கூகுள் மேப் உதவியில் பலே கொள்ளை: ஈடுபட்டவர்கள் சிக்கியது எப்படி?

வர்கள் கூகுள் மேப் உதவியோடு கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது. இதில் ஈடுபட்ட 2 பேர போலீசார் கைது செய்துள்ளனர். பிறகு அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

|

சென்னை சுற்றுவட்டா பகுதிகளில் பணக்காரர்களின் வீடுகளில் கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

கூகுள் மேப் உதவியில் பலே கொள்ளை: ஈடுபட்டவர்கள் சிக்கியது எப்படி?

மேலும், அவர்கள் கூகுள் மேப் உதவியோடு கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது. இதில் ஈடுபட்ட 2 பேர போலீசார் கைது செய்துள்ளனர். பிறகு அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை போலீசார் ஆந்திராவில் கைது செய்துள்ளனர். அவர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்பது குறித்து காணலாம்.

 அடுத்தடுத்து கொள்ளை:

அடுத்தடுத்து கொள்ளை:

சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கத்தில் அப்பல்லோ மருத்துவரின் சொகுசு வீட்டிலும், தேனாம்பேட்டையில் மத்திய அரசு அதிகாரி ஒருவரது வீட்டிலும், தியாகராயர் நகரில் மற்றொரு மருத்துவர் வீட்டிலும் அடுத்தடுத்து கொள்ளை நடந்தது.

வைரம், தங்கம் என சுமார் கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை வீட்டில் அனைவரும் இருக்கும் போதே இரவில் உள்ளே புகுந்து திருடியதை விசாரணையில் போலீசார் கண்டறிந்தனர்.

 வைர நகை மீட்பு:

வைர நகை மீட்பு:

ஒரே பாணியில் நடந்த 3 கொள்ளையையும் அரங்கேற்றிய கொள்ளையர்கள் யாரென தெரியாமல் காவல் துறையினர் தேடி வந்த நிலையில், கடந்த 1-ம் தேதி ஐதராபாத் போலீசார் சத்ய ரெட்டி என்கிற பிரபல கொள்ளையனையும், அவனது கூட்டாளி நாராயண குருவையும் கைது செய்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய தங்க, வைர நகைகளை மீட்டனர்.

சென்னைக்கு அழைத்து வந்தனர்:

சென்னைக்கு அழைத்து வந்தனர்:

விசாரணையில் சென்னையில் நடந்த 3 கொள்ளை உட்பட ஆந்திரா, தெலுங்கானாவில் 56 கொள்ளையை அரங்கேற்றியதை சத்ய ரெட்டி ஒப்புக்கொண்டான்.

கைது செய்யப்பட்டு ஐதராபாத் சிறையில் இருந்த கொள்ளையன் சத்யரெட்டியையும், அவனது கூட்டாளியையும் சென்னை காவல் துறையினர் நீதிமன்ற அனுமதியுடன் கைது செய்து கொண்டு வந்தனர்.

120 சவரன் நகை மீட்பு:

120 சவரன் நகை மீட்பு:

தேனாம்பேட்டை, தியாகராயர் நகர் கொள்ளையை தனது கூட்டாளியுடன் அரங்கேற்றிய சத்ய ரெட்டி நுங்கம்பாக்கத்தில் தனி ஆளாக உள்ளே புகுந்து கொள்ளையடித்துள்ளான். கொள்ளையர்களிடம் இருந்து 120 சவரன் நகைகளை மீட்டுள்ள போலீசார் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையிலடைத்தனர்.

கொள்ளையில் ஈடுபடுவது எப்படி:

கொள்ளையில் ஈடுபடுவது எப்படி:

கொள்ளையன் சத்ய ரெட்டி தான் கொள்ளையடிக்க போகும் வீடு யாருடையது என தெரிந்து கொண்டு கண்காணித்து, கூகுள் மேப் மூலம் தெருவின் வடிவமைப்பு, சொகுசு வீடுகளின் வடிவமைப்பு, அவற்றிற்கிடையேயான இடைவெளி, சுற்றுச்சுவர் வடிவமைப்பு உள்ளிட்டவற்றை ஜூம் செய்து தெரிந்து கொள்வான்.

நைசாக செல்லும் கொள்ளையன்:

நைசாக செல்லும் கொள்ளையன்:

பெரும்பாலான வீடுகளில் காவலாளி, வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போதே கொள்ளையை அரங்கேற்றியுள்ளான். பின்பகுதி சுற்றுச்சுவர் வழியாக ஏறிக்குதித்து, ஜன்னல் கண்ணாடி, கம்பி, கதவை சத்தமின்றி லாவகமாகக் கழற்றி உள்ளே நுழையும் வித்தை தெரிந்தவன்.

படுக்கையறையில் நபர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போதே உள்ள சத்தமின்றி நுழைந்து கொள்ளையை அரங்கேற்றியிருப்பது வீட்டின் உரிமையாளர்கள் காலையில் எழுந்து பார்த்தால் தான் தெரியும்.

போலீசார் திட்டம்:

போலீசார் திட்டம்:

இதே பாணியில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நடந்த சில முக்கிய கொள்ளை சம்பவங்கள் சத்ய ரெட்டியின் கைவரிசையாக இருக்கலாம் என சந்தேகிப்பதால் கொள்ளையர்களை போலீசார் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

திருடனில் நல்ல திருடன்.! வைரல் ஆகும் திருடனின் ஈமெயில்.!

பொதுவாகத் திருடர்கள் என்றாலே கெட்டவர்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்களிலும் உண்மையான நல்ல உள்ளம் கொண்ட திருடர்களும் இருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக அன்மையில் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு பற்றிய டிவிட்டர் பதிவு தற்பொழுது உலகளவில் வைரல் ஆகிவருகிறது.

மன்னிப்பு கேட்டு ஈமெயில்

மன்னிப்பு கேட்டு ஈமெயில்

பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் லேப்டாப்பை திருடிச் சென்ற திருடன், அந்த மாணவனுக்கு மன்னிப்பு கேட்டு ஈமெயில் ஒன்றையும் அனுப்பியுள்ளான். தற்பொழுது அந்த ஈமெயில் இன் புகைப்படம் டிவிட்டர் மற்றும் அனைத்துச் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. இப்பொழுது சமூக வலைத்தளம் மற்றும் டிவிட்டரில் அந்தத் திருடன் தான் சூப்பர் ஸ்டார்.

பணத்தேவைக்காக லேப்டாப் திருட்டு

பணத்தேவைக்காக லேப்டாப் திருட்டு

ஸ்டீவ் வாலெண்டின் என்ற டிவிட்டர் பயனர், திருடன் மன்னிப்பு கேட்டு அனுப்பிய ஈமெயில் இன் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். மாணவனின் லேப்டாப்பை தெரிந்தே திருடியதற்கு மிகவும் மனம் வருந்துவதாகவும், அவனுக்கு பணத்தேவை இருப்பதனால் தான் லேப்டாப்பை திருடி சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.

படிப்பு சம்மந்தப்பட்ட தகவல்

படிப்பு சம்மந்தப்பட்ட தகவல்

இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், நீங்கள் பல்கலைக்கழக மாணவன் என்பது எனக்கும் தெரியும். உங்கள் படிப்பு சம்மந்தப்பட்ட தகவல்கள் ஏதேனும் லேப்டாப் இல் இருந்தால், இந்த ஈமெயில் ஐ.டி-க்கு மெயில் செய்யுங்கள். உங்களுக்கு தேவையான படிப்பு சம்மந்தப்பட்ட தகவல்களை அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளான்.இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், நீங்கள் பல்கலைக்கழக மாணவன் என்பது எனக்கும் தெரியும். உங்கள் படிப்பு சம்மந்தப்பட்ட தகவல்கள் ஏதேனும் லேப்டாப் இல் இருந்தால், இந்த ஈமெயில் ஐ.டி-க்கு மெயில் செய்யுங்கள். உங்களுக்கு தேவையான படிப்பு சம்மந்தப்பட்ட தகவல்களை அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளான்.

மொபைல் போன் மற்றும் பர்ஸ்

உங்கள் லேப்டாப்பை திருடுகையில், அருகிலிருந்த உங்களின் மொபைல் போன் மற்றும் உங்களின் பர்ஸ்ஸை உங்களின் தேவை கருதி விட்டு வந்துவிட்டேன். உங்கள் படிப்பு சம்மந்தப்பட்ட ஏதேனும் ஃபைல் அல்லது படிப்பு சம்மந்தப்பட்ட தகவல்கள் வேண்டுமெனில் இந்த ஈமெயில் இல் குறிப்பிடுங்கள், நான் அனுப்பி வைக்கிறான் என்று சொல்லி மறுபடியும் தெரிந்தே உங்களின் லேப்டாப்பை திருடியதுக்கு மன்னியுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளான்.

59,000 முறை ரீடிவீட்

59,000 முறை ரீடிவீட்

இந்த ஈமெயில் பற்றிய டிவிட்டர் பதிவு இதுவரை 59,000 முறை ரீடிவீட் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை 1.8 லட்சத்திற்கும் மேல் லைக் செய்யப்பட்டு டிவிட்டரில் வைரல் ஆகியுள்ளது. திருடன் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Thieves take help of Google maps to loot houses in Chennai : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X