Home
Apps

உங்க ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்கிறதா? இது காட்டி கொடுக்கும்.!

சியாமி, ஹூவாய் மற்றும் மொட்டோரோலா போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த சாதனங்கள், இந்தப் பாதுகாப்பு புதுப்பிப்புகளை இழக்கின்றன.

By Jijo Gilbert

நீங்கள் பயன்படுத்தும் சாதனம், சமீபகாலத்தில் வெளியான ஆன்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பில் இயங்கி வருகிறதா? அல்லது கடந்த காலத்தில் வெளியான ஒரு புதுப்பிப்பை இழந்து உள்ளதா? என்பதை ஒரு பயனர் கண்டறிய, ஸ்னூப்ஸ்னிட்ச் என்ற ஒரு அப்ளிகேஷன் உதவுகிறது.

உங்க ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்கிறதா? இது காட்டி கொடுக்கும்.!


அவ்வப்போது வெளியாகும் பாதுகாப்பு இணைப்புகளை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள், தங்கள் சாதனங்களில் இருந்து தவிர்த்து விடுவதாக, சமீபத்தில் கண்டறியப்பட்டு உள்ளது. ஒரு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கான பாதுகாப்பு வளையத்தை உருவாக்க, ஆன்ட்ராய்டு பாதுகாப்பு மேம்பாடுகள் என்பது ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. எனவே ஆன்ட்ராய்டு தொடர்பான ஒரு பாதுகாப்பு மேம்பாட்டை தவிர்ப்பது கூட, சாதனத்தின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்து விடுகிறது. இதனால் தங்கள் சாதனங்களைப் பயனர்களால் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதாக உணர முடியாது. ஏற்கனவே நாங்கள் குறிப்பிட்டது போல, மாதந்தோறும் வெளியாகும் தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கான பாதுகாப்பு மேம்பாடுகளை, சில ஓஇஎம்-கள் தவிர்த்து விடுவது சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலும் ஆரம்ப நிலை ஃபோன்கள் தான் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகி உள்ளன. இன்னும் சில பிராண்டுகள், காலத்திற்கேற்ற புதுப்பிப்பாக இல்லாத பாதுகாப்பு இணைப்பை, மாற்று பெயரில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து தவறாக வழிநடத்துகின்றன.


இது தவிர, பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தைச் (எஸ்ஆர்எல்) சேர்ந்த சைபர்செக்யூரிட்டி ஆய்வாளர்கள் அளித்துள்ள அறிக்கையில், சில ஓஇஎம்-கள் இழந்து போன புதுப்பிப்புகளைத் தவிர, பாதுகாப்பு மேம்பாடுகளின் அறிமுகம் குறித்த பொய்யான அறிவிப்பை வெளியிட்டு உள்ளன. இந்நிலையில் நம் வாசகர்களில் பலரும் தங்கள் சாதனங்களின் பாதுகாப்பைக் குறித்த அச்சத்தில் தவிக்கக் கூடும். இதையடுத்து உங்கள் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஏதாவது பாதுகாப்பு புதுப்பிப்பை இழந்து உள்ளாரா? என்பதை அறிய உதவும் ஒரு புதிய அப்ளிகேஷன் சந்தையில் கிடைக்கிறது என்ற விவரத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

ஆரம்ப நிலை சாதனங்கள் மற்றும் நடுத்தர நிலை சாதனங்களுக்கு மட்டுமே, வழக்கமான மாத புதுப்பிப்புகள் அளிக்கப்படுவது இல்லை. சியாமி, ஹூவாய் மற்றும் மொட்டோரோலா போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த சாதனங்கள், இந்தப் பாதுகாப்பு புதுப்பிப்புகளை இழக்கின்றன என்பதோடு, மாத பாதுகாப்பு புதுப்பிப்புகளைக் குறித்த காரியங்களில், இந்தத் தயாரிப்பாளர்கள் ஒரு பயனரை தவறான முறையில் வழிநடத்துவதை வழக்கமான பழக்கமாக கொண்டு உள்ளன.

சமீபகால ஆன்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பில் உங்கள் சாதனம் இயங்குகிறதா? அல்லது கடந்த காலத்தில் வெளியான ஒரு புதுப்பிப்பை இழந்து உள்ளதா? என்பதை ஒரு பயனர் கண்டறிய, ஸ்னூப்ஸ்னிட்ச் என்ற அப்ளிகேஷன் உதவுகிறது. தாங்கள் பயன்படுத்தும் சாதனம், சமீபகால ஆன்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பில் இயங்குகிறதா? என்பதை ஒரு பயனர் பரிசோதித்து பார்க்க, கீழ்க்காணும் படிகளைப் பின்பற்றினால் போதுமானது.

1. ப்ளே ஸ்டோரில் இருந்து (இலவசமாக) ஸ்னூப்ஸ்னிட்ச் அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.


2. இந்த அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்த பிறகு, அந்த அப்ளிகேஷனைத் திறந்து 'இணைப்பு நிலையைச் சோதிக்க இங்கே கிளிக் செய்' என்ற டேப் மீது தட்டவும்.

உங்க ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்கிறதா? இது காட்டி கொடுக்கும்.!


3. அடுத்த பக்கத்தில், ஆன்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு சோதனையை ஆரம்பிக்கும் வகையில், 'ஸ்டார்ட் டெஸ்ட்' என்ற பொத்தானைத் தட்டவும்.


4. சோதனை முடிவடைந்த பிறகு, தங்கள் சாதனம் இயங்கி வரும் சரியான ஆன்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பின் பதிப்பைக் குறித்து ஒரு பயனர் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இது தவிர, சமீபகால பாதுகாப்பு புதுப்பிப்பில் அந்தச் சாதனம் இயங்குகிறதா? கடந்த காலத்தில் வெளியான பாதுகாப்பு இணைப்புகளில் இது எத்தனை இழந்து உள்ளது? இழந்த சோதனைகள் போன்ற மற்ற தகவல்களையும் அளிக்கிறது.

Best Mobiles in India

English summary
This App will let you know if your smartphone has missed on an Android security patch ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X