சேட்டிங் ஆப்ஸ் தரும் வருமானம். டெங்கி (Tengi) ஆப்ஸ் குறித்த ஆச்சரியமான தகவல்கள்
கரும்பு தின்ன கூலி என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த பழமொழி ஆண்ட்ராய்டு போன் ஆப்ஸ்களுக்கு பொருந்தும் என்று நீங்கள் கனவு கண்டிருக்கின்றீர்களா? ஆம், நீங்கள் எத்தனையோ சேட்டிங் ஆப்ஸ்களை பயன்படுத்தி இருப்பீர்கள்.

ஆனால் எந்த ஆப்ஸாவது உங்களது சேட்டிங்கிற்கு பணம் கொடுத்துள்ளதா? இது என்ன
கிறுக்குத்தனமான கேள்வி என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதிசயம் ஆனால் உண்மை. ஒரு ஆப், நீங்கள் சேட்டிங் செய்தால் பணம் கொடுக்கின்றது. அதுவும் லட்சக்கணக்கில். இதுகுறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்
நிரந்தரமாக வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்தால் சாட் டேட்டா என்னவாகும்.?
'டெங்கி' (Tengi) என்ற சேட்டிங் ஆப் குறித்து கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இதுவரை கேள்விப்படவில்லை என்றால் இனிமேல் கேள்விப்படுங்கள். ஏனெனில் இதில் சேட்டிங் செய்தால்தான் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

இந்த ஆப்ஸ் தனக்கு கிடைக்கும் விளம்பர வருமானத்தின் ஒரு பகுதியை சேட்டிங் செய்யும் நபருக்கு ஒவ்வொரு நாளும் கிடைக்கும் வாய்ப்பை செய்கிறது. அதிகபட்சமாக ஒருவருக்கு ரூ.3.9 லட்சம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்த வருமானத்தை எப்படி வெல்வது என்பதை தற்போது பார்ப்போமா?
1. முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது iOS போனில் டெங்கி சேட்டிங் ஆப்-ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும்.
2. பின்னர் டெங்கியில் உங்களுக்கு என பிரத்யேகமான ஒரு கணக்கு தொடங்கி அதன் மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கும் மெசேஜ்கள் அனுப்புங்கள்

3. நீங்கள் டெங்கி ஆப்-ஐ பயன்படுத்துவதற்கும் உங்கள் நண்பர்கள் உங்கள் மூலம் டெங்கியில் கணக்கு தொடங்குவதற்கும் உங்களுக்கு புள்ளிகள் கிடைக்கும். உங்கள் போன் காண்டாக்டில் உள்ள ஒவ்வொருவரும் புதிய கணக்கு தொடங்க உங்களுக்கு 16 புள்ளிகளும், ஒவ்வொரு நாளும் டெங்கி ஆப்-ஐ பயன்படுத்துவதற்கு ஒரு புள்ளியும், ஒவ்வொரு மணி நேரம் பயன்படுத்துவதற்கு 12 புள்ளிகளும் என பல புள்ளிகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
4. இந்த புள்ளிகளின் அடிப்படையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் குலுக்கலில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்படுவர்.
5. குலுக்கலில் வெற்றி பெறுபவர்கள் அதிகபட்சமாக ரூ.3,90,000 மற்றும் குறைந்தபட்சமாக ரூ.450ம் பெற வாய்ப்பு உண்டு.

ஒவ்வொரு வாரமும் குலுக்கல் உண்டு என்பதால் நீங்கள் உங்கள் கணக்கில் அதிக புள்ளிகள் எடுக்க எடுக்க குலுக்கலில் பங்கு பெறும் வாய்ப்பு உண்டு.
இந்த டெங்கி சேட்டிங் ஆப்ஸ் மூலம் டெக்ஸ்ட் மெசேஜ்கள், புகைப்படம், வீடியோ, வாய்ஸ் மெசேஜ், ஆகியவற்றை அனுப்பலாம். அதுமட்டுமின்றி உங்களுடைய பேஸ்புக் நண்பர்களையும் இதில் இணைத்து கொள்ளும் வசதியும் உண்டு.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications