அழிக்கவே முடியாத xHelper ஸ்மார்ட்போன் வைரஸ்! டெலீட் செய்தாலும் பயனில்லை!

|

xHelper என்றழைக்கப்படும் டார்ஜென் வகை மால்வேர் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த xHelper தீம்பொருள் அளிக்கமுடியாத புது வகை வைரஸ் என்பது தான் ஆய்வாளர்களின் தற்போதைய கவலையாய் உள்ளது. போனில் ஃபேக்டரி ரீசெட் செய்தாலும் இந்த மால்வேர் பொருள் அழிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

45000 ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு

45000 ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு

xHelper என்றழைக்கப்படும் டார்ஜென் வகை மால்வேர் வைரஸ், இதுவரை சுமார் 45,000திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீம்பொருளை பயனர்கள் அறிந்து டெலீட் செய்ய முயன்றாலும் இவை அழிவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிமென்டெக் நிறுவனத்தின் கணிப்பு

சிமென்டெக் நிறுவனத்தின் கணிப்பு

சிமென்டெக் (Symantec) என்ற ஆண்ட்ராய்டு பாதுகாப்பு நிறுவனத்தின் கணிப்புப்படி இந்த xHelper தீம்பொருள் தினமும் சுமார் 131 ஸ்மார்ட்போன்களை தாக்குவதாகவும், மாதத்திற்கு சுமார் 2400 ஸ்மார்ட்போன்கள் இந்த தீம்பொருளினால் தாக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு நன்மைகள் என்னவென்று தெரியுமா?பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு நன்மைகள் என்னவென்று தெரியுமா?

xHelper தீம்பொருள்

xHelper தீம்பொருள்

இந்த xHelper தீம்பொருள் உங்கள் ஸ்மார்ட்போனில் பாப் அப் விளம்பரங்களைக் காண்பிப்பதுடன், ஸ்பேம் நோட்டிபிகேஷன்களையும் உங்கள் ஸ்மார்ட்போனிற்கு அனுப்புகிறது. அதுமட்டுமின்றி சில புதிய செயலிகளைக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்வதற்கும் வழிவகுக்கிறது.

மின்சார கட்டணம் குறையும்: வருகிறது ப்ரீபெய்ட் மீட்டர்: முழுத் தவகவல்கள் இதோ.!மின்சார கட்டணம் குறையும்: வருகிறது ப்ரீபெய்ட் மீட்டர்: முழுத் தவகவல்கள் இதோ.!

அனுமதி இல்லாத பாப் அப் விளம்பரங்கள்

அனுமதி இல்லாத பாப் அப் விளம்பரங்கள்

இப்படி இந்த xHelper தீம்பொருளினால் டவுன்லோட் செய்யப்படும் செயலிகளுக்கும், ஸ்மார்ட்போனில் காண்பிக்கப்படும் பாப் அப் விளம்பரங்களுக்கும் ஒரு தொகை இதன் உரிமையாலுற்கு சென்றடைகிறது என்பதே உண்மை. இந்த xHelper தீம்பொருள் பயனர்களின் தகவல்களை இன்னும் திருட துவங்கவில்லை என்று சிமென்டெக் மற்றும் மால்வேர்பைட்டுஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

வங்கி பாஸ்வோர்டுகளை திருட வாய்ப்பு உள்ளதா?

வங்கி பாஸ்வோர்டுகளை திருட வாய்ப்பு உள்ளதா?

இருப்பினும் டெலீட் செய்தபின்னும் தானாக இன்ஸ்டால் ஆக்கிக்கொள்ளும் இந்த xHelper தீம்பொருளின் மீது சந்தேகம் உள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த வகை மால்வேர்களால் பயனர்களின் வங்கி பாஸ்வோர்டு மற்றும் மற்ற தகவல்களையும் திருட முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
The Indestructible xHelper Smartphone Virus Found Deleting Is Useless : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X