எல்லையில் பணியாற்றும் இராணுவ வீரர்களுக்கு உதவும் மொபைல் செயலி.!

'கிரிப் அபிலேக்' (Gref Abhilekh) என அழைக்கப்படும் அந்த செயலியானது, எல்லைப்புற சாலைகளுக்கான டைரக்டர் ஜெனரலான லிப்டினென்ட் ஜெனரல் ஷர்பால் சிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

|

நாட்டின் வலுவான எல்லைப்புற உள்கட்டமைப்புகளை உருவாக்கி பராமரிப்பதற்கு உதவும் வகையில் தொலைதூர பகுதிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு பலனளிக்கக்கூடிய மொபைல் போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லையில் பணியாற்றும் இராணுவ வீரர்களுக்கு உதவும் மொபைல் செயலி.!

'கிரிப் அபிலேக்' (Gref Abhilekh) என அழைக்கப்படும் அந்த செயலியானது, எல்லைப்புற சாலைகளுக்கான டைரக்டர் ஜெனரலான லிப்டினென்ட் ஜெனரல் ஷர்பால் சிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த செயலியானது நமது நாட்டின் தொலைதூர எல்லைப்புற பகுதிகளில் பணியாற்றும் 36,000 'ஜெனரல் ரிசர்வ் இன்ஜினியர் போர்ஸ்' (ஜி.ஆர்.இ.எப்) வீரர்களுக்கு மிகுந்த பலனளிக்கும் என இந்திய இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

எல்லையில் பணியாற்றும் இராணுவ வீரர்களுக்கு உதவும் மொபைல் செயலி.!

ஆண்ராய்டு/விண்டோஸ்/ஐ ஓ.எஸ் என அனைத்துவித மொபைல் போன்களிலும் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி, நிகழ் நேர தனிநபர் மற்றும் பணி மேலாண்மை பற்றிய தகவல்களை பணியாற்றும் அனைத்து ஜி.ஆர்.இ.எப் வீரர்களுக்கும் வழங்கும்.

வீரர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்கள், குடும்ப தகவல்கள், வேலை பற்றிய தகவல்கள் , பயிற்சி மற்றும் நிரந்திர பணி பற்றிய தகவல்கள், அவர்கள் வெற்றி பெற்ற பதக்கங்கள், விருதுகள், பட்டங்கள் பற்றிய தகவல்களை இச்செயலியின் மூலம் அணுக முடியும்.


அதேநேரம் பதவி உயர்வு மற்றும் பணிமூப்பு பற்றிய தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர்கள் தங்களின் சம்பள கடிதத்தை பதிவிறக்கம் செய்தல், குறைகளை சமர்பித்தல் போன்றவற்றையும் இச்செயலியின் வாயிலாக செய்ய முடியும்.

பூனேவில் உள்ள ஜி.ஆர்.இ.எப் மையத்தில் இச்செயலியை அறிமுகப்படுத்திய எல்லைப்புற சாலைகளுக்கான டைரக்டர் ஜெனரல், இம்மையம் இந்நிறுவனத்திற்கான தகவல்தொழில்நுட்ப பாதையை எப்படி வகுத்துள்ளது என்பதற்கான தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.

"இந்த மொபைல் செயலியானது செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதால், துருப்புகளின் மன உறுதியையும் அதிகரிக்கிறது"என்கிறார் ஒரு அலுவலர்.

எல்லையில் பணியாற்றும் இராணுவ வீரர்களுக்கு உதவும் மொபைல் செயலி.!

எல்லைப்புற சாலைகள் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி, நாட்டின் மிகுந்த புகழ்பெற்ற, பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் நவீன கட்டுமான அமைப்பாக தொடரும் என நம்பிக்கையுடன் உறுதியளித்தார்.
Best Mobiles in India

English summary
This mobile app aims to benefit Indian personnel in border areas: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X