Home
Apps

ஆண்ட்ராாய்டு ஸ்மார்ட்போனில் திரையை ரெக்கார்டு செய்ய சூப்பர் ஆப்ஸ்.!

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஸ்கிரீனை ரெக்கார்டு செய்வது சற்றே குழப்பமான காரியமாகும், எனினும் இவ்வறு செய்ய சிறப்பான சூப்பர் வழிமுறைகளை தான் இங்கு தொகுத்திருக்கிறோம்.

By Meganathan S

ஸ்மார்ட்போனில் என்னவாகிறது என்பதை பதிவு செய்ய வேண்டுமா?

பொதுவாக ஸ்மார்ட்போனினை ரெக்கார்டு செய்ய பல காரணங்கள் இருக்கலாம், நீங்கள் விளையாடும் கேமினை ரெக்கார்டு செய்து மற்றவர்களுக்கு காண்பிக்க, ஏதேனும் செயலியில் நீங்கள் பயன்படுத்தும் புதிய அம்சத்தை பதிவு செய்யவோ அல்லது ஸ்மார்ட்போனில் பெற்றோருக்கு தெரியாத அம்சத்தை வீடியோ வடிவில் பயன்படுத்தவும் இருக்கலாம்.

ஆண்ட்ராய்டில் திரையை ரெக்கார்டு செய்யும் ஆப்ஸ்.!

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஸ்கிரீனை ரெக்கார்டு செய்வது சற்றே குழப்பமான காரியமாகும், எனினும் இவ்வறு செய்ய சிறப்பான சூப்பர் வழிமுறைகளை தான் இங்கு தொகுத்திருக்கிறோம். ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்ய பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கின்றன. இவை பொதுவாக இலவசமாக கிடைத்தாலும், சிலவற்றில் விளம்பரங்களும், சிலவற்றில் முக்கிய அம்சங்களை பணம் கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.

ஸ்மார்ட்போன் வேகம்

ஸ்மார்ட்போன் வேகம்

இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தினால் ஸ்மார்ட்போனிற்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா என்ற கேள்வி பலருக்கும் எழும். இந்த கேள்விக்கு பொருத்தமான பதில், இது ஒவ்வொரு ஸ்மார்ட்போன் மாடலுக்கும் வேறுபடும். சில ஸ்மார்ட்போன்களில் அதிக தரமுள்ள வீடியோ அல்லது கேம்களை விளையாடும் போது ஸ்மார்ட்போன் வேகம் குறையலாம்.

எனினும், கவலை வேண்டாம் ஸ்மார்ட்போன்களுக்கு இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. ஆன்ட்ராய்டு ஸ்கிரீன் ரெக்கார்டு செய்ய ஏதுவான சூப்பர் செயலிகளின் விவரத்தை தொடர்ந்து பார்ப்போம்.

1 - டியு ரெக்கார்டர் (DU Recorder):

1 - டியு ரெக்கார்டர் (DU Recorder):

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் திரையை ரெக்கார்டு செய்யும் விவரம் அறிந்தவர்கள் பலரும் பரிந்துரைக்கும் செயலியாக டியு ரெக்கார்டர் இருக்கிறது. இதனை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது என்பதோடு பல்வேறு அம்சங்கள் உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும். இந்த செயலி மூலம் ரெக்கார்டு செய்வதை கட்டுப்படுத்த இரண்டு வழிமுறைகள் உள்ளன - ஒன்று பாப் அப் விண்டோ மூலம் கட்டுப்படுத்துவது மற்றொன்று நோட்டிஃபிகேஷன் பார் மூலம் கட்டுப்படுத்துவது.

செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று வீடியோ ரெசல்யூஷனை (240p இல் இருந்து 1080p), தரத்தை ( 1Mbps இல் இருந்து 12Mbps ஆகவோ அல்லது ஆட்டோ மோட்) தேர்வு செய்யலாம், FPS -ஐ (15 இல் இருந்து 60, அல்லது ஆட்டோ), ஆப்ஷனை தேர்வு செய்து ரெக்கார்டு ஆடியோ மற்றும் ஃபைல் சேமிக்கப்பட வேண்டிய இடத்தை குறிப்பிட வேண்டும். நீங்கள் தேர்வு செய்த செட்டிங் முழுமை பெற தேவைப்படும் நேரத்தை திரையில் பார்க்க முடியும். ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் ஆப்ஷனை எனேபிள் செய்து ரெக்கார்டிங் ஆப்ஷன்களை இயக்க முடியும்.

மற்ற அம்சங்களை பொருத்த வரை வீடியோக்களை ஜிஃப் (Gif) ஆகவும், திரையில் டேப்களை தோன்ற செய்வது மற்றும் வாட்டர்மார்க் உள்ளிட்டவற்றை சேர்ப்பது போன்றவை வழங்கப்படுகின்றன. இதேபோன்று வீடியோக்களை எடிட் அல்லது மெர்ஜ் செய்யவோ, ஜிஃப்களை கன்வெர்ட் செய்வது என அனைத்தையும் சீராக முடிக்க முடியும்.

இந்த செயலியை இயக்க சிறப்பான ஆப்ஷனாக பாப்-அப் பட்டன்கள் இருக்கின்றன. இவற்றை கொண்டு ரெக்கார்டிங்களை ஸ்டார்ட் செய்வது, மற்ற அம்சங்களை இயக்குவது சுலபமாக இருக்கிறது. இதன் மூலம் ஜிஃப்களை மாற்றுவது மற்றும் அவற்றை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்வது எளிமையாகிறது.

2 - ஏஇசட் ஸ்கிரீன் ரெக்கார்டர் (AZ Screen Recorder):

2 - ஏஇசட் ஸ்கிரீன் ரெக்கார்டர் (AZ Screen Recorder):

ஆன்ட்ராய்டில் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய சிறப்பான செயலிகளில் ஏஇசட் ஸ்கிரீன் ரெக்கார்டரும் ஒன்று. இலவசமாக கிடைக்கும் என்றாலும் இந்த செயலியில் விளம்பரங்கள் மற்றும் பிரீமியம் அம்சங்களை காசு கொடுத்து பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இந்த செயலியிலும் பாப்-அப் விண்டோ ஆப்ஷனை எனேபிள் செய்தால் வேலை சிறப்பாக முடிந்து விடும். இதனை செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று ஆன் செய்யலாம்.

டியு ரெக்கார்டர் போன்றே ஏஇசட் ஸ்கிரீன் ரெக்கார்டர் செயலியும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆப்ஷன்களுடன் கிடைக்கும் இந்த செயலியிலும் முந்தைய செயலியில் வழங்கப்பட்ட அம்சங்கள் அதிகளவு வழங்கப்பட்டுள்ளன. இதிலும் டெக்ஸ்ட் அல்லது லோகோ உள்ளிட்டவற்றை சேர்க்கவோ அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டு செய்யப்படும் போதே முன்பக்க கேமராவையும் ஆன் செய்து உங்களது முகத்தையும் ரெக்கார்டு செய்யலாம்.

எனினும் இது பிரீமியம் அம்சம் என்பதால் இத்துடன் மேஜிக் பட்டன், விளம்பரங்கள் நீக்கப்பட்டு, கன்ட்ரோல் பட்டன் மறைக்கப்படுகிறது. ஸ்கிரீனினை வேகமாக ரெக்கார்டு செய்ய இந்த அம்சங்கள் சிறப்பானதாக இருக்கும் என்பதோடு இதனை பயன்படுத்த செயலிக்கான அப்கிரேடு கட்டணம் ரூ.190 செலுத்த வேண்டியிருக்கும்.

மற்ற அம்சங்களில் இந்த செயலியும் டியு ரெக்கார்டர் செயலியும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான அம்சங்களை கொண்டுள்ளன.

3 - ஸ்கிரீன் ரெக்கார்டர் (Screen Recorder)

3 - ஸ்கிரீன் ரெக்கார்டர் (Screen Recorder)

ஸ்மார்ட்போன் ஸ்கிரீனினை ரெக்கார்டு செய்ய மற்றொரு சிறப்பான செயலியாக ஸ்கிரீன் ரெக்கார்டர் உள்ளது. மற்ற செயலிகளை போன்று இந்த இலவச செயலியில் விளம்பரங்களோ அல்லது பிரீமியம் அம்சங்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய (இன்-ஆப் பர்சேசஸ்) அவசியம் கிடையாது.

மற்ற செயலிகளை போன்றே இதிலும் பாப்-அப் விண்டோ அனுமதியளித்தால் மற்ற ஆன்ட்ராய்டு போன்களை போன்றே இதுவும் வேலை செய்யும். மற்றபடி இந்த செயலியின் அம்சங்கள் மிக தெளிவாக இருக்கும். செயலியை திறந்து திரையின் கீழ் காணப்படும் டூல்பாரில் ஆப்ஷன்களை கிளிக் செய்தால் வேலை முடிந்து விடும்.

செயலியை லான்ச் செய்து, ரெக்கார்டு பட்டனை கிளிக் செய்து ஸ்கிரீனினை ஆஃப் செய்ய வேண்டும். மீண்டும் திரையை பவர் அப் செய்தால், உங்களது ரெக்கார்டிங் நிறைவுற்றிருப்பதை தெரியப்படுத்தும் நோட்டிஃபிகேஷனை திரையில் பார்க்க முடியும்.

இனி மீண்டும் ஸ்கிரீன் ரெக்கார்டர் செயலியை லான்ச் செய்தால் ரெக்கார்டிங், ஷேர், ட்ரிம் அல்லது டெலீட் இட் போன்ற ஆப்ஷன்களுடன் கேம் லான்ச்சர் எனும் ஆப்ஷனும் இடம்பெற்றிருக்கிறது. இதில் உள்ள கேம்களுடன் ரெக்கார்டிக் ஓவர்லே செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கிரீன் ரெக்கார்டு செய்ய நீங்கள் எந்த செயலியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதேபோன்று இலவசமாக கிடைக்கும் செயலியாக அமேசான் இருக்கிறது. இந்த செயலியும் சிறப்பாக வேலை செய்கிறது.

Best Mobiles in India

English summary
Three Free Apps to Record Your Screen on Android ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X