போலி செய்திகளை கண்டறிய வாட்ஸ்ஆப் புதிய ஏற்பாடு.!

தற்சமயம் வாட்ஸ்ஆப் பீட்டா 2.18.204 வெர்ஷனில் காணப்பட்டு இருக்கும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, மேலும் வாடிக்கையாளர் பாதுகாப்புக்கு வேண்டி பல்வேறு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் வாட்ஸ்ஆப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தது.

போலி செய்திகளை கண்டறிய வாட்ஸ்ஆப் புதிய ஏற்பாடு.!

அதன்படி அந்த போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் வாட்ஸ்ஆப் செயலியில் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப் க்ரூப்புகளில் அதிகம் பரப்பப்படும் குறுந்தவல்கள் போலியானதா என்பது குறித்து இந்த அம்சம் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி வலைத்தள லிங்க்:

போலி வலைத்தள லிங்க்:

இந்த புதிய வசதி பயனர்களுக்கு வந்ததும், வாட்ஸ்ஆப்-ல் மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு வரும் வலைத்தள முகவரியை வாட்ஸ்ஆப்
சோதனை செய்யும் என்று கூறப்படுகிறது. பின்பு சோதனையில் ஏதேனும் போலி வலைத்தள லின்க்-களை கண்டறிந்தால் அந்த தகவல் சிவப்பு
நிறத்தில் குறியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற குறியீடு:

சிவப்பு நிற குறியீடு:

சிவப்பு நிற குறியீடு பொறுத்தவரை பயனர்கள் குறிப்பிட்ட வலைதளம் போலியானதா, அதில் இருந்து மற்ற போலி வலைத்தளங்களுக்கு ரீடைரக்ட் செய்யப்படும் என்று பயனர்கள் புரிந்துகொள்ள முடியும்.

வாட்ஸ்ஆப் பீட்டா 2.18.204 வெர்ஷன்:

வாட்ஸ்ஆப் பீட்டா 2.18.204 வெர்ஷன்:

தற்சமயம் வாட்ஸ்ஆப் பீட்டா 2.18.204 வெர்ஷனில் காணப்பட்டு இருக்கும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு மூன்றாம் தரப்பு லின்க்-களும் மால்வேர் நிறைந்த வலைதளத்துக்கான முவரியைக் கூட முடக்க முடியும் என்று கூறப்படுகிறது.

1.5 மில்லியன்

1.5 மில்லியன்

உலகில் சுமார் 1.5 மில்லியன் பேர் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியால் பல தகவல்கள் ஒருவருக்கொருவர் பறிமாறி கொள்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் பிரேசில், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இந்த வாட்ஸ் அப் செயலியால் பல தொல்லைகளும் ஏற்படுகின்றன. இதனையடுத்து தற்போது இந்தியாவில் வாட்ஸ் அப் வதந்திகளால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை:

ஞாயிற்றுக்கிழமை:

ஞாயிற்றுக்கிழமை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த ஒரு சம்பவத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு நாடோடி
சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வாட்ஸ் வதந்தியால் மிரட்டப்பட்டனர். இவர்களில் கும்பல் ஒரு பேருந்தில் குழந்தையுடன் பயணம் செய்த ஒரு
பெண்ணை மிரட்டியதுடன் சுமார் 35 பேர் சூழ்ந்து அந்த பெண் குழந்தையை கடத்தியதாக கூறி கண்மூடித்தனமாக தாக்கினர்.இதுகுறித்டு தகவல் அறிந்து காவல்துறையினர் அந்த இடத்திற்கு வந்தபோது நான்கு அதிகாரிகளும் தாக்குதலுக்கு காயமடைந்தனர்.

 வீடியோ:

வீடியோ:

இரண்டு பேர் ஒரு குழந்தையை பைக்கில் தூக்கி செல்வது போன்ற ஒரு வீடியோ பரப்பப்படுகிறது. உண்மையில் இந்த வீடியோ பாகிஸ்தானில்
குழந்தை பாதுகாப்பு பிரச்சாரம் குறித்த ஒரு வீடியோ ஆகும். ஆனால் வாட்ஸ் அப்பில் ஒரு பையனை இரண்டு பேர் கடத்துவதாக வதந்தி பரவி பெரும்
அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
This new WhatsApp feature will alert you of dangerous messages: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X