டிக்டாக்-ல் வந்த புதிய கட்டப்பாடு.! என்ன தெரியுமா?
டிக்டாக் செயலியை உலகளவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது,இன்று வரை அதிக பிரபலமாக உள்ளது இந்த டிக்டாக் செயலி.

பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப்
பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும்,
தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் டிக்டாக் நிறுவனம் பெற்றோர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை அதன் செயலியில் கேட்கிறது. கண்டிப்பாக
இது அவர்களின் 16வயதுக்கும் குறைவான குழந்தைகளின் அக்கவுண்ட்களை உன்னிப்பாகக் கண்காணிக்கவும். டைரக்ட்மெசேஜ்களை டிசேபிள் செய்யவும் அனுமதிக்கிறது.

எனவே மக்களின் கன்டென்ட் வியூவிங்கையும் (எதெல்லாம் பார்க்கலாம்) என்பதையும் கட்டுப்படுத்த உதவுகிறது. அதன்படி டிக்டாக் நிறுவனம் இந்த புதிய அம்சத்தினை பேமிலி பேரிங் (Family Pairing) என்று அழைக்கிறது. இந்த
வசதி மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் டிக்டாக் அக்கவுண்ட்டை தம்முடன் இணைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.மேலும் இதன் வழியாக அவர்களது பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அனுமதிக்கிறது.இந்த அம்சம் வரும் வாரங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக 13வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட டிக்டாக்கில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்க அனுமதிக்கப்படுவதால் இந்தஅம்சத்தை சேர்ப்பது டிக்டாக் தளத்திற்கு அவசியமாகிவிட்டது. இதனால்தான் 16வயதிற்கு உட்பட்ட அனைத்து பயனர்களுக்கும் டைரக்ட் மெசேஜ் வருவதை தானாகவே டிசேபிள் செய்ய பைட் டான்ஸுக்கு சொந்தமான டிக்டாக் தளம் முடிவு செய்தது.
இந்த நிலையில்தான் மற்றொரு கட்டுப்பாடாக பேமிலி பேரிங் களமிறங்குகிறது.

மேலும் டிக் டாக்கில் அணுக கிடைக்கும் ஸ்கிரீன் டைம் மேனேஜ்மென்ட் வழியாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் டிக்டாக்கில எவ்வளவு நேரம் செலவிட முடியும் என்பதைக் கட்டுப்படுத்த முடியும் என டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிக்டாக் ரெஸ்ட்ரிக்டட் மோட் வழியாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பொருந்தாத கன்டென்ட்டுகள் காட்சிப்படுவதை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இந்த வசதி ஒரளவு பாதுகாப்பாகவும், அந்நியர்களிடமிருந்து விலக்கி வைக்க உதவும் என்றும் டிக்டாக் பரிந்துரை செய்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பின்தொடர்பவர்கள் மட்டுமே ஒருவருக்கொருவர் மெசேஜ் அனுப்ப முடியும், மேலும் புகைப்படங்கள்அல்லது வீடியோக்களை மெசேஜ் வழியாக அனுப்ப நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் டிக்டாக்
நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications