Home
Apps

வாட்ஸ்ஆப்பில் பிளாக் செய்தால் இது தான் நடக்கும்.!!

By Meganathan

ஸ்மார்ட்போன்களின் தவிர்க்க முடியாத குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கின்றது. நமது குறுந்தகவல் வழக்கத்தை முற்றிலும் மாற்றியிருக்கும் வாட்ஸ்ஆப் எந்நேரமும் நண்பர் மற்றும் உறவினர்களுடன் இணைந்திருக்க வழி செய்கின்றது. குறுந்தகவல்களுடன் சேர்த்து புகைப்படம், வீடியோ, தரவுகள் எனப் பல்வேறு இதரச் சேவைகளையும் வாட்ஸ்ஆப் வழங்குகின்றது.

அதிகப்படியான சேவைகளை வழங்கும் சேவைகளில் சில சிக்கல்களும் இருக்கத் தானேச் செய்யும். வாட்ஸ்ஆப்பில் எந்நேரமும் எல்லோருக்கும் குறுந்தகவல் அனுப்ப முடியாது. அதுவும் நமக்குப் பிடிக்காதவர்களுக்கு பதில் அனுப்புவது பெரும்பாலும் கடுப்பாகவே இருக்கும். இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள வாட்ஸ்ஆப் பிளாக் செய்யும் வசதியை வழங்கியது.

சில காலமாக வாட்ஸ்ஆப் செயலியில் பெரும்பாலானோரும் பயன்படுத்தி வரும் பிளாக் செய்யும் அம்சம் குறித்து சில சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது. அதன்படி வாட்ஸ்ஆப் செயலியில் யாரையாவது பிளாக் செய்தால் என்னவாகும் என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்..

குறுந்தகவல்

குறுந்தகவல்

நீங்கள் வாட்ஸ்ஆப்பில் யாரையேனும் பிளாக் செய்தால் அவர்கள் அனுப்பும் குறுந்தகவல் எதுவும் உங்களுக்கு வராது. குறிப்பிட்ட நபரை அன்-பிளாக் செய்தாலும், பிளாக் செய்யப்பட்ட காலகட்டத்தில் அவர் அனுப்பிய குறுந்தகவல்கள் உங்களுக்கு வராது.

லாஸ்ட் சீன்

லாஸ்ட் சீன்

நீங்கள் பிளாக் செய்த நபரால் நீங்கள் இறுதியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்திய நேரத்தைக் காண்பிக்கும் லாஸ்ட் சீனை பார்க்க இயலாது.

ஸ்டேட்டஸ் தகவல்

ஸ்டேட்டஸ் தகவல்

லாஸ்ட் சீன் தகவல் போன்றே உங்களது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் என்ன என்பதையும் நீங்கள் பிளாக் செய்த நபரால் பார்க்க முடியாது. நீங்கள் குறிப்பிட்ட நபரை அன்-பிளாக் செய்த பின் உங்களது ஸ்டேட்ஸ் அவரால் பார்க்க முடியும்.

ப்ரோஃபைல் பிக்சர்

ப்ரோஃபைல் பிக்சர்

நீங்கள் பிளாக் செய்த காண்டாக்டின் வாட்ஸ்ஆப்பில் உங்களது ப்ரோஃபைல் புகைப்படத்திற்கான திரை காலியாகவே இருக்கும். நீங்கள் பிளாக் செய்த நபரால் உங்களது ப்ரோஃபைல் புகைப்படத்தினை பார்க்க முடியாது.

அழைப்பு

அழைப்பு

வாட்ஸ்ஆப்பில் நீங்கள் பிளாக் செய்தவரால் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியாது என்பது போல் அவரால் உங்களுக்கு வாட்ஸ்ஆப்பில் அழைப்புகளையும் மேற்கொள்ள முடியாது. குறிப்பிட்ட காண்டாக்டினை நீங்கள் அன்-பிளாக் செய்யும் வரை இது தொடரும்.

ரீட் ரிசீப்ட்ஸ்

ரீட் ரிசீப்ட்ஸ்

நீங்கள் பிளாக் செய்தவரால் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியாது என்பதைப் போல் அவர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கான ப்ளூ டிக்ஸ் அல்லது ரீட் ரிசீப்ட்ஸ்களும் வராது.

க்ரூப் சாட்

க்ரூப் சாட்

நீங்கள் பிளாக் செய்தவரும் நீங்களும் ஒரே க்ரூப் சாட்டில் இருந்தால் குறிப்பிட்ட குறுந்தகவல்களை அவரால் அனுப்ப முடியும். தனிப்பட்ட குறுந்தகவல்களுக்கு தடைப்பட்டாலும் இது க்ரூப் சாட்களில் வேலை செய்யாது.

அனுப்புதல்

அனுப்புதல்

நீங்கள் பிளாக் செய்த காண்ட்களுக்கு உங்களால் குறுந்தகவல் மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. நீங்கள் குறிப்பிட்ட காண்டாக்டினை அன்-பிளாக் செய்யும் வரை இது தொடரும்.

காண்டாக்ட்

காண்டாக்ட்

நீங்கள் பிளாக் செய்த காண்டாக்ட் வாட்ஸ்ஆப்பில் அப்படியே தான் இருக்கும். குறிப்பிட்ட காண்டாக்டினை உங்களது போன்புக் அல்லது அட்ரெஸ் புக்கில் இருந்து நீக்கும் வரை அனைத்து காண்டாக்ட்களும் வாட்ஸ்ஆப்பில் தெரியும்.

கவனம்

கவனம்

வாட்ஸ்ஆப்பில் காண்டாக்ட்களை பிளாக் செய்வது உங்களின் தனிப்பட்ட உரிமையாகும். உங்கள் விருப்பம் போல் காண்டாக்ட்களை பிளாக் செய்ய முடியும். குறிப்பிட்ட காண்டாக்ட்களை அழுத்திப் பிடித்தால் அன்-பிளாக் செய்யும் ஆப்ஷன் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Things That’ll happen if you block someone on WhatsApp Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X