டேட்டிங் ஆப் செயலியை லிதுவேனியா நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

டிண்டர் போல் நாய்களுக்கு டேட்டிங் ஆப்.! புடிச்சா ரைட்ல ஸ்வைப் பண்ணுங்க

இந்த டேட்டிங் ஆப் மூலம் உங்களுக்கு பிடித்தமான நாய் நண்பர்களைத் தேர்வு செய்து நேரில் சந்தித்து டேட் ஒன்றை ஃபிக்ஸ் செய்து, அந்த நாய்களைத் தத்தெடுத்துக்கொள்ள முடியும்.

"கெட்பெட்" ஆப்

டிண்டர் செயலி போலவே உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலிக்கு, அந்நிறுவனம் "கெட்பெட்"(GetPet) என்று பெயரிட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் நாய்கள் காப்பகத்தில் உள்ள நாய்களின் ப்ரோபைல்களை ரைட் ஸ்வைப் செய்து உங்களுக்குப் பிடித்த நாய்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

நாய்களுக்கு மறுவாழ்வு

நாய்களுக்கு மறுவாழ்வு

இந்த கெட்பெட் செயலி நாய்களுக்கான டிண்டர் ஆப் போல செயல்படுகிறது. இந்தச் செயலியை உருவாக்கிய வைடாஸ் கெசெவிசியஸ் கூறுகையில், கெட்பெட் செயலி அனாதையாக விடப்பட்ட தெரு நாய்களுக்கு மறுவாழ்வு வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நாய்களுக்கான பயோ தகவல்

நாய்களுக்கான பயோ தகவல்

நாய்களுக்கான தனி தனி ஃப்ரொபைல் இந்தச் செயலியில் உருவாக்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாய்களுக்கான பயோ தகவலும் வழங்கப்பட்டுள்ளது. பாவ் லைக் மீ மற்றும் பார்க் பட்டி போன்ற நிறுவனங்களுடன் இணைத்து 1000 கணக்கான நாய் நண்பர்களின் ப்ரொபைல்களை இந்த செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

விரைவில் பூனை, பறவை என அனைத்து செல்லப்பிராணிகளும்

விரைவில் பூனை, பறவை என அனைத்து செல்லப்பிராணிகளும்

இப்பொழுது நாய்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலியில், விரைவில் பூனை, பறவை என அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் ப்ரொபைல்களை உருவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இந்தச் செயலியை பயன்படுத்தி தினமும் 3 முதல் 4 நாய்கள் தத்தெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. செல்லப்பிராணி பிரியர்களிடம் இந்தச் செயலி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாராட்டு

பாராட்டு

தெருக்களில் திரியும் நாய்களுக்கு புதிய நண்பரையும் மற்றும் புதிய குடும்பத்தையும் வழங்கும் இந்தச் செயலியை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Tinder for dogs An app to choose the perfect pet : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X