வருகிறது டிக்டாக் : "மியூசிக்கல்.லி"-க்கு தடை.!

மியூசிக்கல்.லி பயனர்கள் இன்று தங்கள் போனில் மியூசிக்கல்.லி செயலி ஓபன் செய்த பொது அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் போன் இல் மியூசிக்கல்.லி ஆப் இன்று டிக் டாக் என்று மாற்றப்பட்டிருக்கும்.

|
வருகிறது டிக்டாக் :

மியூசிக்கல்.லி பயனர்கள் இன்று தங்கள் போனில் மியூசிக்கல்.லி செயலி ஓபன் செய்த பொது அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் போன் இல் மியூசிக்கல்.லி ஆப் இன்று டிக் டாக் என்று மாற்றப்பட்டிருக்கும். சந்தேகமாக இருந்தால் நீங்களே உங்கள் ம்யூசிக்கல்.லி ஆப் ஐ ஓபன் செய்து பாருங்கள். உண்மை என்னவென்று புரியும்.

முகபுத்தகத்தை தொடர்ந்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமாக இருக்கும் ஆப் மியூசிக்கல்.லி தான். இந்த மியூசிக்கல்.லி செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அதன் பயனர்கள் அனைவரும் டிக்டாக் என்ற சேவைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். டிக்டாக் செயலியும் மியூசிக்கல்.லி போன்றே சிறிய 15 வினாடி அளவிலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலி தான்.

மியூசிக்கல்.லி செயலி மூடப்படும்

மியூசிக்கல்.லி செயலி மூடப்படும்

கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவை சேர்ந்த இன்டர்நெட் நிறுவனமான பைட் டான்ஸ், மியூசிக்கல்.லி செயலியை கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன்னர் மியூசிக்கல்.லி செயலி மூடப்படும் என்ற செய்தியின் படி மியூசிக்கல்.லி செயலியின் பயனர்கள் வருத்தத்திலிருந்தனர். இப்பொழுது திடீர் மாற்றமாக மியூசிக்கல்.லி தரவுகள் மற்றும் பின்தொடர்வோர் அனைவரையும் முன்னறிவிப்பு எதுவுமின்றி "டிக்டாக்" செயலிக்கு மாற்றியது அதிக மகிழ்ச்சி மற்றும் அதிர்ச்சியைப் பயனர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

 புதிய டிக்டாக் செயலி

புதிய டிக்டாக் செயலி

மியூசிக்கல்.லி செயலி இது வரை 50 கோடிக்கும் மேல் பயனர்களை தன வசம் வைத்துள்ளது. மியூசிக்கல்.லி பயனர்கள் தங்களது முக பாவனைகளை, நடிப்பு திறமைகளையும் வீடியோவாக பதிவு செய்து, அவற்றின் பின்னணியில் பாடல்கள் அல்லது ஆடியோ போன்றவற்றை சேர்த்து மியூசிக்கல்.லி வழி பகிர்ந்து கொள்ள இந்தச் செயலி பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் புதிய டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய டிக்டாக் செயலி ஜெஸ்ட்யூர் ஃபில்ட்டர்

புதிய டிக்டாக் செயலி ஜெஸ்ட்யூர் ஃபில்ட்டர்

இந்த புதிய டிக்டாக் செயலி இல் ரியாக்ஷன் என்னும் சேவை பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. தங்களது நண்பர்களின் பதிவுகளுக்கு தங்களது கருத்துக்களை சுவாரசியமான ஜெஸ்ட்யூர் ஃபில்ட்டர் மூலம் இனி கருது தெரிவிக்க முடியும். இத்துடன் ஃபன் ஹவுஸ் மிரர் கேமரா எஃபெக்ட்கள், கிரீன்ஸ்கிரீன் போன்ற இதர எஃபெக்ட் சேவைகளை வழங்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிக்டாக் அப்டேட்

டிக்டாக் அப்டேட்

ஆன்ட்ராய்டு பயனர்கள் இந்த புதிய டிக்டாக் செயலி டவுன்லோடு செய்ய விரும்புவோர் கூகுள் பிளே ஸ்டோர் சென்று அதை டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஆப்பிள் பயனர்கள், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யலாம். ஏற்கனவே மியூசிக்கல்.லி செயலியை பயன்படுத்துவோருக்கு மட்டுமே ஏற்கனவே இந்தச் செயலி டிக்டாக் என அப்டேட் செய்யப்பட்டு இருக்கும். காலையில் உங்களுக்கு அதிர்ச்சியையும் அளித்திருக்கும்.
இனி டிக்டாக் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ.

Best Mobiles in India

English summary
The popular Musical.ly app has been rebranded as TikTok : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X