சுனவனா ஆப்: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குச்சாவடிக்கு வழிகாட்டும்.!

இந்த ஆப் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலியை புக் செய்து கொள்ள முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

இப்போது வரும் பல்வேறு மொபைல் ஆப் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது, அதன்படி வரும் மே 12-ம் தேதி கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது, இதை முன்னிட்டு தேர்தலுக்கு வழிகாட்டும் மொபைல் ஆப் ஒன்று அங்கு வெளியிடப்பட்டுள்ளது.

சுனவனா ஆப்: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குச்சாவடிக்கு வழிகாட்டும்.!

கர்நாடக மாநிலம் தலைமை தேர்தல் ஆணையர் சஞ்சிவ் குமார் இந்த தேர்தல் வாக்குச்சாவடிக்கு வழிகாட்டும் சுனவனா என்ற மொபைல் ஆப்-ஐ செய்து வைத்தார். குறிப்பாக இந்த மொபைல் ஆப் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுனவனா மொபைல் ஆப் சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த தகவலை மிக எளிமையாக அறிந்து கொள்ளமுடியும். பின்பு மாநிலம் முழுவதும் இருக்கும் 56,696 வாக்குச்சாவடிகளை கண்டறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுனவனா மொபைல் ஆப் இடம்பெற்றுள்ள மற்ற அம்சங்கள் பொறுத்தவரை வாக்களர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்ய முடியும், பின்பு வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடிக்கு செல்லும் வழி கண்டறிய முடியும். அதன்பின்பு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் அருகேவுள்ள காவல் நிலையம், சுகாதார நிலையம் ஆகிய தகவல்களை எளிமையாக இந்த ஆப் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

சுனவனா ஆப்: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குச்சாவடிக்கு வழிகாட்டும்.!

குறிப்பாக இந்த மொபைல் ஆப் மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் உள்ளது, அதன்படி இந்த ஆப் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலியை புக் செய்து கொள்ள முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)

சுனவனா மொபைல் ஆப் தேர்தல் பயன்பாட்டுக்கு மட்டும் இல்லாமல், அனைத்து நேரங்களிலும புதிய வாக்காளர் பெயர் பதிவிற்காகவும் பயன்படுத்த முடியும் என்று தேர்தல் ஆணையர் சஞ்சிவ் குமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக காவல் நிலையம் மற்றும் சுகாதார நிலையம் முகவரிகளை எளிமையாக தெரிந்து கொள்ளமுடியும்.

சுனவனா ஆப்: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குச்சாவடிக்கு வழிகாட்டும்.!

தேர்தல் ஆணையர் சஞ்சிவ் குமார் தெரிவித்தது என்னவென்றால் சுனவனா மொபைல் ஆப்பை பதிவறக்கம் செய்து அனைவரும் பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தேர்தல் அதிகாரிகளின் தகவல்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் வெளிப்படையாக தேர்தல் நடவடிக்கையை உறுதி செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
This app will guide you to the nearest polling booth; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X