ஆண்ராய்டில் ஸ்கீரினை ரெக்கார்ட் செய்ய வேண்டுமா? இலவச செயலிகள் இதோ.!

ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்ய பெரிதும் பரிந்துரைக்கப்படும் செயலிகளில் டியூ ரெக்கார்டர் தான் முதன்மையாக உள்ளது.

|

உங்கள் போனில் நடப்பதை ரெக்கார்ட் செய்ய வேண்டுமா?விளையாடும் கேமின் வீடியோ அல்லது உங்கள் புதிய செயலியின் அம்சத்தை பிறருக்கு தெரியப்படுத்த அல்லது போனின் வசதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என பெற்றோருக்கு தெரிவிக்க என பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் போனின் செயல்பாடுகளை பதிவு செய்ய நேரிடும். ஆண்ராய்டில் மூன்றாம் தரப்பு செயலியின் மூலமே இதை செய்ய முடியும் என்பதால், ஐ ஓ.எஸ்-ஐ காட்டிலும் இது சற்று கடினமானது.

ஆண்ராய்டில் ஸ்கீரினை ரெக்கார்ட் செய்ய வேண்டுமா?

இந்த செயலிகளை பயன்படுத்தி பதிவு செய்யும் போது அது போனின் செயல்திறனை குறைத்துவிடுமா என்ற கேள்வி எழாமல் இருக்க முடியாது. சியோமி மீ மேக்ஸ் 2 போனில் கேம் விளையாடும் போது 1080p வீடியோ பதிவு செய்து பரிசோதித்த போது, செயல்திறனில் பெரிய அளவில் பிரச்சனைகள் எழவில்லை.

உங்கள் ஆண்ராய்டு போனில் திரையின் செயல்பாடுகளை பதிவு செய்வதற்கான மூன்று சிறந்த செயலிகள் இதோ.

1. டியூ ரெக்கார்டர் - ஸ்கீரின் ரெக்கார்டர், வீடியோ எடிட்டர், லைவ்

1. டியூ ரெக்கார்டர் - ஸ்கீரின் ரெக்கார்டர், வீடியோ எடிட்டர், லைவ்

ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்ய பெரிதும் பரிந்துரைக்கப்படும் செயலிகளில் டியூ ரெக்கார்டர் தான் முதன்மையாக உள்ளது. இதை பயன்படுத்துவது மிகவும் எளிதானது மற்றும் இதில் பல்வேறு வசதிகள் நிறைந்துள்ளன. இதை பயன்படுத்தி இரு வழிகளில் ரெக்கார்டிங்-ஐ கட்டுப்படுத்தலாம். பாப்அப் திரை அல்லது நோட்டிபிகேசன் பார் வாயிலாக இதை செய்யலாம்.

செட்டிங்ஸ் பகுதியில், வீடியோ ரெசல்யூசனை 240p முதல் 1080p வரையும், தரத்தை 1Mbps முதல் 12 Mbps வரையும், FPSஐ 15 முதல் 60 வரையும் அல்லது ஆட்டோ என மாற்றவும், ஆடியோ ரெக்கார்டிங் வசதியும், எங்கு பைல்களை சேமிக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கலாம்.

செயலி

செயலி

இந்த செயலியில் சைகையின் மூலம் கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது. அதில் போனை சேக் செய்வதன் மூலம் ரெக்கார்டிங் நிறுத்தும் வசதி,டைமர் மூலம் ரெக்கார்டிங் ஐ துவங்கும் வசதி போன்றவை ஈடிட் செய்யும் நேரத்தை குறைக்கும்.


பதிவு செய்யும் வீடியோக்களை ஜிப் பைலாக மாற்றும் வசதி, வீடியோ எடிட் செய்வது, பாப்அப் பட்டன்களை பயன்படுத்தி எளிதாக வீடியோ பதிவு செய்வது என பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தாலும் இது இலவசமாகவே கிடைக்கிறது.

2)ஏ.இசட் ஸ்கிரீன் ரெக்கார்டர்

2)ஏ.இசட் ஸ்கிரீன் ரெக்கார்டர்

உங்கள் போனில் பாப்அப் திரை வசதியை அனுமதிப்பதன் மூலம், திரையின் ஒரு பகுதியில் ரெக்கார்ட் செய்வதற்கான கன்ட்ரோல்கள் தோன்றும். இதன் மூலம் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்வது, நேராக ரெக்கார்டிங் செய்வது அல்லது அதை நேரிடையாக லைவ் செய்வது போன்றவற்றை செய்யலாம்.

டியூ ரெக்கார்டர் செயலியை போலவே, இதன் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று ரெசல்யூசன், ப்ரேம் ரேட் போன்றவற்றை மாற்றமுடியும். மேலும் உங்கள் தொடுதல்கள், எழுத்துகள், லோகோ அல்லது முன்புற கேமரா மூலம் உங்கள் முகத்தை காண்பிக்கும் வசதியும் உள்ளது.

இதிலுள்ள மேஜிக் பட்டன் வசதி மூலம், கன்ட்ரோல் பட்டனை மறைப்பது, விளம்பரங்களை தடுப்பது, ஸ்கிரீனில் வரைவது, ஜிப் பைலாக மாற்றுவது போன்றவற்றை செய்யலாம்.இந்த வசதிகளை இலவசமாக பெறலாம். இதை விட அதிகமான வசதிகள் பெற ரூ190 செலுத்தி செயலியை மேம்படுத்திக்கொள்ளலாம்.

3) ஸ்கிரீன் ரெக்கார்டர்

3) ஸ்கிரீன் ரெக்கார்டர்

மிகவும் எளிமையான செயலியான இது இலவசமாக கிடைப்பதுடன், விளம்பரங்கள் மற்றும் இன்-ஆப் பர்சேஸ் இல்லாமல் கிடைக்கிறது. மற்ற இரு செயலிகளை போலவே இதிலும் பாப்அப் திரை வசதியை அனுமதிக்கவேண்டும். மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடிய இச்செயலியை இயக்கியவுடன், திரையின் அடிப்பகுதியில் டூல்பார் ஒன்று தோன்றும். டைமர் வைத்தோ அல்லது திரையை ஆப் செய்வதன் மூலமோ ரெக்கார்டிங்ஐ எளிதாக நிறுத்த முடியும்.மேலும் இந்த செயலியில் ரெக்கார்டிங், சேர், டிரிம், டிலீட் போன்ற வசதிகளும் உள்ளன.


இச்செயலியில் உள்ள மற்றொருமொரு வசதியான கேம் லாஞ்சர் மூலம், ரெக்கார்ட் செய்யும் போது கேம் விளையாட முடியும்.

Best Mobiles in India

English summary
Three Free Apps to Record Your Screen on Android : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X