TikTok பயன்பாட்டிற்கு ஏற்பட்ட சோகம் - வச்சு செய்யும் YouTube பயனர்கள்!

|

கொரோனாவிற்கு பின் சீனா என்று கேட்டாலே மக்கள் கொந்தளிக்கத் தான் செய்கின்றனர். பிரபலமான பயன்பாடான டிக்டாக், யூடியூப் Vs டிக்டோக் என்ற யூடியூப் நட்சத்திரம் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவுக்குப் பிறகு, கூகிள் பிளே ஸ்டோரில் அதன் மதிப்பீட்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூப் Vs டிக்டாக்

யூடியூப் Vs டிக்டாக்

கடந்த சில நாட்களாக, யூடியூப் மற்றும் டிக்டாக் ஆதரவாளர்களிடையே இணையத்தில் ஒரு பெரிய பிரளயமே ஏற்பட்டது. இதனால் யூடியூப் Vs டிக்டாக் என்ற தலைப்பின் கீழ் ஏராளமான கேளிக்கை மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. குறிப்பாக "யூடியூப் Vs டிக்டாக் : தி எண்ட்" என்ற வீடியோவுக்குப் பிறகுதான் சமூக ஊடகங்களை இந்த யூடியூப் Vs டிக்டாக் பிரளயம் புயலால் தாக்கத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் Vs டிக்டாக்: தி எண்ட் வீடியோ

யூடியூப் Vs டிக்டாக்: தி எண்ட் வீடியோ

இந்த யூடியூப் Vs டிக்டாக்: தி எண்ட் வீடியோவை மே 8 ஆம் தேதி யூடியூப் கேரிமினாட்டி (அஜே நகர்) என்பவர் பகிர்ந்து கொண்டார், அமீர் சித்திகியை சில தினங்களுக்கு முன்பு இவர் வறுத்தெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிக்டாக் நட்சத்திரங்கள் பலரையும் வீடியோவில் வறுத்தெடுத்துள்ளார். இந்த வீடியோ, சுமார் 70 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து, இந்த வீடியோ அதிகம் லைக் செய்யப்பட்ட இசை அல்லாத இந்திய யூடியூப் வீடியோவாக மாறியது.

IRCTC புதிய விதி கட்டாயம்! இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை!IRCTC புதிய விதி கட்டாயம்! இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை!

அகற்றப்பட்ட வீடியோ

அகற்றப்பட்ட வீடியோ

இருப்பினும், யூடியூப்பின் சேவை விதிமுறைகளை மீறியதற்காக இந்த வீடியோ விரைவில் அகற்றப்பட்டது. இந்த வீடியோ சமூகத்தில் வினோதமான அவதூறுகளை உருவாக்குவதாகப் பரவலாகப் புகாரளிக்கப்பட்டது, அதேபோல், வினோதமான நபரின் வாழ்க்கையின் மதிப்பை மனிதநேயமற்றது மற்றும் இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்றும் சிலர் இந்த வீடியோவை குறிப்பிட்டுப் புகாரளித்துள்ளனர்.

புதிய சர்ச்சையாக உருவம் எடுத்த யூடியூப் Vs டிக்டாக்

புதிய சர்ச்சையாக உருவம் எடுத்த யூடியூப் Vs டிக்டாக்

வீடியோ அகற்றப்பட உடனேயே, யூடியூப் நட்சத்திரத்திற்கு நீதி கோரி மற்றும் நாட்டில் டிக்டாக்கை தடை செய்யுமாறு பயனர்கள் டிவிட்டரில் புதிய சர்ச்சையாக உருவம் எடுத்தது. யூடியூப் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, இந்த வீடியோ பாதிப்பில்லாத நகைச்சுவையான கருத்துக்களை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CarryMinati மற்றும் #JusticeForCarry உள்ளிட்ட பல ஹேஷ்டேக்குகளும் சமூக ஊடக சேவையில் வைரல் ஆகியது.

டிக்டாக் பயன்பாட்டின் மதிப்பீடு

டிக்டாக் பயன்பாட்டின் மதிப்பீடு

இருப்பினும் கூட, பிளே ஸ்டோரில் டிக்டாக் மதிப்பீட்டில் வீடியோ குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. டிக்டாக் பயன்பாட்டின் மதிப்பீடு 4.5 மதிப்பெண்ணில் இருந்து 3.2 ஆகக் குறைந்துள்ளது. கூடுதலாக, பல யூடியூப் பயனர்கள் சில பிரபலமான டிக்டோக் நட்சத்திரங்களின் யூடியூப் சேனலிற்கு சென்று அவர்களின் வீடியோகளை டிஸ்லைக் செய்து அதிகம் விரும்பப்படாத வீடியோக்களாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

சீன பயன்பாட்டிற்கு தடை வேண்டுமா?

சீன பயன்பாட்டிற்கு தடை வேண்டுமா?

பல YouTube பயனர்கள் யூடியூப் உள்ளடக்க உருவாக்கங்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி டிக்டாக் பயன்பாட்டையும் பலர் அன்இன்ஸ்டால் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. சில பயனர்கள் தங்கள் நண்பர்களைக் கூகிள் பிளே ஸ்டோரில் டிக்டாக்கிற்கு மோசமான மதிப்பீடுகளை வழங்க ஊக்குவிக்கிறார்கள், அதே நேரத்தில் சீன பயன்பாட்டை நாட்டில் தடை செய்ய வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

Best Mobiles in India

English summary
TikTok App's Rating Dropped Drastically On Play Store : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X