இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்! வருகிறது புதிய அப்டேட்!
ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலிக்கு போட்டியாக டிக் டாக் நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்யப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. இது டிக் டாக் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் சிறப்பம்சங்களை காப்பி அடிக்கிறதா டிக்டாக்
இன்ஸ்டாகிராம் செயலியில், க்ரிட் ஸ்டைல் லேஅவுட், அக்கவுண்ட் ஸ்விட்ச்சர், டிஸ்கவர் பேஜ் போன்ற அம்சங்களை ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியிருந்தது. அதேபோல் தற்பொழுது டிக்டாக் செயலியிலும் இதுபோன்ற சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

க்ரிட் ஸ்டைல் லேஅவுட் அம்சத்தை களமிறக்கும் டிக்டாக்
டிக்டாக்நிறுவனம் க்ரிட் ஸ்டைல் லேஅவுட் சேவையின் கீழ் தனது செயலியைச் சோதனை செய்து வருவதாகப் பிரபல டிக்டாக் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி ரிவர்ஸ் என்ஜினியரிங் வல்லுநரான ஜேன் மன்ச்சுன் வொங் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய அம்சங்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.

மேம்படுத்தப்படும் டிக்டாக்
டிக்டாக் செயலியில், பல புதிய அம்சங்களை வழங்குவதற்காக டிக்டாக் செயலி மேம்படுத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தப் பல பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் அதிக டவுன்லோட்
இந்த ஆண்டில் மட்டும் டிக்டாக் செயலி 28 சதவிகித இன்ஸ்டால்களை உலகளவில் பெற்றுள்ளது. இதுவரை உலகளவில் , இந்த டிக்டாக் செயலியை 70 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பயனர்கள் டிக்டாக் செயலியை டவுன்லோட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications