ஐபோன் எக்ஸ் பயனர்களின் முகத்தை மறைக்கும் ஒரு அப்ளிகேஷன்

|

ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்த வரை, ஏஆர் குறித்த பெரிய திட்டங்களைக் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தாண்டு துவக்கத்தில் இந்நிறுவனத்தின் மூலம் ஏஆர்கிட் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் புதிய ஐபோன்களுக்கு ஏஆர் அடிப்படையிலான அப்ளிகேஷன்களை இயக்க முடியும்.

ஐபோன் எக்ஸ் பயனர்களின் முகத்தை மறைக்கும் ஒரு அப்ளிகேஷன்

இதில் குறிப்பாக, ஐபோன் எக்ஸில் உள்ள ஏஆர் திறன்களைக் குறித்து நாடெங்கிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜப்பானிய அப்ளிகேஷன் டெவலப்பரான கஸுயா நோஷிரோ, ஒரு அப்ளிகேஷனை தயாரித்துள்ளனர்.

இதன்மூலம் ஐபோன் எக்ஸின் கேமராவை மட்டுமே பயன்படுத்தி, மக்களின் முகங்களை கடந்து செல்லும் ஒரு தன்மையை உருவாக்க முடியும். இந்த அப்ளிகேஷன் பணியாற்றும் விதம் குறித்து டிவிட்டரில் ஒரு சுருக்கமான வீடியோவை, டெவலப்பர் இடுகையிட்டுள்ளார்.

கீழே அளிக்கப்பட்டுள்ள டிவிட்டர் தொடர்புடைய வீடியோவை காணும் போது, இந்த அப்ளிகேஷனுடன் ஒரு எளிய முகமூடி இணைக்கப்பட்டு, மக்களின் முகங்களை கடந்து செல்லும் ஒரு தன்மையை ஐபோன் எக்ஸுக்கு அளித்து, பிம்பம் பின்னால் இருப்பதாக காட்டப்படுகிறது.

இதெல்லாம் கேட்கும் போது நமக்கு மிகவும் கடினமான ஒன்றாக தெரிந்தாலும், இந்த அப்ளிகேஷன் ஒரு எளிய முறையை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த அப்ளிகேஷனைக் கொண்டு ஐபோன் எக்ஸ், தனது முன்பக்க கேமராவை பயன்படுத்தி அறையின் ஒரு படத்தை எடுத்துவிட்டு, பிறகு பயனரின் முகத்தை ஸ்கேன் செய்கிறது.

அதன்பிறகு அந்தப் படங்களைச் செயல்பாட்டிற்கு எடுத்த ஃபோன், பயனர் அசையும் போதே அவரது முகத்தில் பின்னணியை வைக்கிறது. கேம் மேம்பாட்டு தளத்தின் கூட்டணியில் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிதாக 10 ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்கிறது லீஈக்கோபுதிதாக 10 ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்கிறது லீஈக்கோ

மாதிரி வீடியோவில் டெவலப்பரின் முகத்தில் இசைவான முறையில் கடந்து செல்லும் தன்மை பயன்படுத்தி இருப்பதன் மூலம் இந்த அப்ளிகேஷன் மிகச் சிறப்பாக செயல்படுவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் லைட்டிங் நிலைமைகள் மற்றும் பின்னணி மாற்றத்தில், இந்த அப்ளிகேஷன் சிறப்பாக செயல்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதில் வருந்துகிறோம். ஏனெனில் இந்த அப்ளிகேஷனை இப்போதைக்கு பதிவிறக்கம் செய்ய முடியாது. மேலும் அதன் வெளியிட்டு தேதியை குறித்து கூட இதுவரை, டெவலப்பர் தரப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த அப்ளிகேஷன், ஐபோன் எக்ஸ் ஃபோனுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதா என்பதையும் உறுதியாக கூற முடியாது. இது, ஐபோன் 8 மற்றும் ஐபோன் 7 ஆகியவற்றுடன் இணைந்து செயல்படவும் வாய்ப்புள்ளது. எது எப்படியோ, இந்த அப்ளிகேஷனை ஒரு முறை சோதித்து பார்க்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறோம்.

Best Mobiles in India

Read more about:
English summary
This app can create a see-through effect for people’s faces, using only the front-facing cameras of the iPhone X.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X