உங்கள் கம்ப்யூட்டர்கள் அல்லது லேப்டாப்புகளில் அமைந்திருக்கும் வெப்கேமிராவில் தெளிவான படம் தெரியாத வகையில் உள்ளதா? கவலை வேண்டாம். இப்போது உங்கள் ஸ்மார்ட்போனையே வயர்லெஸ் வெப்கேமிராவாக பயன்படுத்த செயலிகள் வந்துவிட்டது.

இந்த செயலியின் உதவியால் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை வெப்கேமிராவாக பயன்படுத்தி ஸ்கைப், உள்பட மற்ற வீடியோ சேட்டிங்கை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த செயலிகள் என்னென்ன என்பதை பார்ப்போமா?
IP வெப்கேம் (IP Webcam)
ஸ்மார்ட்போனை வெப்கேமிராவாக மிக எளிதில் மாற்ற பயன்படும் செயலிகளில் ஒன்று IP வெப்கேம். இந்த செயலியை நீங்கள் இலவசமாகவே டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். பின்னர் விஎல்சி பிளேயர் அல்லது வெப் பிரெளசர் மூலம் வீடியோ சேட்டிங் செய்யலாம்.
மேலும் வைபை இண்டர்நெட் மூலம் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யவும் இந்த செயலி உதவுகிறது. மேலும் MJEPG வீடியோ குறியீட்டு தரத்தை கொண்ட உயர் செயல்திறன் மல்டிமீடியா செயலி உயர் தெளிவான சிஎம்ஓஎஸ் சென்ஸார் அடிப்படையில் உயர் வரையறை பிணைய கண்காணிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்கேம் ஆப் (SmartCam App):
ஸ்மார்ட்போனை வெப்கேமிராவாக பயன்படுத்த உதவும் மற்றொரு செயலிதான் இந்த ஸ்மார்ட்கேம் ஆப். வைபை மற்றும் புளூடூத் ஆகிய இரண்டிலும் இந்த செயலி வேலை செய்யும். இந்த செயலியை ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர் ஆகிய இரண்டிலும் இந்த செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொண்டால் வைபை அல்லது புளூடூத் மூலம் வீடியோ சேட்டிங் செய்யலாம்
WO வெப்கேம் லைட் (WO Webcam Lite)
இதுவொரு இலவச செயலி. இதன் மூலம் ஸ்கைப் உள்பட அனைத்து வீடியோ மெசஞ்சர் செயலிகளை பயன்படுத்த முடியும். மேலும் இதில் வீடியோக்களை ரிகார்டிங் செய்யும் வசதியும் உண்டு. வைபை, யூஎஸ்பி மற்றும் புளூடூத் இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி இந்த செயலி மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை வெப்கேமிராவாக பயனப்டுத்தி கொள்ளலாம்
EpocCam
ஸ்மார்ட்போனை வெப்கேமிராவாக மாற்ற உதவும் மற்றொரு ஆண்ட்ராய்டு செயலி தான் இந்த EpocCam செயலி. இந்த செயலி மேக் ஓஎஸ் உள்ள கம்ப்யூட்டர்களில் ஸ்கைப், ஹாங்அவுட், ஃபேஸ்புக் மற்றும் பிற வீடியோ சேட்டிங் செயலிகளை வேலை செய்ய வைக்க முடியும். குழந்தைகளை கண்காணிக்க, ஸ்பைகேமிரா, செக்யூரிட்டி கேமிரா உள்பட பல்வேறு வகைகளுக்கு இதை பயன்படுத்தி கொள்ளலம்.
மூவினோ (Movino)
மேக் ஓஎஸ் X கம்ப்யூட்டர்களில் ஸ்மார்ட்போனை வெப்கேமிராவாக பயன்படுத்த உதவும் மற்றொரு செயலி. இது இலவசமாக கிடைக்கும் ஒரு செயலி மட்டுமின்றி பயனாளிகளின் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கும் வசதியும் இதில் உண்டு.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.