நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.!

|

டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்கள்,கல்லூரி இளைஞர்கள்

பள்ளி மாணவர்கள்,கல்லூரி இளைஞர்கள்

பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. இருந்தபோதிலும் பல்வேறு இளைஞர்கள் இந்த செயலில் அதிக லைக்குகள் வாங்க வேண்டும் என புதிய புதிய ஆபத்தான சேலஞ்-களை செய்த
வண்ணம் உள்ளனர்.

 எட்யுடாக் (Edutok)

எட்யுடாக் (Edutok)

இந்நிலையில் டிக்டாக் எட்யுடாக் (Edutok) என்ற புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது இந்த புதிய அம்சம் என்னவென்றால் பயனர்கள் செயலியில் இருந்தபடி தங்களுக்கு தெரியாத தகவல்களை கற்றுக் கொள்ள முடியும்.

ஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்?ஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்?

#Edutok எனும் ஹாஷ்டேக்

#Edutok எனும் ஹாஷ்டேக்

டிக்டாக் கொண்டுவந்தள்ள இந்த புதிய அம்சம் மூலம் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தரவுகள் உருவாக்கப்பட்டு அவை #Edutok எனும் ஹாஷ்டேக் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இவை இதுவரை 4800 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.மேலும் இவை 180கோடிக்கும் அதிக முறை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன எனத் தகவல் கிடைத்துள்ளது.

ட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை! இனி எல்லாமே சேஃப்!ட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை! இனி எல்லாமே சேஃப்!

உயர் ரக கல்வி

மேலும் இந்த எட்யுடாக் திட்டத்தின் கீழ் டிக்டாக் நிறுவனம் ஜோஷ் டாக்ஸ் மற்றும் திஃநட்ஸ் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது. குறிப்பாக இதன் மூலம் டிக்டாக் பயனர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில்உருவாக்கப்படும் உயர் ரக கல்வி சார்ந்த தகவல்களை முதல்முறை டிக்டாக் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

டாப்பர், மேட் ஈசி

இதனுடன் டிக்டாக் நிறுவனம் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவவனங்களான டாப்பர், மேட் ஈசி, கிரேடு அப் போன்வற்றுடன் இணைந்து பாடங்கள் தொடர்பான தரவுகளை செயலியில் வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் கல்வி சார்ந்த பல்வேறு தகவல்ளை தகவல்களை வெவ்வேறு பிரிவுகள் மற்றும் வெவ்வேறு மொழிகளில் பெற முடியும்.

Best Mobiles in India

English summary
TikTok enters the eLearning market with its EduTok program in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X