உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் டின்டர் ஆப்.!

பாதுகாப்பின் உச்சமாக டின்டர் செயலியில் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

|

டின்டர் ஆப், நவீன காலத்து டேட்டிங் செயலியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்த செயலியில் பிழை கண்டறியப்பட்டது. இது பயனரின் தனிப்பட்ட புகைப்படங்களை பொது வைபை இணைப்பில் இருக்கும் போது ஹேக்கர்களால் எடுக்க வழி செய்தது. பிழை கண்டறியப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் டின்டர் இதனை சரி செய்து விட்டதோடு, செயலியை முன்பை விட அதிக பாதுகாப்பானதாக மாற்றியது.

உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் டின்டர் ஆப்.!

பாதுகாப்பின் உச்சமாக டின்டர் செயலியில் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் பயனரின் சானத்தில் இருந்து டின்டர் சர்வெருக்கு அனுப்பப்படும் தகவல்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது. இது குறித்து பீபூம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி, சென் என்பவருக்கு டின்டர் இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரான் வைடன் என்பவரும் டின்டர் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படங்களை என்க்பிர்ட் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இஸ்ரேலை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் டின்டர் ட்ரிஃப்ட் பெயரில் செயலியில் உள்ள பயனர் புகைப்படங்களை மிக எளிமையாக திருட முடியும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை கருத்தில் கொண்டு செனட்டர் டின்டர் ஆப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.


இந்த பிரச்சனை எழும் முன்பு வரை டின்டர் செயலியின் குறுந்தகவல்கள் மட்டும் என்க்ரிப்ட் செய்யப்பட்டன. இதனால் பயனர்களால் மிக எளிமையாக புகைப்படங்களை ஹேக் செய்ய முடிந்தது. மேலும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட தகவல்களும் மிக எளிமையாக பிரிக்கக்கூடியதாக இருந்தது.

எனினும் பிப்ரவரி மாத வாக்கில் டின்டர் தனது செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படங்களை என்க்ரிப்ட் செய்ய முடிவு செய்ததோடு கமாண்ட் அளவுகளை சாதாரணமாக மாற்றியது, இதனால் ஹேக்கர்களால் மிக எளிமையாக ஊடுறவ முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் டின்டர் ஆப்.!

மேலும் டின்டர் பயனரின் மொபைல் நம்பர்கள் ஃபேஸ்புக்குடன் இணைக்கப்பட்டு இருப்பதை வைத்து ஹேக்கர்கள் கணக்குகளில் ஊடுறும் பிழையை டின்டர் சரி செய்திருக்கிறது. புதிய அப்டேட் மூலம் டின்டர் மிகவும் பாதுகாப்பானதாகவும், ஹேக்கர்களால் அவ்வளவு எளிதில் ஊடுறுவ முடியாத வகையில் இருக்கிறது.
Best Mobiles in India

English summary
Tinder app is now completely encrypted : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X