டிக்டாக் செயலியில் "அந்த" வசதி அறிமுகம்.!

அமெரிக்காவில் 13வயதுகுட்பட்ட சிறுவர்களிடம் அவர்களின் தனிப்பட்ட விவரத்தை சேகரிக்கும் போது அவரவர்களின் பெற்றோர்களின் அனுமதியையும் வாங்க வேண்டும்.

|

டிக்டாக் செயலியை உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று சில இடங்களில் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து இந்த செயலில் மிக அதிகமான வீடியோக்கள
பதிவேற்றப்படுகின்றன.

டிக்டாக் செயலியில்

டிக்டாக் செயலியை பயன்படுத்தி ஒரு பாடலையோ அல்லது வசனத்தையோ பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்றாற்போல் நடனமாடுவது, வசனம் பேசுவது,நடித்து காட்டுவது போன்றவற்றை செய்யலாம். மேலும் இந்த செயலி மூலம் மக்கள் அதிகளவில் வீடியோக்களை வெளியிடுகின்றனர்.

 ஆபாசமான வீடியோக்கள்

ஆபாசமான வீடியோக்கள்

இந்த செயலி ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்றால் கூட, இதற்கும் அதிக மக்கள் அடிமையாகி வருகின்றனர், குறிப்பாக ஆபாசமான வீடியோக்கள் பலவும் இதில் உலாவுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தடை செய்யவேண்டும்

தடை செய்யவேண்டும்

டிக்டாக் செயலி சீன நாட்டை சேர்ந்த நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. பின்பு இந்த செயலியை தடை செய்யவேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன, குறிப்பாக தமிழகத்திலும் டிக்டாக் செயலி தடை செய்யவேண்டும் என அமைச்சர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

அன்மையில் டிக்டாக் செயலி புதிய சர்ச்சையில் சிக்கியது, அது என்னவென்றால் அமெரிக்காவில் உள்ள குழுந்தைகளின் ரகசிய தவல்களை அவர்களின் பெற்றோர்களின் அனுமதியின்றி பெற்றதாக டிக்டாக் செயலி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

13வயதுகுட்பட்ட சிறுவர்களிடம்..

13வயதுகுட்பட்ட சிறுவர்களிடம்..

அமெரிக்காவில் 13வயதுகுட்பட்ட சிறுவர்களிடம் அவர்களின் தனிப்பட்ட விவரத்தை சேகரிக்கும் போது அவரவர்களின் பெற்றோர்களின் அனுமதியையும் வாங்க வேண்டும். ஆனால் அந்த விதியை டிக்டாக் செயலி கடைபிடிக்கவில்லை என்றும் விதியை மீறி குழந்தைகளின்தகவல்களை திரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம் டிக்டாக் செயலிக்கு இந்திய மதிப்பில் சுமார் 40கோடி ரூபையை அபராதமாக விதித்துள்ளது.

ஃபில்டர் கமெண்ட்ஸ்

ஃபில்டர் கமெண்ட்ஸ்

இந்நிலையில் புதிய பாதுகாப்பு அம்சமாக ஃபில்டர் கமெண்ட்ஸ் (filiter comments) என்ற அப்டேட்டை டிக்டாக்செயலி தற்போது கொண்டுவந்துள்ளது, வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்வதை வடிகட்டும் விதமாக இந்த புதிய அப்டேட் விடப்பட்டுள்ளது.

இந்தி, ஆங்கிலம்

இந்தி, ஆங்கிலம்

குறிப்பாக இந்தி, ஆங்கிலம்,ஆகிய மொழிகளில் பல வார்த்தைகளை தானகவே இந்த ஃபில்டர் கமெண்ட்ஸ் தடுத்து நிறுத்திவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 கமெண்டில் வராமல் தடுத்துக்கொள்ளலாம்..

கமெண்டில் வராமல் தடுத்துக்கொள்ளலாம்..

பின்பு நமக்கு தேவையில்லை என்று நினைக்கும் வார்த்தைகளையும் அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. இதனால் குறிப்பிட்ட வார்த்தைகளை கமெண்டில் வராமல் தடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
tiktok-introduces-new-safety-feature-in-india: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X