நீங்கள் இன்றே முயற்சிக்க வேண்டிய தலைச்சிறந்த செயலிகள்

|

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் நமது ஒவ்வொரு தேவையையும் சரிவர பூர்த்தி செய்ய நமக்கு அத்தியாவசியமானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பது ஆப்ஸ் எனப்படும் செயலிகள் தான் எனலாம்.

நீங்கள் இன்றே முயற்சிக்க வேண்டிய தலைச்சிறந்த செயலிகள்

ஸ்மார்ட்போன்களில் செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளுக்கான போட்டி அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆப் டெவலப்பர்களும் தலைச்சிறந்த செயலிகள் மூலம் பயனர்களை கவர முயன்று வருகின்றனர்.

அந்தவகையில் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் தலைச்சிறந்த செயலிகளில் நீங்கள் முயற்சிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

கிளீன் மாஸ்டர் (Clean Master)

கிளீன் மாஸ்டர் (Clean Master)

கிளீன் மாஸ்டர் செயலி ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனினை எளிமையாக பராமரிக்க உதவும். ஆண்டராய்டை சுத்தப்டுத்தும் கிளீன் மாஸ்டர் செயலி ஸ்மார்ட்போனில் பயன்படுத்தாமல் இருக்கும் ஃபைல்கள், சர்ச் ஹிஸ்ட்ரி உள்ளிட்டவற்றை அழிக்கும். மேலும் பயன்படுத்தாத செயலிகளை அன்இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கும்.

360 செக்யூரிட்டி ( 360 Security)

360 செக்யூரிட்டி ( 360 Security)

கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி உங்களது ஸ்மார்ட்போனிற்கு பாதுகாப்பு வழங்கும் பணியினை சிறப்பாக செய்யும். திரெட்களை ஸ்கேன் செய்து அவற்றை ஸ்மார்ட்போனில் இருந்து வெளியேற்றும் 360 செக்யூரிட்டி ஸ்மார்ட்போனினை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

சாலிட் எக்ஸ்புளோரர் ஃபைல் மேனேஜர் (Solid Explorer File Manager)

சாலிட் எக்ஸ்புளோரர் ஃபைல் மேனேஜர் (Solid Explorer File Manager)

தலைச்சிறந்த ஃபைல் எக்ஸ்புளோரர் அதிக அம்சங்களுடன் வேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற செயலி இது தான். ஸ்மார்ட்போனில் ஃபைல் பிரவுசிங் அனுபவத்தை முற்றிலுமாக மாற்றியமைக்கும் சாலிட் எக்ஸ்புளோரர் டிராப் பாக்ஸ், பாக்ஸ், கூகுள் டிரைவ் போன்ற கிளவுட் ஸ்டோரேஜ் வசதியையும் வழங்குகிறது.

பேட்டரி ஆப்டிமைசர் & விட்ஜெட் (Battery optimizer and Widget)

பேட்டரி ஆப்டிமைசர் & விட்ஜெட் (Battery optimizer and Widget)

கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் பேட்டரி சேவர் செயலிகளில் முக்கியத்துவம் வாய்ந்த செயலியாக இது இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பேட்டரி அளவை பொருத்து எந்தெந்த செயலிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை கணிக்கும் தன்மையை இந்த செயலி கொண்டுள்ளது.

எம்எஸ் ஆஃபீஸ் மொபைல் (MS Office Mobile)

எம்எஸ் ஆஃபீஸ் மொபைல் (MS Office Mobile)

தலைச்சிறந்த ஆண்ட்ராய்டு செயலிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ள எம்எஸ் ஆஃபீஸ் மொபைல் ஆண்ட்ராய்டு செயலிக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு பதிப்பில் வெவ்வேறு எம்எஸ் ஆஃபீஸ் தரவுகளான எக்செல், வொர்டு, பவர்பாயின்ட் உள்ளிட்டவற்றை உருவாக்கவும், அவற்றை எடிட் செய்து இயக்கவும் முடியும்.

ஏர்டிராய்டு (AirDroid)

ஏர்டிராய்டு (AirDroid)

ஆண்ட்ராய்டு போன் அனுபவத்தை எளிமையாக்கும் இந்த செயலியும் இந்த ஆண்டின் தலைச்சிறந்த செயலிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கணினி மற்றும் லேப்டாப் சாதனங்களில் இருந்து தகவல்களை யுஎஸ்பி கேபிள் இல்லாமலேயே மிக எளிமையாக பரிமாற்றம் செய்ய இந்த செயலி வழி செய்கிறது.

நாம் எதிர்பார்த்த நாடுகள் தான், ஆனால் கற்பனைகூட செய்திராத நாம் எதிர்பார்த்த நாடுகள் தான், ஆனால் கற்பனைகூட செய்திராத "கேவலமான" வழிகளில்.!

நியூஸ் 360 (News360)

நியூஸ் 360 (News360)

நியூஸ் 360 செயலி இணையத்தில் நீங்கள் விரும்பும் தகவல்களை அறிந்து கொண்டு உங்களுக்கு விருப்பமான தகவல்களை பரிந்துரைக்கும். ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் கணினிகளில் கிடைக்கும் நியூஸ் 360 சமூக வலைத்தளம் மற்றும் வாடிக்கையாளர்களின் இதர தேடல்களை அறிந்து கொண்டு ஒருவரின் விருப்பமான தகவல்களை பரிந்துரைக்கும்.

அடோப் ரீடர் (Adobe Reader)

அடோப் ரீடர் (Adobe Reader)

இலவசமாக கிடைக்கும் இந்த செயலி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களில் பிடிஎஃப் ஃபைல்களை மிக எளிமையாக இயக்க அடோப் ரீடர் தலைச்சிறந்ததாக இருக்கும். இதுவும் இந்த ஆண்டின் தலைச்சிறந்த செயலிகளில் ஒன்றாக இருக்கிறது.

 டெக் வைரல் (Tech Viral)

டெக் வைரல் (Tech Viral)

தொழில்நுட்பம், ஹேக்கிங் மற்றும் செய்திகளை விரும்புவோருக்கு டெக் வைரல் செயலி தலைச்சிறந்த ஒன்றாக இருக்கிறது. இதில் கணினி, மொபைல் போன், ஆண்ட்ராய்டு, இண்டர்நெட் டிப்ஸ் போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

எம்எக்ஸ் பிளேயர் (MX Player)

எம்எக்ஸ் பிளேயர் (MX Player)

ஸ்மார்ட்போன்களில் அனைத்து வகையான வீடியோ ஃபைல்களையும் பார்த்து ரசிக்க இந்த செயலி வழி செய்கிறது.

டேஷ்லேன் ( Dashlane: Password Manager App)

டேஷ்லேன் ( Dashlane: Password Manager App)

டேஷ்லேன் பாஸ்வேர்டு மேனேஜர் மற்றும் டிஜிட்டல் வேலெட் செயலியாக இருக்கிறது. இந்த செயலி கொண்டு பல்வேறு தளங்களின் பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்கிறது. ஆப்ஸ் மற்றும் வலைத்தளங்களின் பாஸ்வேர்டுகளை பதிவு செய்து கொள்வதோடு டிஜிட்டல் வேலெட் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

வெதர்&ரேடார் - மோர்கேஸ்ட் செயலி (Weather & Radar – Morecast App)

வெதர்&ரேடார் - மோர்கேஸ்ட் செயலி (Weather & Radar – Morecast App)

மோர்கேஸ் செயலியில் ரியல்டைம் வெப் கேம், சாட்டிலைட் ரிப்போர்டிங், வெதர் மேப்ஸ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. வானிலை சார்ந்த அனைத்து தகவல்களையும் உடனடியாக அறிந்து கொள்ள இந்த செயலி வழி செய்யும்.

7 மினிட் வொர்க் அவுட் (7 Minute Workout)

7 மினிட் வொர்க் அவுட் (7 Minute Workout)

உடல் எடையை குறைத்து, வயிற்று பகுதியில் உள்ள தொப்பையை கறைக்க வேண்டுமா, 7 மினி்ட் வொர்க் அவுட் செயலியில் உள்ள வீடியோக்களை பார்த்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும். இதில் உள்ள உடற்பயிற்சி வீடியோக்களை பார்த்து வீட்டில் இருந்தபடியே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

க்ரோம் பீட்டா (Chrome Beta)

க்ரோம் பீட்டா (Chrome Beta)

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படுத்த தலைச்சிறந்த பிரவுசர்களில் ஒன்றாக க்ரோம் பீட்டா இருக்கிறது. கூகுளின் க்ரோம் பிரவுசர் அனைவருக்கும் ஏற்ற வகையில் பிரவுசிங் அனுபவத்தை எளிமையாக வழங்குகிறது.

ஃப்ளெக்சி+ஜிஃப் கீபோர்டு (Fleksy+ GIF Keyboard)

ஃப்ளெக்சி+ஜிஃப் கீபோர்டு (Fleksy+ GIF Keyboard)

உலகின் அதிவேக கீபோர்டு செயலியாக இருக்கும் ஃபிளெக்சி ஒட்டுமொத்த டைப்பிங் அனுபவத்தை எளிமையாகவும், சீராகவும் வழங்குகிறது. இத்துடன் ஜிஃப் பைல்களை பரிமாற்றம் செய்ய வழி செய்யும் வசதியும் கொண்டுள்ளது. இத்துடன் எக்ஸ்டென்ஷன் மற்றும் அழகிய தீம்களை கொண்டுள்ளது.

ஜிபோர்டு (Gboard)

ஜிபோர்டு (Gboard)

கூகுள் கீபோர்டு செயலியான ஜிபோர்டு டைப்பிங் மட்டுமின்றி குரல் மூலம் இயக்கும் பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இத்துடன் பில்ட்இன் கூகுள் சர்ச் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எமோஜிக்களை வேகமாக கண்டறியும் வசதி, ஜிஃப் சர்ச் மற்றும் பல்வேறு மொழிகளில் டைப் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது.

கூகுள் ஒபினியன் ரிவார்டு (Google Opinion Reward)

கூகுள் ஒபினியன் ரிவார்டு (Google Opinion Reward)

இந்த செயலியை கொண்டு கூகுள் கேட்கும் சில கேள்விகள் மற்றும் ஆய்வு சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்து கூகுள் பிளே கிரெடிட் சம்பாதிக்க முடியும். கூகள் சர்வேஸ் குழுவினர் உருவாக்கிய இந்த திட்டத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றினால் அதிகபட்சம் 1 டாலர் வரை பெற முடியும்.

அவாஸ்ட் ஆண்டிவைரஸ் (Avast Antivirus)

அவாஸ்ட் ஆண்டிவைரஸ் (Avast Antivirus)

அவாஸ்ட் ஆண்டிவைரஸ் செயலி கொண்டு வைரஸ் மற்றும் மால்வேர் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள முடியும். இத்துடன் தேவையற்ற விளம்பரங்களையும் முடக்க முடியும். மேலும் ஸ்மார்ட்போன்களை மால்வேர் சார்ந்த தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற முடியும்.

கிரீனிஃபை (Greenify)

கிரீனிஃபை (Greenify)

கிரீனிஃபை செயலியை ஸ்மார்ட்போனில் சீராக வேலை செய்யாத செயலிகளை கண்டறிந்து அவை ஸ்மார்ட்போனில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கும். இதனால் ஸ்மார்ட்போனின் பேட்டரி சேமிக்கப்படுவதோடு அவை பயனற்று நிற்காமல் பார்த்துக் கொள்கிறது.

நெக்ஸ்ட் லாக் ஸ்கிரீன் (Next Lock Screen)

நெக்ஸ்ட் லாக் ஸ்கிரீன் (Next Lock Screen)

எந்நேரமும் பணியாற்றுவோருக்கு ஏற்ற லாக் ஸ்கிரீன் செயலியாக இது இருக்கிறது. இந்த செயலி ஸ்மார்ட்போனினை மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்கிறது. தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்கள் நிறைந்த இந்த செயலி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Today we have come up with a list of android apps that you must have on your android device to make it smarter. Read more in Hindi.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X