டிக்டாக்கில் வீடியோ பதிவிடும் பயனர்களுக்கு இப்படியொரு சோதனை வருமா? உஷார்.!

|

TikTok செயலியில் இப்போது புதிய சேலஞ் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புதிய ட்ரெண்டிங் சேலஞ் என்னவென்றால் S5 ஃபில்டர் என்ற ஃபில்டரை பயன்படுத்தி கண்ணின் நிறத்தை மாற்றி காட்டுவதாகும். இதில் மக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர் என்றாலும், கண்களுக்கு இதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.

புதிய S5 பில்டர் சேலஞ்

புதிய S5 பில்டர் சேலஞ்

இந்த S5 பில்டர் சேலஞ்சை செய்ய, டிக்டாக் பயனர்கள் தங்களின் பின்புற கேமராவைப் பிளாஷ் லைட் உடன் ஆன் செய்ய வேண்டும். பின்பு கேமராவை நேரடியாகப் பார்க்க வேண்டும், இதனால் அவர்களின் இயல்பு நிற கண்கள் நீல நிறத்தில் மாற்றப்பட்டு புகைப்படம் அல்லது வீடியோவாக எடுக்க முடியும். இந்த சேலஞ்சை தான் அனைவரும் இப்பொழுது செய்து வருகின்றனர்.

கண்களை நிறம் மாற்றும் சேலஞ்

கண்களை நிறம் மாற்றும் சேலஞ்

டிக்டாக்கில் இந்த S5 ஃபில்டர், நிஜ பழுப்பு நிற கண்களை தற்காலிகமாகப் நீல நிறமாக மாற்ற முடியும் என்பதை விளக்கும் வீடியோ பதிவை மாலியாப்ரூ என்ற டிக்டாக் பயனர் முதலில் வெளியிட்ட பின்னர், இந்த டிரெண்ட், சேலஞ்சாக உருமாறத் தொடங்கியது என்று கூறப்படுகிறது. இதில் அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

BSNL-பதுங்கிய புலி பாய்ந்தது: ஜியோவை விட இரு மடங்கு நன்மை- குறைந்த விலையில் தினசரி 3ஜிபி டேட்டா!BSNL-பதுங்கிய புலி பாய்ந்தது: ஜியோவை விட இரு மடங்கு நன்மை- குறைந்த விலையில் தினசரி 3ஜிபி டேட்டா!

இந்த சேலஞ்சை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தும் பயனர்கள்

இந்த சேலஞ்சை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தும் பயனர்கள்

பலர் இந்த சேலஞ்சை செய்திருந்தாலும் கூட, இன்னும் சிலர் உண்மையில் இந்த S5 பில்டர் வேலை செய்யாது என்றும் பதிவு செய்துள்ளனர். உண்மையில் உங்கள் கண்கள் நிறம் மாறவில்லை, ஃபில்டர் தான் வீடியோக்களில் சற்று நீல நிறத்தை மட்டும் சேர்த்து உங்கள் கண்கள் நிறம் மாறியது போல் காட்டுகிறது என்று விளக்கி கூறியுள்ளனர்.

S5 பில்டர் சேலஞ் ஆபத்தானதா? மருத்துவர்கள் பதில் என்ன?

S5 பில்டர் சேலஞ் ஆபத்தானதா? மருத்துவர்கள் பதில் என்ன?

இந்த S5 பில்டர் சேலஞ் ஆபத்தானதா? இதனால் கண்களுக்கு ஏதேனும் பாதிப்பு உண்டா என்ற கேள்விக்கு அமெரிக்கக் கண் மருத்துவ அகாடமி பதில் அளித்துள்ளது. மனிதனின் கண்களில் பிரகாசமான ஒளி விளக்கை விழச் செய்வதன் மூலம் நீண்டகால பக்க விளைவுகள் என்று எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும்...

ரூ.8,500 மட்டுமே: அட்டகாச Samsung Galaxy A01 - என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?ரூ.8,500 மட்டுமே: அட்டகாச Samsung Galaxy A01 - என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?

ஃபிளாஷ் பிளைண்ட்நெஸ் என்றால் என்ன?

ஃபிளாஷ் பிளைண்ட்நெஸ் என்றால் என்ன?

மனிதனின் கண்களில் சக்திவாய்ந்த ஃபிளாஷ் லைட்களை நேரடியாக விழச்செய்வதன் மூலம் ஃபிளாஷ் பிளைண்ட்நெஸ் flash blindness) என்றழைக்கப்படும் குறுகிய கால குருட்டுத்தன்மையை அனுபவிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பயனர்கள் சில நிமிடங்கள் வரை, தற்காலிக கருப்பு புள்ளியை மட்டுமே காணமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் நிறுத்திய பாடில்லை

இன்னும் நிறுத்திய பாடில்லை

இந்த S5 பில்டர் சேலஞ்சை செய்ய முயல்பவர்களை வேலைவெட்டி அற்ற போக்கற்றவர்கள் என்று பலரும் திட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள், இருந்தும் யாரும் இதை நிறுத்திய பாடில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை செய்து வருவதனால் கடுப்பில் சிலர் அறிவுரையையும் வழங்கி வருகின்றனர்.

Jio அதிரடி ஒவ்வொரு ரீசார்ஜ் உடன் ரூ.300 வரை கேஷ்பேக்! அம்பானியின் ராஜ தந்திரம்!Jio அதிரடி ஒவ்வொரு ரீசார்ஜ் உடன் ரூ.300 வரை கேஷ்பேக்! அம்பானியின் ராஜ தந்திரம்!

கண்களுடன் விளையாட வேண்டாம்

கண்களுடன் விளையாட வேண்டாம்

வெறும் லைக்கிற்காக உங்கள் கண்களுடன் விளையாட வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுரைத்துள்ளனர். சக்திவாய்ந்த ஒளியினால் கண்பார்வை பறிபோகாது என்றாலும் கூட, கண்ணின் சக்தி குறையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
TikTok Newest Trend Is S5 Filter That Can Temporarily Change Eyes Color : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X